ட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..?

வணக்கம் நண்பர்களே.
 
இணைய உலகில் எத்தனையோ சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் Twitter, Facebook, LinkedIn  போன்றவைதான் புகழ் பெற்றது. சமிபத்தில் கூகிள் அறிமுகப்படுத்திய Google Plus இப்போதுதான் படிபடியாக வளர்ந்து வருகிறது.
 
இவற்றுள் ட்விட்டர் தான் தனிசிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இதில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை வெறும் 140 எழுத்துகளுக்குள் சொல்ல வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ட்விட்டரில் அதிக நேரம் இருப்பது, உடல்நலத்தை பாதிக்கும் என்று ஒரு திடு்க்கிடும் தகவலை முன் வைத்து இருக்கிறார் ட்விட்டர் இயக்குனர்களில் ஒருவரான திரு .பிஸ் ஸ்டோன்.
 
இந்த கருத்தை கனடாவில் உள்ள மான்ட்ரியல் என்ற இடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியா மட்டும் அல்லாது வலைதளங்களில் தகவல்களை தேடுபவர்கள் தகவல்கள் கிடைத்த பின்பு அதை விட்டு வெளி வருவது தான் நல்லது. இல்லாவிடில், வலைதளங்களிலேயே எந்த நேரம் இருப்பது உடல் ஆரோக்கியத்தினை பாதிப்பதாக திரு . பிஸ் ஸ்டோன் கூறி இருக்கிறார்.

அதிக நேரம் ட்விட்டரிலேயே இருக்கும் பல பேர் உணவு உட்கொள்ளும் நேரத்தையும் சேர்த்து டிவிட்டருக்காக செலவிடுகின்றனர். 140 கேரக்டர்களில் எதையும் சுருக்கமாக சொல்லும் இவர்களுக்கு கோர்வையான வாசகங்களை கொடுப்பது சிரமமாகிறது.

சோஷியல் மீடியாவை பற்றி அவ்வப்போது சில திடுக்கிடும் தகவலகளும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. டிவிட்டரிலும் சரி, வலைத்தளங்களிலும் சரி அதிக நேரத்தினை செலவு செய்வது ஆரோக்கியத்தை பாதிப்பதாக பலத்த குரல்கள் எழும்பியுள்ளன. இது சம்பந்தமான ஆய்வுகளும் உலகின்கும் அவ்வப்போது நடந்தும் தான் வருகின்றன.இந்த ஆய்வின் முடிவுகளும் சமூக வலைதளங்களுக்கு எதிராகவே உள்ளன.

மேலும் அவர் கூறும்போது, இதனால் டிவிட்டரில் இப்பொழுது பயன்படுத்தி வரும் 140 கேரக்டர்களை இதற்கு மேல் அதிகப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் , ட்விட்டர் இந்த அளவு புகழ் பெற அதுதான் காரணமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படியோ நம்மை போன்று சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தங்களது உடல்நலத்தையும் பேணிக் காப்பது அவசியம். எனவே ட்விட்டர் பயன்படுத்தும் நண்பர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்து தாங்கள் அதற்காக சிலவிடும் நேரத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு வாழ்கையை வளமுடன் வாழவேண்டும்.


நானும் ட்விட்டர் ரில் இருக்கேன் .... ஹி ஹி ...

No comments: