நோக்கியா 808 - 41 மெகா பிக்ஸல் கேமராவுடன் அசத்தும் ஸ்மார்ட்போன்

நண்பர்களே வணக்கம்,

        நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்மாக தினந்தோறும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட செல்போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய தொழில் நுட்பங்கள், புதுசா இருந்தா மட்டும் போதாது, அது வசதியாகவும் இருக்கனும், நமக்கு தேவைபடுவதாகவும் இருக்கவேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செல்போன் களை தயாரித்து வரும் நோக்கியா நிறுவனம் ஒரு அட்டகாசமான மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம் நண்பர்களே பல அசத்தலான வசதிகளோட 808 ப்யூர் வியூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது நோக்கியா நிறுவனம்.

தற்போது ஸ்பின் நாட்டில் நடந்து வரும் சர்வதேச மொபைல் கண்காட்சியில் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரம்மிக்க வைக்கும் மொபைல் கண்காட்சியை இன்னும் பிரம்மாண்டப்படுத்தி உள்ளது நோக்கியாவின் ப்யூர் வியூ ஸ்மார்ட்போன். அப்படி உலகின் அத்துனை செல்போன் கம்பெனி களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம் என்ன தெரியுமா ? இந்த ஸ்மார்ட்போனில் 41 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது தான் . இது மொபைல் போன் கேமராவா ? அல்லது கேமராவில் மொபைல் போன் னா ? என்று கேட்க்கும் அளவுக்கு இதன் சிறப்பு உள்ளது.

 

வாடிக்கையாளர்களின் கண்களை அகல விரிய வைக்கும் இந்த 41 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் எவ்வளவு துல்லியமானதாக இருக்கும் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. நோக்கியா-808 ஸ்மார்ட்போனில் விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் கொடுக்கும் புகைப்படத்தினையும் தகவல்களையும் இதன் 4 இஞ்ச் அமோல்டு தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரையில் இன்னும் சிறப்பாக காணலாம். 16 எம் கலர்களுக்கு இந்த திரை வசதி சப்போர்ட் செய்யும்.நோக்கியா- பெல்லி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள திரையின் மூலம் 360 X 640 திரை துல்லயத்தினையும் பெறலாம். 41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு இல்லாமலா இருக்கும் ? கீரல்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.


அதிக தொழில் நுட்பங்களுக்கு சிறந்த முறையில் சப்போர்ட் செய்ய இதில் ஸ்டான்டர்டு (பிவி-4டி) 1,400 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. 2ஜி வசதிக்கு 11 மணி நேரம் வரை டாக் டைமும், 3ஜி வசதி்க்கு 6 மணி நேரம் 50 நிமிடம் வரை டாக் டைமும் கிடைக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது . அதே போல் 2ஜி வசதிக்கு 465 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும், 3ஜி வசதிக்கு 540 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் எளிதாக பெறலாம்.

சர்வதேச மொபைல் கண்காட்சியில் வாடிக்கையாளர்களின் கவணத்தை வெகுவாக ஈர்த்த நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. வருகிற மே மாதம் இந்த நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக நோக்கியா அறிவித்துள்ளது . இதன் மூலம் செல்போன் கம்பெனி களுக்குள் நடந்து வந்து சண்டை இப்போது அடுத்த கட்டமாக கேமரா தயாரிக்கும் கம்பெனி களுக்கும் நடக்க போகிறது என்றே சொல்லலாம் .
 

No comments: