உலகையே கலக்க வரும் Apple iPad 3 - அறிமுகம்


நண்பர்களுக்கு வணக்கம்,

வாட் நெக்ஸ்ட் ...? ( What Next ..? ) இந்த வார்த்தை நம் வாழ்வோடு இணைந்த வார்த்தை. நம்முடைய எல்லா தேவைகளின் போதும் இந்த வார்த்தை நமக்குள் வரும். வளர்ந்து வரும் தொலை தொடர்பு துறையிலும் இந்த கேள்வி அடிக்கடி எழும். 

அப்படி உலகின் அனைத்து நாட்டு ஆடம்பர செல்போன் பிரியர்கள் ஒரு கம்பனியை பார்த்து இந்த கேள்வியை கடந்த இரண்டு மாதங்களாக கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்து விட்டது. 

என்ன குழப்பமாக இருக்கிறதா ? ஆப்பிள் iPhone மற்றும் iPad பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தினரிடம் கேட்ட கேள்வி தான் வாட் நெக்ஸ்ட் ...? ! அதற்க்கான பதில்...........ஆம், நண்பர்களே .. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான iPad இன்று அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இரண்டு மாடல்களில் iPad இருந்தாலும் புதிதாக வந்திருக்கும் மூன்றாவது மாடலில் எண்ணற்ற புதிய புதிய வசதிகள் உள்ளன. தரமான தொழில் நுட்பங்களை வழங்குவதன் மூலம் எலக்ட்ரானிக் சாதன உலகில் வாடிக்கையாளர்களின் மனதில் தனி இடத்தினை பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம். 

இந்த புதிய மாடலின் சிறப்பு அம்சங்களை இங்கே சென்று பாருங்கள். 


வரும் 15 தேதி மற்றும் 23 தேதிகளில் உலகெங்கும் அறிமுகம் ஆகிறது. இதன் விலை மற்றும் எப்போது கிடைக்கும் என்பதை இங்கு சென்று தெரிந்து கொள்ளலாம். No comments: