ரூ.10,000 விலைக்குள் சிறந்த டாப்-5 டேப்லட்கள்...!

நண்பர்களே சமீபகாலமாக டேப்லட்கள் பயன்பாடு இந்தியாவில் அதிகமாகி வருகிறது. எனவே குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு இந்த பதிவு. ரூ.10,000 க்கும் குறைந்த விலையில் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் டேப்லட்டினை வாங்க வேண்டுமா ? இங்கு உள்ள பட்டியலில் டாப்-5 டேப்லட்கள் உள்ளன. இந்த டேப்லேட்கள் அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர் களிலும் கிடைக்கும்.

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்


மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த டேப்லட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் வழங்கும். இதன் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த டேப்லட்டின் மூலம் போதுமான அளவு துல்லியத்தினை பெறலாம். 3ஜி, வைபை போன்ற தொழில் நுட்பங்களுக்கு இதன் லியான் 2,800 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும். மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்லட்டின் விலையும் மைக்ரோ தான். இந்த டேப்லட் ரூ.6,499 விலையில் கிடைக்கும். 

மெர்குரி எம் டேப்


மெர்குரி எம் டேப் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 சிப் பிராசஸர் வசதியினை கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இதன் 7 இஞ்ச் டேப்லட்டின் மூலம் போதுமான துல்லியத்துடன் தகவ்லகளை தெளிவாக பார்க்கலாம். இந்த மெர்குரி எம் டேப் டேப்லட்டினை ரூ.8,499 விலையில் பெறலாம்.

பீட்டல் மேஜிக்-II
 
பீட்டல் மேஜிக்-II டேப்லட் தொழில் நுட்பத்திற்கும், பட்ஜெட் விலைக்கும் மிக சிறந்த ஒன்று. இந்த டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியுடன் ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரோயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். பீட்டல் மேஜிக்-II டேப்லட் டியூவல் கேமரா வசதியினையும் வழங்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கொண்ட மெயின் கேமராவினையும், 2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் இந்த டேப்லட்டில் பெறலாம். லியான் 2,200 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை போன்ற தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த பீட்டல் மேஜிக் டேப்லட்டின் விலையை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த டேப்லட் ரூ.10,000 விலையில் கிடைக்கும். 

ஐபெர்ரி


ஐபெர்ரி பிடி-07-ஐ  டேப்லட் 7 இஞ்ச் டிஎப்டி தொழில் நுட்ப திரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும். ஆன்ட்ராய்டு வி2.3.4 ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த டேப்லட், ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8.1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணையுடன் சிறப்பாக செயல்படும். 376 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 0.3 விஜிஏ கேமரா வசதியினை வழங்கும். இதில் உள்ள சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த எல்ஐ-அயான் 3,600 எம்ஏஎச் பேட்டரியின் துணையை கொண்டது. 3ஜி, வைபை வசதி, சோஷியல் அப்ளிக்கேஷன் போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த டேப்லட்டில் பயன்படுத்தலாம். இந்த ஐபெர்ரி பிடி-07ஐ டேப்லட் ரூ.7,999 விலையில் கிடைக்கும்.

வீடீ-டி10
 
வீடீ-டி10 டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினால் சிறப்பான இயக்கத்தினை வழங்கும். 3ஜி மற்றும் வைபை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த டேப்லட்டில் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பெறலாம். இதன் எக்ஸ்டர்னல் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். வீடீ டி-10 டேப்லட் ரூ.6,999 விலையில் கிடைக்கும்.   

இவற்றை தவிரவும் இன்னும் பல டேப்லேட்கள் கிடைகின்றன. அவற்றை இன்னொரு பதிவில்  பார்போம்..
 

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் விலை குறைகிறது...?

நண்பர்களே வணக்கம்,

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடபட்டுள்ளது என்ற செய்தியை கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக உள்ளதாக நிறைய வாடிக்கையாளர்கள் மனதில் உதித்து இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்குவதற்கு சில ஆன்லைன் ஸ்டோர்கள் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. சாம்சங் நிறுவனத்தின் இ-ஸ்டோரில், ரூ.42,500 விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.42,500 விலையில் வாங்கலாம். அதுவும் ரூ.2,299 மதிப்புள்ள புளூடூத் ஒன்று இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுடன் இலவசமாக பெறலாம்.

ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை ரூ.38,900 விலையில் பெறலாம். இதே விலையில் பதிப்ரைஸ்.காம் வலைத்தளத்திலும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை பெறலாம் என்றும் அந்த தளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ரீட்டெய்லர்ஸ் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு வாரம் பொருத்திருந்து இந்த ஸ்மார்ட்போனை வங்குவது சிறந்தது என்று கூறலாம்.
இந்தியாவில் மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்து ...!

வணக்கம் நண்பர்களே ,
 
சமீபத்தில் இந்திய தொழில் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ( TRAI ) கொண்டு வந்த புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து நாடுமுழுவதும் மொபைல்போன் சேவைக்கான ரோமிங் கட்டணம் விரைவில் ரத்தாகிறது.இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரே நம்பரை ரோமிங் கட்டணங்கள் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள முடியும்.


கடந்த ஆண்டுகளில் அனைத்து மொபைல் கம்பெனிகளும் மொபைல்களில் ரோமிங் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தற்போது தெரிவித்து இருக்கிறார். இந்த புதிய மாற்றங்கள் வரும் மாதத்தில் நடைமுறைப்படுத்த படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு மாநிலத்தில் பயன்படுத்த வேண்டிய சிம் கார்டை வேறொரு மாநிலத்தில் பயன்படுத்தினால் வரும் அழைப்புகளுக்கும் ( Incoming Call ) நாம் கட்டணம் செலுத்த வேண்டும் . இந்த கட்டணத்திற்கு பெயர் தான் ரோமிங் கட்டணம் .

தற்போது அறிவிக்க பட்டுள்ள கொள்கையில் இந்த ரோமிங் கட்டணம் விலக்கு அளிக்க பட்டுள்ளது , இது மட்டுமல்லாமல் 2020-ஆம் ஆண்டுக்குள் 100% சதவிகிதம் அகன்ற அலைவரிசை வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த புதிய தொலைதொடர்பு கொள்ளகையின் முக்கியத்துவம்.

மொபைல் கட்டண உயர்வு பற்றியே கேட்டு கொண்டிருந்த மக்களுக்கு, இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவது சம்ந்தமான இந்த செய்தி நிச்சயம் சந்தோஷத்தை அளிப்பதாக இருக்கும்.