சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கேலக்ஸி டேப்லட் - 2 விற்பனை துவக்கம்

வணக்கம் நண்பர்களே ,

காலம் மாறிக்கொண்டே வருவது போலவே மக்களின் ஆசைகளும் மாறிக்கொண்டே வருகின்றன . விதவிதமான மொபைல் போன்களை பயன்படுத்தி வந்த நம் மக்கள் இப்போது அடுத்த கட்டமாக டேப்லட்டை விரும்ப ஆரம்பித்துவிட்டனர் .

அதற்கேற்ப பல முன்னணி நிறுவனங்களும் பல மாடல்களில் டேப்லட்டை அறிமுகபடுத்தி வருகின்றன.எலக்ட்ரானிக் சாதன உலகில் அதிக சாதனைகளை படைத்து வரும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப்-2 என்ற டேப்லட்டை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.

உலகெங்கும் சக்கை போடு போட்டு வரும் இந்த டேப்லட்டை இப்போது சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் ப்ரீ-புக்கிங்கில் பெறலாம். ப்ரீ-புக்கிங் செய்யும் அளவிற்கு இதில் உள்ள முக்கிய தொழில் நுட்ப அம்சங்களையும் பார்ககலாம்.ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆரப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தின் முதல் டேப்லட், கேலக்ஸி டேப்-2 என்ற பெருமையையும் தட்டி செல்கிறது இந்த டேப்லட். ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் இந்த டேப்லட் 7 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது.

இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும்.


344 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட் 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொடுக்கும். இதன் மெமரி வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி கார்டும் சப்போர்ட் செய்யும். இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட்டை இந்தியாவில் பெற இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டை ஆன்லைனில் ரூ.23,250 விலைக்கு ப்ரீ-புக்கிங் செய்யலாம். இ-மெயில் ஐடி, மொபைல் எண், பெயர், முகவரி போன்ற விவரத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட்டினை ப்ரீ-புக்கிங் செய்யலாம்.

விரைவில் உயர்கிறது மொபைல்போன் கட்டணங்கள் ..!

வணக்கம் நண்பர்களே,
 
கடந்த சில வருடங்களாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் நடந்த போட்டியின் காரணமாக தொலைபேசி கட்டணங்கள் வெகுவாக குறைத்திருந்தன .

ஆனால் சமீபத்தில் அலைக்கற்றையின் குறைந்தபட்ச விலையை உயர்த்த மத்திய தொலைதொடர்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் மொபைல் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆண்டு அரசு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நிறைய கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதை தொடர்ந்து மீண்டும் தொலைபேசி கட்டணம் உயரும் என்று இந்திய தொலை தொடர்பு ஆணையம் (TRAI) கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லி, சென்னை பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில், மொபைல் கட்டணங்கள் 90 பைசாவாக உயர்கிறது. நாடு முழுவதுமாக 20-பைசாவில் இருந்து 34 பைசா வரை கட்டணம் உயரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


அலை கற்றைகளின் கட்டணம் குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3,622 கோடியாக உயர்த்துவதாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனால் தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளன. இதனால் தொலை தொடர்பு சேவையின் கட்டணம், மாநகர பகுதிகளில் நிமிடத்திற்கு 90 பையா உயரும் என்று தெரிகிறது.

மான்ஸ்டர் வேலை வாய்ப்பு தளம் இப்போது iPhone / iPad க்கு வந்துவிட்டது

நண்பர்களுக்கு வணக்கம்,

ஆன்லைன் வலைத்தளமான மான்ஸ்டர் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேடிற்கான மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி உள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு மான்ஸ்டர் நிறுவனம் சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் படிப்பிற்கு தகுந்த வேலையை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.


இந்த மான்ஸ்டர் நிறுவனம், எலக்ட்ரானிக் சாதன உலகில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவதற்கு புதிய மொபைல் அப்ளிக்கேஷனை வழங்குவது மிக சிறப்பான விஷயம்.மான்ஸ்டரின் இந்த புதிய அப்ளிக்கேஷனை, ஆப்பிள் ஸ்டோர் மூலம் எளிதாக டவுன்லோட் செய்யலாம். இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம் மான்ஸ்டரில் இனி எளிதாக வேலை சம்மந்தமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வசதியை ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சவுகரியமான ஒன்று.

மான்ஸ்டரிடம் இருந்து வரும் வேலை பற்றிய விவரங்களை இ-மெயிலை திறந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.

ஆனால் இந்த புதிய மான்ஸ்டர் அப்ளிக்கேஷன் மூலம் வேலை சம்மந்தமாக எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து இ-மெயில்கள் வந்துள்ளது என்பது போன்ற தகவல்களை மொபைல்களிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த மான்ஸ்டரின் புதிய மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் பெறலாம்.

இந்தியாவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ் - 3

நண்பர்களுக்கு வணக்கம்,

இந்தியாவில் உயந்த ரக செல்போன் விரும்பிகளின் வெகு நாள் ஆசை இப்போது நிறைவேற போகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் சக்கை போடு போட்டது. இதை தொடர்ந்து பல நிறுவங்கள் புதிய தொழில் நுட்பம கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆரம்பித்தது.

அதன் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இப்போது ஆப்பிளின் அடுத்த வாரிசான ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அறிமுகமாக உள்ளது.இதற்க்கு போட்டியாக சாம்சங் அறிவித்த மாடல் தான் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 .

எனவே தான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த மாதம் 31-ஆம் தேதி இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வருகை தரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

4.8 இஞ்ச் திரை வசதியையும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்ட இந்த மாடல் பற்றி அதிக விபரங்களை இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இது போல் இன்னும் பல உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று பல பேர் ஆவலுடன் இருக்கின்றனர். அந்த வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில நாட்களில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்ற இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று தான்.

முன்பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் இங்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்

ரூ.10,000 விலையில் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்...!

நண்பர்களே வணக்கம், ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றவுடன் நம்மில் பல பேர் சொல்லுவது அதன் விலையை தான். இந்த விலைக்குள் ஸ்மார்ட்போன் வேண்டும் என்கிறார்கள். அப்படி விலையை வைத்து ஸ்மார்ட்போனை எடுத்தாலும் அந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதா என்று தெரிந்து கொள்ள இதோ இங்கே ஓர் பட்டியல். இதில் ரூ.10,000 விலைக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் எது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் (பி5512) ஸ்மார்ட்போன் முதலில் உள்ளது என்று சொல்லலாம். கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டியூவல் சிம் நெட்வொர்கிற்கும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும்.

இதில் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் எளிதாக இயங்க 832 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது.

கேலக்ஸி ப்ரோ டியோஸ் ஸ்மார்ட்போன் 2.6 இஞ்ச் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இதில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான புகைப்படத்தினையும் எளிதாக கொடுக்கும்.

இது மட்டுமல்லாமல் இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டது.

இந்த கேலக்ஸி ப்ரோ டியோஸில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் 1,350 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் நீடித்து உழைக்கும் சிறப்பான ஆற்றலை பெற முடியும். மேலும் இந்த பேட்டரி 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,200 விலையில் பெற முடியும்.

அடுத்து மோட்டோரோலா ஃபையர் எக்ஸ்டி ஸ்மார்ட்போனும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை வழங்கும். வைபை, புளூடூத் மற்றும் எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனையும் கவர்ச்சிகரமான விலையில் பெறலாம்.

இந்த மோட்டோரோலா ஃபையர் ஸ்மார்ட்போனை ரூ.9,400 விலையில் பெறலாம்.

அடுத்து ப்ளாக் பெர்ரி : இந்த பிளாக் பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போன் 1.2 தடிமன் கொண்டது. கையாளுவதற்கு எளிதாக இருக்கும் இந்த கர்வ் ஸ்மார்ட்போன், 2.44 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரையினை கொண்டதால், 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
பிளாக்பெர்ரி 7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 600 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக வழங்கும். இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000.

அடுத்ததாக யூசர் ஃப்ரென்ட்லி என்று பெயரெடுத்த நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போனையும் மேல் கூறப்பட்டுள்ள விலையில் எளிதாக பெற முடியும். சிம்பையன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போனில், 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்-11 பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் டிஎப்டி திரை தொழில் நுட்பத்துடன் 640 X 360 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். புகைப்படம், வீடியோ பற்றிய கவலை இந்த ஸ்மார்ட்போனை பொருத்த வரையில் தேவையே இல்லை.

இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ்,
வைபை போன்ற தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த நோக்கியா-500 ஸ்மார்ட்போன் ரூ.9,500 விலையில் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் ஏ-50 நின்ஜா ஸ்மார்ட்போனும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிக முக்கியமாக பேசப்படுகிற தொழில் நுட்பம் இதில் உள்ள எய்ஷா என்ற வாய்ஸ் கைடடு தொழில் நுட்பம்.

இந்த தொழில் நுட்பம், ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்பனில் உள்ள சிரி அப்ளிக்கேஷன் போல என்று கூறலாம்.

இதன் 3.1 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக தகவல்களை பார்க்கலாம்.


ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜ்ரபிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,500 விலையில் பெறலாம்.

இத்தனை மாடல்களில் செல்போன் இருந்தாலும் நீங்கள் வாங்கும் சமயத்தில் உங்கள் தேவை, பயன்பாடு ,அவசியம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு நல்ல மாடல் செல்போன் வாங்கவும்

இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா -பியூர்வியூ-808 ஸ்மார்ட் போன்

வணக்கம் நண்பர்களே, உலகெங்கும் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு இருக்கும் 41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை இந்த மாதம் இந்தியாவில் வெளியிட உள்ளது நோக்கியா நிறுவனம்.

உயர்ந்த கேமராவின் மூலம் அனைவரையும் மூச்சிறைக்க செய்த நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகுமா? என்று கேள்வியோடு காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விடை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இந்திய மொபைல் மார்கெட்டில் கால் பதிக்க இருக்கிறது.


சமீபத்தில் தான் ஆஷா-202 மற்றும் நோக்கியா-302 மொபைல்களை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் இதை தொடர்ந்து, நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் களமிறக்க உள்ளது.

சிம்பையன் பெல் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்-11 பிராசஸரையும் வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் திரையினை கொண்டது. இதன் திரை அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும்.

இந்த பிரம்மாண்டமான திரை கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளதால், திரைக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்கும். இதில் 41 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது.


இதன் 1,400 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்தியாவில் இந்த மாதம் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்ற நோக்கியா வட்டார தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலையில் வெளியாகும் என்ற தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பாப்போம்.