இங்கு பதிவு போட " மேட்டர் " தரப்படும் ......

வணக்கம் நண்பர்களே ,
இடைவிடாத வேலைகளுக்கு மத்தியில் ( சி.பி. : அப்படி நீ என்னடா பண்றே ? ) இணையத்தின் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது.( ஜோதிடர் சதிஸ் குமார் : பரவால்ல . . பரவால்ல... )
இனி தினமும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் ( கரன் : என்னது இனி தினமுமா ? ) இந்த பதிவை துவக்குகிறேன்.

இன்றைய பதிவு நிறைய சிறப்பு வாய்ந்தது. ( சௌந்தர் : அப்படியா ? )
முதல் சிறப்பு இன்று நமது இந்திய திரு நாட்டின் 65 -வது சுதந்தர திருநாள். ( பன்னிகுட்டி ராம்சாமி : அது நாட்டுக்கு சிறப்பு, உனக்கு என்ன ? )

இந்த அருமையான நாளில் இந்த இணையம் வழியாக நம்முடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் தனி திறமைகளையும் வெளி உலகிற்கு காட்டக்கூடிய சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு,


இணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்தர திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ( நிரூபன் : சரி சரி விசயத்துக்கு வா )

அடுத்த சிறப்பு நான் பதிவுலகில் எழுத துவங்கி ஒரு வருடம் ஆகிறது.( சங்கரலிங்கம் : அப்படி நீ என்ன எழுதி கிழிச்சிட்டே .. ? )

பதிவுலகத்தில் எத்தனியோ ஜாம்பவான்கள் பல வருடங்களாக பல்வேறு சுவையான பதிவுகளை எழுதி வந்தாலும், நானும் இங்கு ஒருவருடம் தாக்கு பிடித்து வந்து விட்டேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது .

அடுத்த சிறப்பு நான் இதுவரை 75 பதிவுகளை எழுதிவிட்டேன் ( சசிகுமார் : டேய் 750 பதிவு எழுதனவங்க எல்லாம் சும்மா இருக்காங்க ... ) அது சரி தான் ,இருந்தாலும் நானெல்லாம் 75 பதிவு எழுதுவேன் என்பது ஒரு சிறப்பு தானே ..?

என்னுடைய பெரும்பாலான பதிவுகள் செல்போன் மற்றும் தொலை தொடர்பு துறை சம்பந்தப்பட்டதாகவே இருக்கும் ( கந்தசாமி : வேற எதாச்சும் தெருஞ்சதானே...? ) அதற்க்கு காரணம் ,

என்னுடைய பணி தான். நான் அந்த துறையில் பணியாற்றுவதால் அத்துறை சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகளை பதிவுகளாக தருகிறேன் .

இனி முடிந்த வரை இணையம், கம்ப்யூட்டர்,செல்போன்,பொழுதுபோக்கு சம்பத்தப்பட்ட செய்திகளை தரப்போகிறேன். ( ராஜபாட்டை ராஜா : எதாச்சும் நல்லதா கொடுத்தா சரி ..!)

அடுத்த சிறப்பு என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை இன்று தான் 100 வந்திருக்கிறது ( மதி சுதா : உனக்கு 100 பேரா ...? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல ...? )
என்ன செய்வது இந்த 100 Followers திருப்தி அடைவது மாதிரி நான் எழுத வேண்டுமே...? அதுவே எனக்கு கஷ்டம் ...!

இருந்தாலும் என்னை நம்பி வந்த இந்த 100 Followers இனியும் ஏமாற்ற போவதில்லை. ( சங்கவி : அடப்பாவி என்ன செய்ய போறே ...? )

என்னுடைய 100 Followers , 1000 Followers ஆக உயரும் வரை நான் எழுதுவதை நிறுத்த போவதில்லை ( மங்குனி அமைச்சர் : கக்கக்க போ ) .

இந்த நேரத்தில் இந்த சிறப்புகள் எல்லாம் வர காரணமாக இருந்த அனைத்து திரட்டிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

மீண்டும் ஒரு முறை என்னுடைய பழைய 100 Followers , மேலும் இனி வரபோகும் புதிய Followers , அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும்,

இனிய சுதந்தர திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . ஜெய் ஹிந்த் ...!

( ஈரோடு தங்கதுரை : அப்பாடா கடைசி வரைக்கும் மேட்டரே இல்லாமல் ஒரு பதிவு போட்டாச்சு .... )No comments: