சாம்சங் கேலக்ஸி பீம் - புதிய புரொஜக்டர் மொபைல் போன்

நண்பர்களே வணக்கம்,
 
இன்றைய நவீன உலகில் நம்முடைய செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பதை போன்றே,செல்போன் களில் புதிய புதிய வசதிகளும் அதிகரித்து வருகின்றன. இரண்டு சிம்கார்ட், Android OS , 8MP கேமரா போன்ற பல தொழில் நுட்ப சாகசங்களை செய்து வரும் சாம்சங், ஒரு புத்தம் புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்கி உள்ளது.
 
சாம்சங் நிறுவனம் புதிய தன்னுடைய புதிய தயாரிப்பான கேலக்ஸி பீம் ( Galaxy Beam )என்ற மாடல்லில் லுமென்ஸ் புரொஜக்டர் ( Projesctor smartphone ) தொழில் நுட்ப வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் முழுவதும் தோடு திரை கொண்டதாகவும். ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம் கொண்ட தாகவும் உருவாக்கி உள்ளது.
 

இந்த கேலக்ஸி பீம் - மாடலில் புரொஜெக்டர் வசதியினை சுவர் போன்றவற்றில் பயன்படுத்தி மல்டிமீடியா வசதியினை பெறலாம். ஆன்ட்ராய்டு இயங்களத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த அகன்ற திரையின் மூலம் 480 X 800 திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும்.

8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். சிறந்த தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்வதற்காகவே இதில் 2,000 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. அதோடு சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் வசதியையும் வழங்கும்.
Samsung Galaxy Beam Specifications
  • 4.0-inch 480×800 (WVGA) TFT display
  • 15 lumens projector with high-definition projection up to 50-inch wide
  • 1 GHz Dual-Core Processor
  • Android 2.3 (Gingerbread)
  • 5MP Auto focus camera with flash, 1.3MP secondary camera
  • Dimensions - 64.2 x 124 x 12.5mm, weight 145.3 g
  • 786MB RAM, 8GB Internal Memory, MicroSD slot (up to 32GB)
  • Bluetooth 3.0+HS, Wi-Fi 802.11 b/g/n 2.4GHz, MicroUSB, USB 2.0, aGPS
  • 3.5mm Ear Jack
  • 2000 mAh battery
இன்று அலுவலகத்தில் பணி புரியும் நம்மில் பலர், அங்கு நடக்கும் மீட்டிங் களில் தம்முடைய அலுவலக பயன்பாட்டிற்காக இந்த வசதியை பயன்படுத்தலாம், வீட்டில் , அல்லது நண்பர்கள் வட்டத்தில் நமது செல்போன் லில் உள்ள வீடியோ களை அனைவரும் காணும் வகையில் போட்டு காட்ட இந்த புரொஜெக்டர் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த புதிய சாம்சங் ஸ்மார்டபோன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.

ட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..?

வணக்கம் நண்பர்களே.
 
இணைய உலகில் எத்தனையோ சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் Twitter, Facebook, LinkedIn  போன்றவைதான் புகழ் பெற்றது. சமிபத்தில் கூகிள் அறிமுகப்படுத்திய Google Plus இப்போதுதான் படிபடியாக வளர்ந்து வருகிறது.
 
இவற்றுள் ட்விட்டர் தான் தனிசிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இதில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை வெறும் 140 எழுத்துகளுக்குள் சொல்ல வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ட்விட்டரில் அதிக நேரம் இருப்பது, உடல்நலத்தை பாதிக்கும் என்று ஒரு திடு்க்கிடும் தகவலை முன் வைத்து இருக்கிறார் ட்விட்டர் இயக்குனர்களில் ஒருவரான திரு .பிஸ் ஸ்டோன்.
 
இந்த கருத்தை கனடாவில் உள்ள மான்ட்ரியல் என்ற இடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியா மட்டும் அல்லாது வலைதளங்களில் தகவல்களை தேடுபவர்கள் தகவல்கள் கிடைத்த பின்பு அதை விட்டு வெளி வருவது தான் நல்லது. இல்லாவிடில், வலைதளங்களிலேயே எந்த நேரம் இருப்பது உடல் ஆரோக்கியத்தினை பாதிப்பதாக திரு . பிஸ் ஸ்டோன் கூறி இருக்கிறார்.

அதிக நேரம் ட்விட்டரிலேயே இருக்கும் பல பேர் உணவு உட்கொள்ளும் நேரத்தையும் சேர்த்து டிவிட்டருக்காக செலவிடுகின்றனர். 140 கேரக்டர்களில் எதையும் சுருக்கமாக சொல்லும் இவர்களுக்கு கோர்வையான வாசகங்களை கொடுப்பது சிரமமாகிறது.

சோஷியல் மீடியாவை பற்றி அவ்வப்போது சில திடுக்கிடும் தகவலகளும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. டிவிட்டரிலும் சரி, வலைத்தளங்களிலும் சரி அதிக நேரத்தினை செலவு செய்வது ஆரோக்கியத்தை பாதிப்பதாக பலத்த குரல்கள் எழும்பியுள்ளன. இது சம்பந்தமான ஆய்வுகளும் உலகின்கும் அவ்வப்போது நடந்தும் தான் வருகின்றன.இந்த ஆய்வின் முடிவுகளும் சமூக வலைதளங்களுக்கு எதிராகவே உள்ளன.

மேலும் அவர் கூறும்போது, இதனால் டிவிட்டரில் இப்பொழுது பயன்படுத்தி வரும் 140 கேரக்டர்களை இதற்கு மேல் அதிகப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் , ட்விட்டர் இந்த அளவு புகழ் பெற அதுதான் காரணமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படியோ நம்மை போன்று சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தங்களது உடல்நலத்தையும் பேணிக் காப்பது அவசியம். எனவே ட்விட்டர் பயன்படுத்தும் நண்பர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்து தாங்கள் அதற்காக சிலவிடும் நேரத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு வாழ்கையை வளமுடன் வாழவேண்டும்.


நானும் ட்விட்டர் ரில் இருக்கேன் .... ஹி ஹி ...

செல்போன் பாதுகாப்பிற்கு எளிய வழிமுறைகள்

நண்பர்களே வணக்கம்,
 
உலகெங்கும் செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்முடைய தகுதிக்கும்,வசதிக்கும் ஏற்ற செல்போன்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய மொபைல் குறைந்த விலை மொபைல்போன், காஸ்ட்லியான மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே அதன் ஆயுட்காலம் இருக்கிறது.
 
 
 
சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்திலேயே இழந்துவிடும். சில எளிய முறைகளை கையாண்டால், உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உங்களுக்காக சில எளிய வழிமுறைகள்…
 
தட்பவெப்பம்:
மொபைல்போன்கள் தட்பவெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிக குளிர்ச்சியான மற்றும் அதிக வெப்பமான இடங்களில் மொபைல்போனை தொடர்ந்து வைத்திருக்க வேண்டாம். தவிர, மழைச்சாரல் அடிக்கும் ஜன்னல் ஓரங்களிலும் வைக்க வேண்டாம். இதனால், போனின் ஹார்டுவேர்கள் எளிதாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
சார்ஜ் செய்யும்போது கவனம்:
செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் போட்டு வைக்க வேண்டாம், அதிக பட்சம் ஆறு மணி நேரம் இருந்தால் போதும். பேட்டரியில் சார்ஜ் முழுவதும் தீர்ந்தபின் மீண்டும் சார்ஜ் செய்யுங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதால் உங்கள் பேட்டரியின் ஆயுள் சீக்கிரத்தில் போய்விடும். மேலும், சிறிது காலத்தில் பேட்டரி தனது சேமிப்பு திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும்.போன் சார்ஜில் இருக்கும்போது போனில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது.

போன் கவர்:
உராய்வுகளால் போனின் டிஸ்பிளே மற்றும் இதர முனைகள் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் மற்றும் லெதர் உறைகளில் போனை பாதுகாப்பாக வைத்திருக்க பழகுங்கள். மொபைல் போன் முழுவதும் கவர் செய்து லேமினசன் செய்ய வேண்டாம்.

பாதுகாப்பு:
குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் போனை வைக்க பழகிக்கொள்ளுங்கள். போனின் கீபேடு லாக்கை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்வது சிறந்த வழி. மேலும், தினமும் போனை மெல்லிய துணியால் சுத்தம் செய்யுங்கள்.

மெமரி கார்டு:
GB குறைவான மெமரி கார்டு களை பயன்படுத்தவும்.மேலும் வங்கி ரகசிய எண்கள் உள்ளிட்ட அதிமுக்கியமான தகவல்களை மெமரி கார்டில் பதிவு செய்ய வேண்டாம். சில சமயங்களில் போன் தொலைந்துபோனால், அதன் மெமரி கார்டில் உள்ள தகவல்களை அடுத்தவர் எளிதில் எடுத்து துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சார்ஜ் சேமிப்பு:
டிஸ்பிளேயின் பிரகாசத்தை குறைத்து வையுங்கள். இதன்மூலம், பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் காலியாகாது. போன் பேசுவதைவிட எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை பரிமாறினால்கூட பேட்டரியில் சார்ஜ் சீக்கிரம் இறங்காது. இதேபோன்று, மற்றொன்று முக்கிய விஷயம், தேவையில்லாமல் வைபரேட்டர் மோடை ஆன் செய்ய வேண்டாம். வைபரேட்டர் மோடு பேட்டரி சார்ஜை வேகமாக உறிஞ்சிவிடும்.
 
உஷார்:
குனிந்து நிமிர்த்து வேலைகள் செய்யும் போதோ, அல்லது பீச் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது பாக்கெட்டில் மொபைல்போனை போட்டுக்கொண்டு செல்ல வேண்டாம். தண்ணீருக்குள் மொபைல்போன் விழுந்தால், அதன் ஹார்டுவேர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

பேட்டரி:
பேட்டரி பழுதாகிவிட்டால், போலி தயாரிப்புகளை வாங்காமல் விலை கூடுதலாக இருந்தாலும், தரமான மற்றும் அந்தந்த நிறுவனத்தின் ஒரிஜினல் பேட்டரிகளை வாங்குங்கள்.

இந்த அடிப்படை வழிமுறைகளை பயன் படுத்தினால் நம்முடைய மொபைல் போன் நீடித்து உழைக்கும். மேலும் சில வழிமுறைகளை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

LG வழங்கும் 3 சிம் மொபைல்போன்

              உலகெங்கும் தினந்தோறும் புதிய புதிய மொபைல் போன்கள் தயாராகி கொண்டே உள்ளன. பற்பல வசதிகளும் கூடி கொண்டே போகின்றன. நாம் பயன்படுத்தும் மொபைல்கள் எல்லா விதத்திலும் சவுகரியத்தினை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் அதிகமாகிவிட்டது. இதற்கு தகுந்தாற்போல் 3 சிம் கார்டுகள் பொருத்திக்கொள்ளும் வசதியை கொடுக்க இருக்கிறது எல்ஜி (LG Mobile ) நிறுவனம் .

ஏ-290 ( LG A290 )என்ற மொபைலை அறிமும் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். இது 3 சிம் கார்டு வசதி கொண்ட மொபைல். இதனால் ஒரே நேரத்தில் மூன்று நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும்.

மூன்று செல்போன் வைத்து அவதி படுபவர்களுக்கு இந்த எல்ஜி ஏ-290 மொபைல் வசதியாக இருக்கும். அலுமினியம் பேனல் கொண்டு இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலின் பின் புறத்தில் 1.3 மெகா பிக்ஸ்ல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொழில் நுட்ப வசதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகவில்லை. இந்த மொபைல் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியாக உள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருக்கும் நோக்கியா நிறுவனம் இப்போது தான் இரண்டு சிம் கார்டு வசதிகள் கொண்ட போன்களை அறிரிமுகம் செய்து வருகிறது. இந்த புதிய எல்ஜி ஏ-290 மொபைல் இந்தியாவில் வெளியானால், டியூவல் சிம் வசதி கொண்ட நோக்கியா மொபைல்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் நம்மை போன்றவர்களுக்கு அது பயன் தான். அப்போது தான் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட செல்போன் நமக்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் !

            உலகில் எத்தனையோ மொபைல் தயாரிப்பு கம்பனிகள் இருந்தாலும் நோக்கியா தான் அனைத்திற்கும் முன்னோடி. உலகின் No 1. கம்பனியும் அதுதான். ஆனால் அப்படிப்பட்ட சிறந்த மொபைல் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தை பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சாம்சங் நிறுவனம்.

அந்த நிறுவனம்,சமீபத்தில் கேலக்ஸி மினி-2 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சாம்சங். மினி என்ற பெயரை கேட்டவுடன் வசதிகளிலும் சிறியது என்று நினைத்துவிட முடியாது. அரிய பல வசதிகளை சிறப்பாக வழங்கும் நோக்கித்தில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் (2.3) சிஸ்டத்தில் இயங்கும். கேலக்ஸி மினி-2 தகவல்களை தெளிவாக 3.27 இஞ்ச் அகன்ற திரையில் காண்பிக்கும். 3.15 மெகா பிக்ஸல் கேமரா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.

3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,300 எம்ஏஎச் அசத்தலான பேட்டரியை கொண்டுள்ளது. நீடித்து உழைக்கும் பேட்டரி இதில் உள்ளதால் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சிரீஸில் புதிய படைப்பான கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

LG Mobile - வழங்கும் புதிய ஆப்டிமஸ் 3D மேக்ஸ் ஸ்மார்ட்போன்

              எல்ஜி ( LG Mobile) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாகசங்கள் எல்லை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. எல்ஜி புதிய 3டி தொழில் நுட்பம் கொண்ட ஆப்டிமஸ் 3டி மேக்ஸ்(LG Optimus 3D Max) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ( 2.3) ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். மேலும் இந்த புதிய ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் வரபோகும் புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் செய்து கொள்ளலாம்.
 
 
3டி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் இதில் 4.3 இஞ்ச் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அகன்ற திரையினால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். மிக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் சிறப்பான பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.
 
5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படங்களை எடுத்து ரசிக்கலாம். ஒரு கேமரா அல்ல, இந்த ஸ்மார்ட்போனில் டியூவல் கேமரா வசதி உள்ளதால் முகப்பு கேமராவும் இதில் உள்ளது. இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் கார்டெக்ஸ்-ஏ9 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. 3டி தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இதில் 3ஜி நெட்வொர்க் வசதியையும் பெறலாம். ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பமும் உள்ளது. இதனால் சுலபமாக பிரவுசிங் வசதியையும் எளிதாக பயன்படுத்தலாம்.
 
தொழில் நுட்ப தகவல்களை மட்டும் வெளியிட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இன்னும் இதன் விலை சரிவர வெளியாகவில்லை. அப்டேஷன் வசதிகளையும் வழங்க இருக்கும் இந்த எல்ஜி ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை கூடிய விரைவில் வெளியாகும். இந்த போன் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை,இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

முக்கிய அறிவிப்பு : வலைப்பூவில் சின்ன மாற்றம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

கடந்த சில மாதங்களாக வலைப்பூ பக்கம் வரமுடியாமல் இருந்தது. பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இங்கு வந்து கொஞ்ச நேரம் எழுதுவதும், நண்பர்களின் வலைப்பூ பக்கம் சென்று வருவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இனி நேரத்தை கொஞ்சம் எழுதுவதற்காக ஒதுக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

இதுவரை தொலைதொடர்பு நிறுவனங்களை பற்றிய தகவல்களை கொடுத்து வந்தேன், இனி வரும் நாட்களில் பார்த்தது, படித்தது, மனதை பாதித்தது மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களை பற்றிய தகவல், செல்போன் குறிப்பாக iPhone மற்றும் அதன் அப்ளிகேசன்கள் இவற்றோடு சேர்த்து மனதில் தோன்றுவதையும் எழுத நினைத்துள்ளேன்.

அதன் துவக்கமாக என்னுடைய பழைய Blog யை மாற்றி புதிய .COM டோமன் வாங்கியுள்ளேன்.

இனி என்னுடைய புதிய முகவரி-  www.erodethangadurai.com


உங்கள் மேலான ஆதரவை எப்போதும் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் ,
ஈரோடு தங்கதுரை