சாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் !

            உலகில் எத்தனையோ மொபைல் தயாரிப்பு கம்பனிகள் இருந்தாலும் நோக்கியா தான் அனைத்திற்கும் முன்னோடி. உலகின் No 1. கம்பனியும் அதுதான். ஆனால் அப்படிப்பட்ட சிறந்த மொபைல் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தை பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சாம்சங் நிறுவனம்.

அந்த நிறுவனம்,சமீபத்தில் கேலக்ஸி மினி-2 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங். மினி என்ற பெயரை கேட்டவுடன் வசதிகளிலும் சிறியது என்று நினைத்துவிட முடியாது. அரிய பல வசதிகளை சிறப்பாக வழங்கும் நோக்கித்தில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் (2.3) சிஸ்டத்தில் இயங்கும். கேலக்ஸி மினி-2 தகவல்களை தெளிவாக 3.27 இஞ்ச் அகன்ற திரையில் காண்பிக்கும். 3.15 மெகா பிக்ஸல் கேமரா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.

3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,300 எம்ஏஎச் அசத்தலான பேட்டரியை கொண்டுள்ளது. நீடித்து உழைக்கும் பேட்டரி இதில் உள்ளதால் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சிரீஸில் புதிய படைப்பான கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

No comments: