இலவசம்... இலவசம்.." 3G Data Card " இலவசம்...!


நண்பர்களே, இன்று இந்தியாவில் தொலை தொடர்பு துறை வெகுவாக முன்னேறி வருகிறது.

நமது நாட்டில் 15 க்கும் மேற்பட்ட டெலிகாம் கம்பனிகள் சேவை வழங்கி வருகின்றன.

நமது நாட்டில் CDMA  மற்றும் GSM  என்ற இன்று இரண்டு தொழில்நுட்பத்திலும்,தரமான சேவைகளை பல கம்பனிகள் வழங்கி வருகின்றன.

சமிபகாலமாக அனைத்து கம்பனிகளும் இன்டர்நெட் சேவை வழங்குவதில் கவனம் செலுத்த துவங்கி விட்டன.

குறிப்பாக 3G  சேவை வந்த பிறகு இந்த சேவைக்கான வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துள்ளது.

மொபைல் கம்பனிகள் இன்டர்நெட் சேவை வழங்க " Data Card " அவசியமான ஒன்றாகும். 

இன்று இந்தியாவில் இரண்டு வகையான   " Data Card " கள் கிடைகின்றன.

CDMA  நிறுவனங்கள் " EVDO " என்ற வகையை சார்ந்த " Data Card " களையும், GSM நிறுவனங்கள் 2G / 3G என்ற வகையை சார்ந்த " Data Card " களையும் கொண்டு இன்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

" EVDO " - வகை " Data Card " என்றால் என்ன ?

இந்த வகை " Data Card " கள் CDMA  நிறுவனங்கள் வழங்கும் சேவையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும்.

இதன் வேகம் 144 Kbps -ல் இருந்து அதிகபட்சம் 3 .1 Mbps வரை இருக்கும் ( இந்தியாவில் 1x Speed / 3x speed என்று சொல்லுவார்கள்).


இந்தியாவில் இந்த " EVDO " - வகை " Data Card " கள் ரிலையன்ஸ். டாடா , எம் டி எஸ் , வெர்ஜின், எம் டி என் எல் -  போன்ற டெலிகாம் கம்பனிகள் வழங்கும் சேவையில் கிடைக்கும்.

இந்த வகை " Data Card " களின் விலை Rs .1600 முதல் Rs 4500 வரையில் கிடைக்கும்.( இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு தனி கட்டணம் பொருந்தும் ).

இந்த வகை " Data Card " களை உலகெங்கும்  " ZTE,Huawei,Qualcomm, போன்ற கம்பனிகளும், இந்தியாவில் " Micromax,Beetel,Lava Mobiles,Olive Telecom,Videocon, போன்ற கம்பனிகளும் விற்பனை செய்து வருகின்றன.

" EVDO " - வகை " Data Card " கள் பெரும்பாலும் அந்தந்த டெலிகாம் கம்பனிகள் வழங்கும்" Operator-Locked" வகையில் மட்டுமே கிடைக்கும்.

(பெரும்பாலும் " Operator-Locked" வகை " Data Card " களில் அந்தந்த டெலிகாம் கம்பனிகளின்  சேவை மட்டுமே பயன்படுத்த முடியும் , வேறு நிறுவன சேவைக்கு மாற்ற முடியாது.)

" 2G / 3G - GSM " - வகை " Data Card " என்றால் என்ன ?

இந்த வகை " Data Card " கள் GSM  நிறுவனங்கள் வழங்கும் சேவையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும்.

இதன் வேகம் 2G அலைவரிசையில் ( GPRS /EDGE ) 77 Kbps -ல் இருந்து  அதிகபட்சம் 256 Kbps  வரை இருக்கும்.

மேலும் 3G அலைவரிசையில் ( HSDPA / HSUPA ) 3 .6 Mbps  -ல் இருந்து  அதிகபட்சம் 21 Mbps  வரை இருக்கும்.


இந்தியாவில் இந்த " 2G / 3G - GSM " - வகை " Data Card " கள் ஏர்செல்,வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ்-gsm . டாடா-gsm , வெர்ஜின்-gsm ,ஐடியா,BSNL -  போன்ற டெலிகாம் கம்பனிகள் வழங்கும் சேவையில் கிடைக்கும்.

இந்த வகை " Data கார்டு " களின் விலை Rs .1599 முதல் Rs 4999 வரையில் கிடைக்கும்.( இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு தனி கட்டணம் பொருந்தும்).

முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்த வகை " Data Card " களை தயாரித்து விற்பனை செய்கின்றன.


இந்தியாவில் " Micromax,Beetel,Lava Mobiles,Olive " போன்ற கம்பனிகள் " Unlocked Data Card "  தயாரித்து விற்பனை செய்கின்றன.

இது தவிர , 3G அலைவரிசையில் இயங்கும் Data Card " களை   Wi Fi  யாக மாற்றும் " Wireless Routers - Type "  Data Card  களும் விற்பனைக்கு வர துவங்கி விட்டன.

எனவே நண்பர்களே நான் தலைப்பில் சொன்னது போல இலவசம் என்ற பெயரில் " Data Card " களை வாங்கி  ஏமாறாமல் உங்கள் தேவைக்கும் ,வசதிக்கும் ஏற்ற சரியான Data Card களை தேர்வு செய்து வாங்கி பயன் பெறுங்கள்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ERODE THANGADURAI

Back to top