Google + பக்கத்துக்கு எளிதாக செல்ல புதிய வசதி..!

நண்பர்களே, இணைய உலகில் Google + ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிந்ததே ...!

இந்த Google + வைத்து பற்பல இணைய பக்கங்கள் நமக்கு பல்வேறு வசதிகளை தந்துகொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் ஒரு சூப்பர் வசதி பற்றித்தான் இந்த பதிவு.

நாம் எல்லோரும் கூகிள் + கணக்கு வைத்திருப்போம், ஆனால், அந்த வெப் பக்கத்தை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்,

 ஏனென்றால் அந்த URL கொஞ்சம் பெரிதாக இருக்கும்,மேலும் நம்முடைய ID எண் கூட அதில் வரும்,

இதை எளிமையாக்கவும், நம்முடைய Google + வெப் பக்கத்தை அடுத்தவரிடம் அழகாக சொல்லவும் ஒரு தளம் நமக்கு வழி செய்கிறது.

இந்த வசதியை பெற முதலில் உங்கம் கூகிள் + ID Number தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் Google+ ID தெரிந்து கொள்ளும் முறை:


அதன் பிறகு இங்கு நுழைந்து கொள்ளுங்கள்

பின்பு, ஒவ்வொரு STEP - ஆக செய்யவும்.



நீங்கள் Add கொடுத்தவுடன் கீழே வரும் short name குறித்து கொள்ளுங்கள்.

 இனி யாரிடமாவது உங்கள் கூகிள் + பற்றி சொல்ல வேண்டுமானால் அந்த short name மட்டும் சொன்னால் போதும்.

அந்த short name யை மட்டும் நமது ப்ரௌசெரில் கொடுத்தல் நமது கூகிள் + பக்கம் தானாக ஓபன் ஆகம்.

என்னுடைய கூகிள் + பக்கத்துக்கு செல்ல - www.gplus.to/erodethangadurai

- இதில் நம்முடைய நம்முடைய நம்முடைய உண்மையான பெயரைத்தான் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ,

நமக்கு பிடித்த பெயரை கொடுத்தாலும் அது தானாக நம்முடைய கூகிள் + பக்கத்திற்கு வந்து விடும் .

குறிப்பு :

இதில் ஒரு ID நம்பர்க்கு ஒரு short Name மட்டுமே உருவாக்க முடியும்.

இந்த Short Name ( URL ) ஒருமுறை மட்டுமே Screen - இல் வரும் கவனமாக குறித்துகொள்ளவும்.

உங்கள் பெயர் தமிழில் இருந்தால் -ஆங்கிலத்தில் கொடுத்துக்கொள்ளவும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளையும் ஒட்டுக்களை போட்டு செல்லுங்கள்.

அறிவிப்பு :


நண்பர்களே கூகிள்+ வசதி கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவரா.. ?
 
 
நீங்களும் உடனே அந்த வசதியை அனுபவிக்க வேண்டுமா.. ?
 
உங்களுக்கும் கூகுளின் + அழைப்பு வேண்டுமா .. ?
 
கீழே கருத்து ( கமெண்ட்ஸ் ) பகுதியில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு கூகுள் பிளஸ் அழைப்பை நான் அனுப்புகிறேன்.
 

உங்கள் மெயிலுக்கு அழைப்பு வந்தவுடன் அதில் உள்ள Learn More about Google+ என்ற பட்டனை அழுத்தி கூகுள் + தளத்திற்கு சென்றால் ஒரு சிறிய விண்டோவில் உங்களுக்கான சில தகவல்களை கேட்கும்.
 
 
அதை கொடுத்து கீழே உள்ள Join என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
 
 
இது போன்று அனுப்பப்படும் அழைப்புகளில் பெரும்பாலான வர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.( எனக்கு கூட இந்த வகையில் தான் கிடைத்தது ) .
 
 
உடனே அனுப்புங்கள் ... ! நன்றி .....!


No comments: