இந்தியாவில் மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்து ...!

வணக்கம் நண்பர்களே ,
 
சமீபத்தில் இந்திய தொழில் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ( TRAI ) கொண்டு வந்த புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து நாடுமுழுவதும் மொபைல்போன் சேவைக்கான ரோமிங் கட்டணம் விரைவில் ரத்தாகிறது.இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரே நம்பரை ரோமிங் கட்டணங்கள் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள முடியும்.


கடந்த ஆண்டுகளில் அனைத்து மொபைல் கம்பெனிகளும் மொபைல்களில் ரோமிங் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தற்போது தெரிவித்து இருக்கிறார். இந்த புதிய மாற்றங்கள் வரும் மாதத்தில் நடைமுறைப்படுத்த படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு மாநிலத்தில் பயன்படுத்த வேண்டிய சிம் கார்டை வேறொரு மாநிலத்தில் பயன்படுத்தினால் வரும் அழைப்புகளுக்கும் ( Incoming Call ) நாம் கட்டணம் செலுத்த வேண்டும் . இந்த கட்டணத்திற்கு பெயர் தான் ரோமிங் கட்டணம் .

தற்போது அறிவிக்க பட்டுள்ள கொள்கையில் இந்த ரோமிங் கட்டணம் விலக்கு அளிக்க பட்டுள்ளது , இது மட்டுமல்லாமல் 2020-ஆம் ஆண்டுக்குள் 100% சதவிகிதம் அகன்ற அலைவரிசை வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த புதிய தொலைதொடர்பு கொள்ளகையின் முக்கியத்துவம்.

மொபைல் கட்டண உயர்வு பற்றியே கேட்டு கொண்டிருந்த மக்களுக்கு, இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவது சம்ந்தமான இந்த செய்தி நிச்சயம் சந்தோஷத்தை அளிப்பதாக இருக்கும்.

No comments: