facebook சாட்டிங் செய்ய சுலபமான மென்பொருள் - இலவசம்


 
நண்பர்களே , இன்று நாம் பார்க்க போகும் பதிவு Face Book சம்பந்தமானது.

இணைய உலகில் சமுக வலைதளங்களில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பது facebook தான்.

நாம் எல்லோருமே அதில் கணக்கு வைத்திருப்போம். ( இல்லாதவர்கள் இங்கு சென்று புதிதாக கணக்கு துவங்கி கொள்ளவும் ).

இந்த facebook -ல் நம்முடைய கருத்துகளையும், போட்டோ களையும், நம்முடைய நண்பர்களிடம் பகிர்ந்து வருகிறோம்.

இது தவிர , நம்முடைய ஓய்வு நேரங்களில் நம்முடைய நண்பர்களிடம் chating செய்தும் வருகிறோம். அப்படி சாட்டிங் செய்யும் வேலையை சுலபமாக செயும் ஒரு மென்பொருள் பற்றி தான் இந்த பதிவு.
 

இனி நீங்கள் facebook ல் சாட்டிங் செய்ய ஒவ்வொரு முறையும் facebook பக்கத்திற்கு சென்று login செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


அதற்க்கு பதிலாக fTalk என்ற அருமையான மென்பொருள் உள்ளது.



இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துஉங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும்.



உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து முடித்ததும் ஒரு முறை மட்டும் உங்கள் facebook user name மற்றும் password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்,

இனி நீங்கள் உங்கள் மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டே உங்கள் நண்பர்களிடம் சாட்டிங் செய்து கொள்ளலாம்.









fTalk மென்பொருளின் பயன்கள்
1 . Online மற்றும் Offline நண்பர்களை தனித்தனியாக அடையாளம் காட்டும்.
2 . நம்முடைய மற்றும் நம்முடைய நண்பர்களின் Photos,Profile ,Massage போன்றவற்றையும் காட்டும்.

3 . சாட்டிங் செய்யும் பொது Emoticons களையும் பயன்படுத்தி கொள்ளலாம் .
4 . நாம் இணையத்திலோ,வேறு ஏதாவது வேலைகளோ செய்து கொண்டே சாட்டிங் செய்யலாம்.

5 . நம்முடைய Status பகுதியில் சொல்ல விரும்பும் கருத்துகளை இங்கிருந்தே post செய்யலாம்.
6 . நம்முடைய Online Status நமக்கு வேண்டியவாறு மாற்றி கொள்ளலாம்.


இவ்வளவு பயன்பாடுளை கொண்ட இந்த மென்பொருளை முழுவதும் இலவசமாக கீழே உள்ள பட்டனை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

நான் பயன்படுத்தி வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது. நீங்களும் பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.

No comments: