இப்போது யூ- டியூபில் இந்திய பிரதமர் அலுவலகம் !

வணக்கம் நண்பர்களே ,

இன்று உலகெங்கும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சமூக வலைத்தளங்களை சாதாரண மக்கள் கூட பயன் படுத்த துவங்கி விட்டனர். நாம் படிக்கும் செய்தி தாள்கள், வார இதழ்கள் கூட சமூக வலைத்தளங்களை முன்னிலை படுத்தி வருகின்றன. 


நமது நாட்டின் பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் இணைந்த செய்தி அனைவருக்கும் தெரிந்த ஓர் விஷயம். பிரதமரின் ட்விட்டர் வருகை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சோஷியல் மீடியாக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் யூடியூபில் அதிக வீடியோ தகவல்களை பகிர்ந்து கொள்ள உள்ளது. சமிபத்தில் யூடியூபில் இணைந்துள்ள பிரதமர் அலுவலகம் இனி அதிக வீடியோ தகவல்களை யூடியூபில் பகிர்ந்து கொள்ளும். இதன் முதல் வீடியோ வாக மகாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்பளாய்மெண்டு கியாரண்டி ஸ்கீம் பற்றி பிரதமர் பேசியது நேற்று யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.


முன்பெல்லாம் மக்களுக்கு இது போன்ற அரசாங்க விஷயங்களில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது வந்துள்ள சோஷியல் மீடியாவின் மூலம் புதிய தகவல்களையும் எளிதாக பெற முடியும் என்பது மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம் தான்.

அதோடு மீடியா பத்திரிக்கையின் உயர் அதிகாரியாக இருந்த பங்கஜ் பச்சவுரி பிரதமருக்கு செய்தி ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளதால் அவர் தான் இத்தகைய புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சந்தையை கலக்கும் புதிய டேப்லெட் - விலை ரூ.5,000 மட்டுமே

வணக்கம் நண்பர்களே ,
 
இந்தியாவில் செல்போன் பயன்பாடுகளுக்கு அடுத்தபடியாக டேப்லெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அதை கருத்தில் கொண்டே பல புதிய புதிய கம்பெனிகளும் டேப்லெட் தயாரிப்பில் களம் இறங்கி வருகின்றன.
 
ஏற்கனவே 'BSNL' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேப்லெட்களைபற்றி 'இந்த' பதிவில் பார்த்தோம். மேலும் ஒரு புதிய கம்பெனி தயாரிப்பை பற்றி இப்போது பார்போம்.
 
இந்தியாவை சேர்ந்த மங்கள் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய டேப்லெட்டுகளை களமிறக்க இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளுக்கு 'மைபேட்' மற்றும் 'யுப்' என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த புதிய தயாரிப்பின் மூலம் இந்தியாவின் டேப்லெட் சந்தையில் தீவிரமாக இறங்க மங்கள் எலக்ட்ரானிக்ஸ் முடிவெடுத்திருக்கிறது.
 
ஏற்கனவே இந்தியாவில் ஆகாஸ் மற்றும் க்ளாஸ்பேட் போன்ற மலிவு விலை டேப்லட்டுகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் மங்களின் இந்த மைபேட் மற்றும் யுப் டேப்லெட்டுகளும் இந்திய மக்கள் மனங்களில் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட்டுகளுக்கு ஏற்கனவே ஏராளமானோர் முன்புதிவு செய்து இருக்கின்றனர். அதனால் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் இந்தியாவில் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
 

'மைபேட்' ஒரு 7 இன்ச் டேப்லெட் ஆகும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. 'யுப்' ஆன்ட்ராய்டு 3.0 ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது. யுப் 10.1 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த யுப் டேப்லெட் கருப்பு கலந்த க்ரோம் மற்றும் வெள்ளை போன்ற இரண்டு நிறங்களில் வருகிறது. இந்த 2 டேப்லெட்டுகளுமே கைக்கு அடக்கமாக இருக்கின்றன.
 
 
 
இந்த மைபேட் மற்றும் யுப் டேப்லெட்டுகளின் தரம் அவற்றின் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அதாவது இந்த டேப்லெட்டுகளின் உயர்தர மாடல்கள் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த டேப்லெட்டுகளில் 3ஜி வசதி மற்றும் வைபை இணைப்பும் உண்டு. குறிப்பாக இந்த டேப்லெட்டுகள் வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு மிகச் சிறப்பாக பயன்படுத்தலாம். அதற்காக  இந்த டேப்லெட்டுகளில் எம்எஸ் வேர்ட், எக்ஸல் மற்றும் இதர வசதிகளும் உள்ளன.
 
மங்கள் எலக்ட்ரானிக்ஸ் இயக்குனர் கவுரவ் ஜெயோடியா கூறும் போது இந்திய செல்போன் துறையில் டேப்லெட்டுகள் ஒரு புரட்சியையே படைத்திருக்கின்றன. மேலும் வரும் காலங்களில் இந்த டேப்லெட்டுகள் தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையத தேவையாகிவிடும் எனவே தான் தம் கம்பெனி இந்த துறையில் காலடி வைத்திருப்பதாகவும் , மங்களின் புதிய டேப்லெட்டுகள் குறைந்த விலையில் வந்தாலும் தொழில் நுட்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த இரண்டு டேப்லெட் களின் விலை - மைபேட் : Rs.5,000 மற்றும் யுப் 10.1 : 18,000. என்பது குறிப்பிடத்தக்கது.
 

உலகையே கலக்க வரும் Apple iPad 3 - அறிமுகம்


நண்பர்களுக்கு வணக்கம்,

வாட் நெக்ஸ்ட் ...? ( What Next ..? ) இந்த வார்த்தை நம் வாழ்வோடு இணைந்த வார்த்தை. நம்முடைய எல்லா தேவைகளின் போதும் இந்த வார்த்தை நமக்குள் வரும். வளர்ந்து வரும் தொலை தொடர்பு துறையிலும் இந்த கேள்வி அடிக்கடி எழும். 

அப்படி உலகின் அனைத்து நாட்டு ஆடம்பர செல்போன் பிரியர்கள் ஒரு கம்பனியை பார்த்து இந்த கேள்வியை கடந்த இரண்டு மாதங்களாக கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்து விட்டது. 

என்ன குழப்பமாக இருக்கிறதா ? ஆப்பிள் iPhone மற்றும் iPad பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தினரிடம் கேட்ட கேள்வி தான் வாட் நெக்ஸ்ட் ...? ! அதற்க்கான பதில்...........ஆம், நண்பர்களே .. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான iPad இன்று அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இரண்டு மாடல்களில் iPad இருந்தாலும் புதிதாக வந்திருக்கும் மூன்றாவது மாடலில் எண்ணற்ற புதிய புதிய வசதிகள் உள்ளன. தரமான தொழில் நுட்பங்களை வழங்குவதன் மூலம் எலக்ட்ரானிக் சாதன உலகில் வாடிக்கையாளர்களின் மனதில் தனி இடத்தினை பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம். 

இந்த புதிய மாடலின் சிறப்பு அம்சங்களை இங்கே சென்று பாருங்கள். 


வரும் 15 தேதி மற்றும் 23 தேதிகளில் உலகெங்கும் அறிமுகம் ஆகிறது. இதன் விலை மற்றும் எப்போது கிடைக்கும் என்பதை இங்கு சென்று தெரிந்து கொள்ளலாம். நோக்கியா வழங்கும் 3 அட்டகாசமான மொபைல் போன்கள்

வணக்கம் நண்பர்களே ,

        செல்போன் என்றாலே நம் நினைவுக்கு வருவது நோக்கியா தான் . ஏனென்றால் அதன் தரம் , விலை , வசதிகள் போன்றவை மக்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் .

அப்படி மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நிறைய பயனுள்ள மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் கொடுத்த நோக்கியா நிறுவனம் 3 புதிய மொபைல்களை வழங்கி உள்ளது. ஆஷா-202, ஆஷா-203 மற்றும் ஆஷா-302 என்ற 3 மொபைல் கள் தான் அவை.


ஆஷா-302 மொபைல் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை பெற்றுள்ளது. 2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது. ஆஷா-302 மொபைல் 3ஜி நெட்வொர்க் வசதியையும் கொடுக்கும்.

நோக்கியா ஆஷா-202 மொபைல் மற்ற மொபைல்களையும் விட சற்று வித்தியாசமானது என்று சொல்லலாம். இந்த மொபைலில் 5 சிம் கார்டுகளின் பயன்பாடுகளை பெற முடியும். டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் ஆஷா-202 மொபைலில் 5 சிம் கார்டுகளில் உள்ள தகவல்களையும் பதிவு செய்து வைத்து கொள்ள முடியும். இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவிற்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.

ஆஷா-302 மொபைலும் 2.4 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். இந்த மொபைலை ரூ.6,300 விலையில் கொண்டது. ஆஷா-202 மற்றும் ஆஷா-203 மொபைலும் ரூ.6,000 விலை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு மொபைல்களும் வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்திய  மொபைல் மார்கெட்களில் கிடைக்கும்.


நோக்கியா 808 - 41 மெகா பிக்ஸல் கேமராவுடன் அசத்தும் ஸ்மார்ட்போன்

நண்பர்களே வணக்கம்,

        நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்மாக தினந்தோறும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட செல்போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய தொழில் நுட்பங்கள், புதுசா இருந்தா மட்டும் போதாது, அது வசதியாகவும் இருக்கனும், நமக்கு தேவைபடுவதாகவும் இருக்கவேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செல்போன் களை தயாரித்து வரும் நோக்கியா நிறுவனம் ஒரு அட்டகாசமான மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம் நண்பர்களே பல அசத்தலான வசதிகளோட 808 ப்யூர் வியூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது நோக்கியா நிறுவனம்.

தற்போது ஸ்பின் நாட்டில் நடந்து வரும் சர்வதேச மொபைல் கண்காட்சியில் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரம்மிக்க வைக்கும் மொபைல் கண்காட்சியை இன்னும் பிரம்மாண்டப்படுத்தி உள்ளது நோக்கியாவின் ப்யூர் வியூ ஸ்மார்ட்போன். அப்படி உலகின் அத்துனை செல்போன் கம்பெனி களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம் என்ன தெரியுமா ? இந்த ஸ்மார்ட்போனில் 41 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது தான் . இது மொபைல் போன் கேமராவா ? அல்லது கேமராவில் மொபைல் போன் னா ? என்று கேட்க்கும் அளவுக்கு இதன் சிறப்பு உள்ளது.

 

வாடிக்கையாளர்களின் கண்களை அகல விரிய வைக்கும் இந்த 41 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் எவ்வளவு துல்லியமானதாக இருக்கும் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. நோக்கியா-808 ஸ்மார்ட்போனில் விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் கொடுக்கும் புகைப்படத்தினையும் தகவல்களையும் இதன் 4 இஞ்ச் அமோல்டு தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரையில் இன்னும் சிறப்பாக காணலாம். 16 எம் கலர்களுக்கு இந்த திரை வசதி சப்போர்ட் செய்யும்.நோக்கியா- பெல்லி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள திரையின் மூலம் 360 X 640 திரை துல்லயத்தினையும் பெறலாம். 41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு இல்லாமலா இருக்கும் ? கீரல்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.


அதிக தொழில் நுட்பங்களுக்கு சிறந்த முறையில் சப்போர்ட் செய்ய இதில் ஸ்டான்டர்டு (பிவி-4டி) 1,400 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. 2ஜி வசதிக்கு 11 மணி நேரம் வரை டாக் டைமும், 3ஜி வசதி்க்கு 6 மணி நேரம் 50 நிமிடம் வரை டாக் டைமும் கிடைக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது . அதே போல் 2ஜி வசதிக்கு 465 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும், 3ஜி வசதிக்கு 540 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் எளிதாக பெறலாம்.

சர்வதேச மொபைல் கண்காட்சியில் வாடிக்கையாளர்களின் கவணத்தை வெகுவாக ஈர்த்த நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. வருகிற மே மாதம் இந்த நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக நோக்கியா அறிவித்துள்ளது . இதன் மூலம் செல்போன் கம்பெனி களுக்குள் நடந்து வந்து சண்டை இப்போது அடுத்த கட்டமாக கேமரா தயாரிக்கும் கம்பெனி களுக்கும் நடக்க போகிறது என்றே சொல்லலாம் .
 

புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட்-2 ஆன்ட்ராய்டு 4.0 வெர்ஷனுடன் அறிமுகம்

வணக்கம் நண்பர்களே ,

            இந்தியாவில் டேப்லெட் மார்கெட்டில் முதன்மை நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் சாம்சங் கேலக்ஸி டேப் 2 10.1 ஆகும். இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 (ஐஸ் க்ரீம் சான்ட்விஜ்) இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த கேலக்ஸி டேப் 2 10.1 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இந்த புதிய டேப்லெட் 10.1 இன்ச் அளவில் எல்சிடி தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். இந்த டேப்லெட் ஆட்டோ போக்கஸ் கொண்ட 3 எம்பி பின்பக்க கேமராவையும் அதே நேரத்தில் 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும் விஜிஎ கேமராவையும் கொண்டுள்ளது. இரண்டு கேமரா இருப்பதால் துல்லியமான போட்டோகள் எடுக்கவும் , வீடியோ காலிங் செய்யவும் இந்த டேப்லெட் பயன்படும்.

சேமிப்பு வசதிகளைப் பார்த்தால் இந்த டேப்லெட்டின் போன்புக் மற்றும் கால் ரிக்கார்டுகள் அன்லிமிட்டடாக உள்ளன. இந்த டேப்லெட் 512 ஜிபி ரேமையும் அதே நேரத்தில் 8GB/16GB/32GB ரோமையும் கொண்டுள்ளது. இதன் மெமரியை மேலும் 32GB வரை அதிகரிக்கவும் முடியும். அதற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy Tab2 10.1

தகவல்களை பரிமாற்றம் செய்ய எ2டிபியுடன் கூடிய ப்ளூடூத் வி3.0, எச்எஸ்பிஎ+, 21எம்பிபிஎஸ் உள்ள 3ஜி, வி2.0 மைக்ரோ யுஎஸ்பி, டபுள்யுஎல்எஎன் மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் இந்த டேப்லெட்டில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் மற்றும் இன்பேரர்டு போர்ட் போன்ற வசதிகள் கிடையாது.

Samsung Galaxy Tab 2 10.1 specifications
10.1-inch WXGA(1280×800) PLS TFT display
1 GHz Dual-Core Processor
Android 4.0 (Ice Cream Sandwich)
3MP rear-facing camera and VGA front facing camera
3G HSPA+ 21Mbps,Wi-Fi, Wi-Fi Direct, Bluetooth 3.0, A-GPS
1GB RAM, 16/32GB internal memory, microSD (up to 32GB)
Dimensions- 256.6 x 175.3 x 9.7 mm, weight – 588g
3.5mm Ear Jack
7,000 mAh battery

அசத்தலான வீடியோ கேம்களையும் இந்த டேப்லெட்டில் நாம் பார்க்க முடியும். ஆனால் எப்எம் ரேடியோ இந்த டேப்லெட்டில் இல்லை. மின்திறனிற்காக இந்த டேப்லெட் 7000 எம்எஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 256.6 x 175.3 x 9.7 மிமீ ஆகும். இதன் எடை 588 கிராம் மட்டுமே.

மேலும் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் வேகம் கொண்ட டூவல் கோர் ப்ராசஸரையும் அதே நேரத்தில் ஆன்ட்ராய்டு வி4.0 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இதன் ப்ரவுசர் டபுள்யுபி 2.0/எச்டிஎம்எல் ஆகும். சாம்சங்கின் இந்த புதிய கேலக்ஸி டேப் டேப்லெட் வரும் ஏப்ரல் மாதம் இந்திய சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.

1 லட்சம் அட்வான்ஸ் புக்கிங்களை எட்டிய - BSNL டேப்லட்கள்

நண்பர்களே வணக்கம்,
 
           இந்திய மக்கள் விலை குறைவாக எதை கொடுத்தாலும் போட்டி போட்டு வாங்குவார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் வந்துள்ளது. BSNL நிறுவனம் சமிபத்தில் Tablet களை அறிமுகப்படுத்தபோவதாக செய்தி வெளியிட்டது,அந்த Tablet களை வாங்க முன்பதிவு  செய்யலாம் எனவும்  அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த நாள்முதல் நேற்று வரை சுமார் 1 லட்சம் Tablet கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
 
 
தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக இந்த 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய தொழில் நுட்பம் கொண்ட பல டேப்லட்கள் இப்போது விற்பனை சந்தையில் இடம் பெற்று வந்தாலும் , விற்பனைக்கே வராத ஒரு பொருளுக்கு நம் இந்திய மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியம் அளிப்பதாக பேன்ட்டல் டெக்னாலஜியின் மேனேஜிங் டைரக்டரான வீரேந்திர சிங் கூறியுள்ளார்.
 
உயர்ந்த தொழில் நுட்பமாக இருக்க வேண்டும் அதே சமயம் குறைந்த விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். இதை மனதில் கொண்டு தம் நிறுவனம் தரமான களை தயாரித்து மக்களுக்கு கொடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


பென்ட்டா ஐஎஸ்-701-ஆர் டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை தெளிவாக காண இதில் 7 இஞ்ச் திரையையும் இந்த டேப்லட் வழங்கும். 3,000 எம்ஏஎச் பேட்டரியினை பெற்றுள்ள இந்த டேப்லட் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.

பென்ட்டா டிபேட்_டபிள்யூஎஸ்-704-சி டேப்லட்டும் 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதன் மூலம் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். மூன்றாவது டேப்லட்டான பென்ட்டா டிபேட் டபிள்யூஎஸ்-802-சி டேப்லட் 8 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. மற்ற 2 டேப்லட்களையும்விட இந்த டேப்லட் சற்று அதிகமான திரை வசதியை கொடுக்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 3 புதிய டேப்லட்களும் மார்ச் 5-ஆம் தேதியில் இருந்து டேப்லட் மார்கெட்களில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டேப்லட்கள் ரூ.3,250 விலையில் இருந்து ரூ12,500 விலை வரையில் கிடைக்கும்.