சந்தையை கலக்கும் புதிய டேப்லெட் - விலை ரூ.5,000 மட்டுமே

வணக்கம் நண்பர்களே ,
 
இந்தியாவில் செல்போன் பயன்பாடுகளுக்கு அடுத்தபடியாக டேப்லெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அதை கருத்தில் கொண்டே பல புதிய புதிய கம்பெனிகளும் டேப்லெட் தயாரிப்பில் களம் இறங்கி வருகின்றன.
 
ஏற்கனவே 'BSNL' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேப்லெட்களைபற்றி 'இந்த' பதிவில் பார்த்தோம். மேலும் ஒரு புதிய கம்பெனி தயாரிப்பை பற்றி இப்போது பார்போம்.
 
இந்தியாவை சேர்ந்த மங்கள் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய டேப்லெட்டுகளை களமிறக்க இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளுக்கு 'மைபேட்' மற்றும் 'யுப்' என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த புதிய தயாரிப்பின் மூலம் இந்தியாவின் டேப்லெட் சந்தையில் தீவிரமாக இறங்க மங்கள் எலக்ட்ரானிக்ஸ் முடிவெடுத்திருக்கிறது.
 
ஏற்கனவே இந்தியாவில் ஆகாஸ் மற்றும் க்ளாஸ்பேட் போன்ற மலிவு விலை டேப்லட்டுகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் மங்களின் இந்த மைபேட் மற்றும் யுப் டேப்லெட்டுகளும் இந்திய மக்கள் மனங்களில் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட்டுகளுக்கு ஏற்கனவே ஏராளமானோர் முன்புதிவு செய்து இருக்கின்றனர். அதனால் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் இந்தியாவில் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
 

'மைபேட்' ஒரு 7 இன்ச் டேப்லெட் ஆகும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. 'யுப்' ஆன்ட்ராய்டு 3.0 ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது. யுப் 10.1 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த யுப் டேப்லெட் கருப்பு கலந்த க்ரோம் மற்றும் வெள்ளை போன்ற இரண்டு நிறங்களில் வருகிறது. இந்த 2 டேப்லெட்டுகளுமே கைக்கு அடக்கமாக இருக்கின்றன.
 
 
 
இந்த மைபேட் மற்றும் யுப் டேப்லெட்டுகளின் தரம் அவற்றின் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அதாவது இந்த டேப்லெட்டுகளின் உயர்தர மாடல்கள் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த டேப்லெட்டுகளில் 3ஜி வசதி மற்றும் வைபை இணைப்பும் உண்டு. குறிப்பாக இந்த டேப்லெட்டுகள் வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு மிகச் சிறப்பாக பயன்படுத்தலாம். அதற்காக  இந்த டேப்லெட்டுகளில் எம்எஸ் வேர்ட், எக்ஸல் மற்றும் இதர வசதிகளும் உள்ளன.
 
மங்கள் எலக்ட்ரானிக்ஸ் இயக்குனர் கவுரவ் ஜெயோடியா கூறும் போது இந்திய செல்போன் துறையில் டேப்லெட்டுகள் ஒரு புரட்சியையே படைத்திருக்கின்றன. மேலும் வரும் காலங்களில் இந்த டேப்லெட்டுகள் தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையத தேவையாகிவிடும் எனவே தான் தம் கம்பெனி இந்த துறையில் காலடி வைத்திருப்பதாகவும் , மங்களின் புதிய டேப்லெட்டுகள் குறைந்த விலையில் வந்தாலும் தொழில் நுட்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த இரண்டு டேப்லெட் களின் விலை - மைபேட் : Rs.5,000 மற்றும் யுப் 10.1 : 18,000. என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments: