புதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம்வணக்கம் நண்பர்களே, இந்தியாவில் ஆப்பிளின் ஐபேடுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆப்பிள் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் இதுவரை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. கண்டிப்பாக ஆப்பிளின் இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


இன்று ( ஏப்ரல் 27 ) முதல் இந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் அதன் விலையையும் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதன்படி 16ஜிபி அளவுள்ள புதிய ஐபேட் ரூ.30500க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் 36500க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.42500க்கு விற்கப்படும்.

அடுத்ததாக வைபை+ மற்றும் 4ஜி வசதியுடன் வரும் 16ஜிபி ஐபேட் ரூ.38900க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் ரூ.44900க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.50900க்கு விற்கப்படும்.


இந்த புதிய ஐபேடின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இது புதிய ரெட்டினா டிஸ்ப்ளே, க்வட் கோர் க்ராபிக்சுடன் கூடிய ஆப்பிளின் புதிய எ5எக்ஸ் சிப், 5 மெகா பிக்சல் ஐசைட் கேமரா மற்றும் 1080 எச்டி வீடியோ வசதி மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் போன்றவற்றைக் கொண்டு வருகிறது.

இந்த புதிய ஐபேட் இந்தியாவில் வெற்றிக் கனியைப் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் .

புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் Curve - 9220 - இந்தியாவில் அறிமுகம்

நண்பர்களே வணக்கம் , செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வரும் பிளாக்பெர்ரி நிறுவனம். இப்போது கர்வ்-9220 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு வெளியான பிளாக்பெர்ரி நிறுவனத்தின் 8520 ஸ்மார்ட்போன் மாடலையும்விட, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கொண்டது.

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன், பிளாக்பெர்ரி-7.1 ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனையும்விட 1.2 மில்லி மீட்டர் மெலிதான தோற்றம் கொண்டது பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன். இதனால் கூடுதல் கவர்ச்சிகரமான தோற்றத்தினால் பார்ப்பவர்களின் கண்களை எளிதாக கவர்ந்துவிடும்.


பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன் 2.44 இஞ்ச் திரை வசதியை வழங்கும். பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1450 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் அதிக ஆற்றலை வழங்கும். இதனால் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 432 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

இதே பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1150 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. இதில் 4 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் மற்றும் 408 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.


இதனால் பேட்டரியை பொருத்த வரையில் பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்போனையும், பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போனில் கூடுதல் பேட்டரி பேக்கப் வசதியை பெற முடியும்.

இன்னும் பற்பல வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த மாடல் குறைந்த விலை பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.

மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் விலை Rs.6,500

நண்பர்களே வணக்கம், இந்தியாவில் இப்போது மலிவு விலையில் ஏராளமான ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் வருகின்றன. குறிப்பாக ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் எச்சிஎல் மி டேப்லெட் யு1, சின்க் ஸட்990, ஐபெரி ஆக்சஸ் எஎக்ஸ்௦ போன்ற டேப்லெட்டுகள் ரூ.10000க்கும் குறைவாக விற்கப்படுகின்றன. இவை இந்திய தயாரிப்புகளாகும்.

அந்த வகையில் இந்தியாவில் தயாராயிருக்கும் மைக்ரோமேக்ஸ் பன்புக் என்ற டேப்லெட் பற்றித்தான் இந்த பதிவு. இந்த மைக்ரோமேக்ஸ் பன்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகின்றது.இந்த பன்புக் 1.2 ஜிஹெர்ட்ஸ் எஆர்எம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர் மற்றும் மாலி 400 க்ராபிக்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது மிக வேகமாக இயங்கும். அதே நேரத்தில் வீடியோ கேமையும் இதில் சிறப்பாக விளையாடலாம்.


இந்த டேப்லெட் 480×800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பளிச்சென்று இருக்கிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் டிசி, மினி யுஎஸ்பி, மின் எச்டிஎம்ஐ, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது. அதனால் இதன் 4ஜிபி மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இந்த டேப்லெட்டி்ல 1080பி ப்ளேபேக் உள்ளதால் இதை எச்டி டிவியுடன் எளிதாக இணைக்க முடியும். இதன் 0.3 முகப்பு கேமரா மூலம் அழகான வீடியோ உரையாடல் நடத்த முடியும்.மேலும் மைக்ரோமேக்சின் பல்வேறு அப்ளிகேசன்களை இந்த டே்பலெட் வைத்திருப்பதால் இதில் கல்வி சார்ந்த தகவல்கள், கேம்கள், படங்கள், லைவ் டிவி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க முடியும்.

இதன் விலை ரூ.6499 மட்டுமே. இந்த மைக்ரோமேக்ஸ் டேப்லெட்டுதான் இந்தியாவில் மிகக் குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும்.

நான் வாங்கி விட்டேன் , மிகவும் அருமையாக உள்ளது ..!

( நீங்கள் படத்தில் பார்ப்பது என்னுடைய கையில் உள்ளதது தான் )

செல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு...!

நண்பர்களே வணக்கம், செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை
தவிர்க்கலாம்.

ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.


முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும்
கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.

முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.


பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம். பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.

இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும்.

சச்சின் பயன்படுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ..!

நண்பர்களே வணக்கம், கிரிகெட் கிங் என்று பட்டம் பெற்ற சச்சின் டென்டுல்கர் பயன்படு்த்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பல புதிய புதிய மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வந்தாலும், பெரிய பிரபலங்கள் எந்த மொபைலை பயன்படு்த்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும்.
அந்த அடிப்படையில் சென்சுரி நாயகன் சச்சின் டென்டுல்கர் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் போர்ஷே பி-9981 என்ற ஸ்மார்ட்போனை பயன்படு்த்தும் தகவல் ட்விட்டர் மூலம் வெளியாகி உள்ளது.

ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தின் மூலம் சச்சின் டென்டுல்கர் பயன்படுத்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டிஎப்டி தொடுதிரையில், கியூவர்டி கீப்பேட் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.


16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் 2.8 இஞ்ச் பிக்ஸல் திரையினையும் கொண்டது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி 7.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.

8ஜிபி வரை மெமரி வசதியினை கொடு்க்கும் இந்த ஸ்மார்ட்போனில், 16ஜிபி வரை கூடுதல் மெமரியினை பெற இதன் மைக்ரோஎஸ்டி வசதி சப்போர்ட் செய்கிறது. அதிக வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் அதிகம் தான்.

நோக்கியாவை பின்னுக்கு தள்ளி சாம்சங் சாதனை..!

நண்பர்களே வணக்கம்.
 
14 வருடமாக ஆசியாவில் மொபைல்போன் விற்பனையில் முதல் இடம் வகித்து வந்த நோக்கியா நிறுவனத்தை முந்திவிட்டது சாம்சங் நிறுவனம். இந்த செய்தி நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக தான் இருக்கும்.

ஏனெனில் மொபைல் தயாரிப்புகள் ஆசியாவில் குறைவாக இருந்த காலத்திலேயே வாடிக்கையாளர்களை மொபைல் வாங்க தூண்டும் அளவிற்கு பல புதிய தொழில் நுட்ப சாதனங்களை கொடுத்தது நோக்கியா நிறுவனம்.


ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே 9.2 கோடி மொபைல்போன்களை விற்பனை செய்து சாம்சங், நோக்கியா நிறுவனத்தின் விற்பனையையும் முந்திவிட்டது.

நோக்கியா நிறுவனம் 8.3 கோடி விற்பனையை கொடுத்துள்ளது. இதில் 1.2 கோடி ஸ்மார்ட்போன்களையும், 7.1 குறைந்த விலை மொபைல் மாடல்களையும் விற்பனை செய்துள்ளது. இது நிச்சயம் சாம்சங் நிறுவனம் செய்த பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

சாம்சங் நிறுவனத்தின் பெரிய வெற்றிக்கு கேலக்ஸி மொபைல் மாடல் ஒரு முக்கிய காரணம். சாம்சங் கேலக்ஸி சிரீஸ் ஸ்மார்ட்போன்களில் இந்நிறுவனம் கொடுத்திருக்கும் அகன்ற திரை வசதி மற்றும் பயன்படுத்துவதற்கு அரிய தொழில் நுட்பங்கள், அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறது.

இந்த முறை துவக்க ஆண்டிலேயே சாம்சங் நிறுவனம் பெரிய சாதனையில் அசத்தி இருக்கிறது. எப்போதும் முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும் சாம்சங் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் பலத்த விற்பனை சாதனைக்கு அடுத்ததாக என்ன யுக்தியை கையாளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய மாற்றங்களை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

iPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....!


நம்மால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வாங் ஆகும். இவர் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவர் ஆவார்.

இந்த செய்தியை சீனாவின் சிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த மாணவர் ஆப்பிளின் எந்த மாடல்களை வாங்கினார் என்று அந்த செய்தி குறிப்பிடவில்லை.

வாங் தனது கிட்னியை விற்றதன் மூலம் அவருக்கு 3500 அமெரிக்க டாலர்கள் (175000 ரூபாய்) கிடைத்துள்ளது. அதை வைத்து அவர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடை வாங்கி இருக்கிறார்.


தனது மகனின் கைகளில் ஐபேட் மற்றும் ஐபோன் இருப்பதைப் பார்த்த வாங்கின் அம்மா அவை வந்ததன் காரணத்தை வற்புறுத்தி கேட்டதன் விளைவாக தனது கிட்னியை விற்றதை வாங் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் இதில் ஈடுபட்ட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் ஒரு டாக்டரும் அடக்கம். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.