செல்போன் - சில சுவாரசியங்கள் ..!

            
         இன்று நம்முடைய அடிப்படை தேவை பொருளான செல்போன் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தொகுத்துக் கொடுத்துள்ளேன். படியுங்கள்..!
 
குறுஞ்செய்தி :பிலிப்பைன்ஸ் நாடுதான் உலகிலேயே அதிக SMS களை அனுப்புபவர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. இங்குள்ளவர்களால் ஒவ்வொருநாளும் 14கோடி SMSகள் அனுப்பபடுகின்றன! ஆரம்பத்தில் SMS சேவையானது இலவசமாகவே இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமானவுடன் கட்டணங்கள் நிர்ணயித்துவிட்டார்கள்.
 
SMSல் 160 உருக்கள்: 1985ல், 45 வயதுகள் மதிக்கத்தக்க ஆய்வாளரான பிரீதேல்ம் ஹிலெப்ரண்ட் தான் இந்த SMS களுக்கான எழுத்துருக்களின் அளவுகளை நிர்ணயித்தவர். ஒவ்வொரு மெசேஜும் குறிப்பிட்ட அளவுடைய எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் தொழில்நுட்பரீதியான பிரச்சனைகள் ஏற்படுமெனவும் தனது ஆய்வின்மூலம் விளக்கியவரும் இவரே!
 
உலகின் முதல் மியூசிக் போன்: சீமென்ஸ் நிறுவனத்தால் 2001ல் வெளியிடப்பட்ட SL45 தான் உலகின் முதல் மியூசிக் போன் என்ற அந்தஸ்த்தை பெறுகிறது. அப்பொழுதே இந்தபோனானது MP3 தரவுகளையும் சப்போர்ட் செய்யும்வகையில் இருந்தது.
 
 
 
உலகின் வலிமையான போன்: சொநிம் நிறுவனத்தின் XP3300 போன்தான் உலகிலேயே வலிமையான போன் என்ற கின்னஸ் சாதனையே புரிந்துள்ளது. 84அடி உயரத்திலிருந்து கீழே எறிந்தாலும் இந்தபோனானது உடையாதாம்.
 
உலகின் மிக விலையுயர்ந்த போன்: ஸ்டோர்ட் ஹுக்ஹெஸ் ஐபோன் 4 தான் உலகிலேயே விலையுயர்ந்த போன் என்ற பெருமையை பெறுகிறது. இதன் விலையானது இந்தியமதிப்பில் சுமார் ரூ.45 கோடிகளாகும். இதுவொரு வைரம் பதித்த போனாகும்.
 
முதன்முதலில் மொபைல் வழியாக அனுப்பப்பட்ட போட்டோ: 1997ல் ஜூன் மாதம் 11ம் நாள், பிலிப் கான் என்பரால் தான் முதன்முதலாக மொபைல் வழியாக போட்டோவானது அனுப்பப்பட்டது. இவர்தான் முதல் கேமரா போனை உருவாக்கியவர் என்பது கூடுதல் தகவல்.
 
அதிகம் விற்கப்பட்ட போன்: யாராலும் எளிதில் மறக்கமுடியாத நோக்கியா 1100 போன் தான் உலகிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட போன் என்ற பெருமையை பெறுகிறது. இந்த போனானது சுமார் 25 கோடி என்ற அளவில் விற்கபட்டதாம். 2003ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதாரண போன் 2009 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு விற்பனையில் சாதனை படைத்ததென்றால் அது மிகையாகாது.
 
ஜேம்ஸ் பாண்ட் போன்: ஜேம்ஸ் பாண்ட் 007 முதன்முதலில் பயன்படுத்திய போன் எதுதெரியுமா?. அந்த பெருமையை பெறுவது எரிக்சன் JB988 போனாகும். இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கானர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அப்பொழுதே இருந்ததாம்.
 
நோக்கியா விற்ற பேப்பர்கள்: நோக்கியா நிறுவனம் தொடங்கப்பட்டது 1865ல். அப்பொழுது இந்நிறுவனத்தின் முதன்மை தொழிலானது பேப்பர்கள் உற்பத்திசெய்வதாகும். சில வருடங்களுக்கு பிறகு தனது தொழிலை மாற்றியது இந்நிறுவனம். அதாவது ரப்பர் வகை பொருள்கள் தயாரிப்பது, வயர்கள் தயாரிப்பது மற்றும் பின்லாந்து நாட்டு ராணுவத்திற்கு தகவல்கள் பரிமாற்றக்கருவிகளை விற்றது. 1980களில் தான் நோக்கியா நிறுவனம் மொபைல் போன்கள் தயாரிப்பில் இறங்கியது.
 
அமெரிக்கா மற்றும் அதுசார்ந்த நாடுகள் லேன்ட்லைன் போன்களை விட, செல்போன்களையே அதிகம் பயன்படுத்துகின்றன.
 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் தொகுப்பு நண்பரே...

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...

Unknown said...

Good information