செல்போனில் இன்டர்நெட் சேவை விரைவாக பயன்படுத்த - " GPRS Settings " ( Must Read )நண்பர்களே, இந்தியாவில் மொபைல் போன் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. 

இந்த துறையில் ஏற்படும் மாற்றங்களும் , புதிய கண்டு பிடிப்புகளும் நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது.

இந்தியாவில் இப்போது மொபைல் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே  அதிகரித்து வருகிறது.

எனவே தான் மொபைல் கம்பனிகளும்  மொபைல் இன்டர்நெட் வசதிக்கு பற்பல விதமான ப்ளான்களை வைத்துள்ளனர். 

என்னதான் நல்ல பிளான்கள் இருந்தாலும் நம்முடைய மொபைல் போன் அதற்க்கு சப்போர்ட் செய்யவேண்ண்டும். 

நாம் வைத்திருக்கும் மாடல் க்கு ஏற்ற GPRS செட்டிங் செய்தால் தான் நம்முடைய போனில் இன்டர்நெட் Connect ஆகும். 

சில சமயங்களில் நாம் வைத்திருக்கும் மாடல் க்கு GPRS செட்டிங் இல்லை என்று Coustomer Care -ல் சொல்லுவார்கள்.

அந்த சமயங்களில் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும்,
இன்னும் சொல்லப்போனால் இப்போது வரும் பல கம்பனிகளின் டபுள் சிம் செல்போன் களுக்கு GPRS செட்டிங் கிடைக்காது.

எனவே அந்த போன்களிலும் GPRS Manual செட்டிங்க்ஸ் செய்யவேண்டியிருக்கும்.

எனவே நான் இந்த பதிவில் அணைத்து கம்பனிகளின் GPRS Manual செட்டிங்க்ஸ்  தொகுத்து கொடுத்துள்ளேன்.

தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

Manual Settings for Vodafone GPRS

Account Name – Vodafone_GPRS
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Access Point Name – portalnmms
Full Internet Access Point Name – www
Proxy and Server address – 10.10.1.100
Proxy and Server Port – 8080
Homepage – www.google.com
Authentication Type – Normal

Manual Settings for Airtel GPRS

Homepage – any page you want to set.
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes.
Proxy and Server Adress – 202.56.231.117
Proxy and Server Port – 8080
Data bearer – GPRS or Packet Data.
Access Point Name – airtelgprs.com
Authentication Type – Normal
Use preferred access point – No

Manual Settings for  Airtel Live

Account Name – Airtel_live
Homepage – http://live.airtelworld.com
Username – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Proxy and Server Adress – 100.1.200.99
Accespoint Name – airtelfun.com
Proxy and Server Port – 8080
Data bearer – GPRS/ Packet Data
Authentication Type – Normal

Manual Settings for Idea GPRS

Account Name – idea_GPRS
Username – Blank
Password – Blank
Homepage – http://wap.ideafresh.com
Proxy and Server Port – 8080
Proxy and Server adress – 10.4.42.45
Databearer – GPRS / Packetdata
Acces Point Name – imis
Proxy – Enabled/yes
Authentication Type – Normal

Manual Settings for Bsnl GPRS

Account Name – BPL WAP
Username – <Blank>
Password – <Blank>
Proxy – Enabled/yes
Homepage – http://wap.mizone.bplmobile.com
Proxy and Server address – 10.0.0.10
Proxy and Server Port – 8080
Acces Point Name – mizone
Data bearer – GPRS/ Packetdata
Authentication Type – Normal

Manual Settings for Aircel GPRS

NAME : Aircel Online
Homepage :http://google.com
User Name :Blank
Password :Blank
Use preferred Access Point :aircelgprs or aircelwap
Open Access Point Setting
Proxy:Enabled
Proxy address :192.168.035.201
port :8081
Data Bearer : Packet Data

Manual Settings for Reliance GPRS
apn: rcomwap
proxy: 10.239.221.5
port: 8080
Homepage: wap.rworld.co.in

Manual Settings for TATA DOCOMO GPRS

Account Name – DOCOMO_GPRS
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Access Point Name –TATA.DOCOMO.DIVE.IN
Full Internet Access Point Name – www
Proxy and Server address – 10.124.94.7
Proxy and Server Port – 8080
Homepage – http://divein.tatadocomo.com
Authentication Type – Normal

Manual Settings for Videocon GPRS

Connection Name : Videocon Internet
Data Bearer : Packet Data
APN : vinternet.com
Username & Password: Blank
Homepage : www.google.com
Proxy server : Blank
Proxy port : Blank

Manual Settings for Videocon WAP

Connection Name : Videocon GPRS
Data Bearer : Packet Data
APN : vgprs.com
Username & Password: Blank
Homepage : http://wap.live.in
Proxy server : 10.202.5.145
Proxy port : 8799

Manual Settings for Videocon MMS

Connection Name : Videocon MMS
Data Bearer : Packet Data
APN : vgprs.com
Username & Password: Blank
Homepage : http://10.202.4.119:10021/mmsc/
Proxy server : 10.202.5.145
Proxy port : 8799

Manual Settings for Uninor GPRS

Profile name: uninor
Homepage: www.google.com (you can use your own home page)
Enable Proxy
Ip address: 10.58.10.58
Port: 8080
Linger time: 90
Don’t enable DNS
Bearer: choose GPRS
Advanced settings:
APN: uninor
Login: Leave blank
Password: Leave blank

Manual Settings for Virgin GSM
VBYTES
APN: m.vbytes.in
Home Page: http://m.vbytes.in
1.Proxy Server: 10.124.94.8
port:8080

VINTERNET

Service Description: vinternet
APN: vinternet.in
no proxy and port

 
- நண்பர்களே, இதில் இப்போது வெளிவரும் " Smart phone  வகைகளான Blackberry, Android, Iphone, HTC போன்ற மாடேல்களுக்கு " APN " மட்டும் சேர்த்தால் போதும்.
 
மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்,
 
என்னால் முடிந்தவரை தகவல்களை தருகிறேன்.  
 
 

இலவசம்... இலவசம்.." 3G Data Card " இலவசம்...!


நண்பர்களே, இன்று இந்தியாவில் தொலை தொடர்பு துறை வெகுவாக முன்னேறி வருகிறது.

நமது நாட்டில் 15 க்கும் மேற்பட்ட டெலிகாம் கம்பனிகள் சேவை வழங்கி வருகின்றன.

நமது நாட்டில் CDMA  மற்றும் GSM  என்ற இன்று இரண்டு தொழில்நுட்பத்திலும்,தரமான சேவைகளை பல கம்பனிகள் வழங்கி வருகின்றன.

சமிபகாலமாக அனைத்து கம்பனிகளும் இன்டர்நெட் சேவை வழங்குவதில் கவனம் செலுத்த துவங்கி விட்டன.

குறிப்பாக 3G  சேவை வந்த பிறகு இந்த சேவைக்கான வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துள்ளது.

மொபைல் கம்பனிகள் இன்டர்நெட் சேவை வழங்க " Data Card " அவசியமான ஒன்றாகும். 

இன்று இந்தியாவில் இரண்டு வகையான   " Data Card " கள் கிடைகின்றன.

CDMA  நிறுவனங்கள் " EVDO " என்ற வகையை சார்ந்த " Data Card " களையும், GSM நிறுவனங்கள் 2G / 3G என்ற வகையை சார்ந்த " Data Card " களையும் கொண்டு இன்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

" EVDO " - வகை " Data Card " என்றால் என்ன ?

இந்த வகை " Data Card " கள் CDMA  நிறுவனங்கள் வழங்கும் சேவையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும்.

இதன் வேகம் 144 Kbps -ல் இருந்து அதிகபட்சம் 3 .1 Mbps வரை இருக்கும் ( இந்தியாவில் 1x Speed / 3x speed என்று சொல்லுவார்கள்).


இந்தியாவில் இந்த " EVDO " - வகை " Data Card " கள் ரிலையன்ஸ். டாடா , எம் டி எஸ் , வெர்ஜின், எம் டி என் எல் -  போன்ற டெலிகாம் கம்பனிகள் வழங்கும் சேவையில் கிடைக்கும்.

இந்த வகை " Data Card " களின் விலை Rs .1600 முதல் Rs 4500 வரையில் கிடைக்கும்.( இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு தனி கட்டணம் பொருந்தும் ).

இந்த வகை " Data Card " களை உலகெங்கும்  " ZTE,Huawei,Qualcomm, போன்ற கம்பனிகளும், இந்தியாவில் " Micromax,Beetel,Lava Mobiles,Olive Telecom,Videocon, போன்ற கம்பனிகளும் விற்பனை செய்து வருகின்றன.

" EVDO " - வகை " Data Card " கள் பெரும்பாலும் அந்தந்த டெலிகாம் கம்பனிகள் வழங்கும்" Operator-Locked" வகையில் மட்டுமே கிடைக்கும்.

(பெரும்பாலும் " Operator-Locked" வகை " Data Card " களில் அந்தந்த டெலிகாம் கம்பனிகளின்  சேவை மட்டுமே பயன்படுத்த முடியும் , வேறு நிறுவன சேவைக்கு மாற்ற முடியாது.)

" 2G / 3G - GSM " - வகை " Data Card " என்றால் என்ன ?

இந்த வகை " Data Card " கள் GSM  நிறுவனங்கள் வழங்கும் சேவையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும்.

இதன் வேகம் 2G அலைவரிசையில் ( GPRS /EDGE ) 77 Kbps -ல் இருந்து  அதிகபட்சம் 256 Kbps  வரை இருக்கும்.

மேலும் 3G அலைவரிசையில் ( HSDPA / HSUPA ) 3 .6 Mbps  -ல் இருந்து  அதிகபட்சம் 21 Mbps  வரை இருக்கும்.


இந்தியாவில் இந்த " 2G / 3G - GSM " - வகை " Data Card " கள் ஏர்செல்,வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ்-gsm . டாடா-gsm , வெர்ஜின்-gsm ,ஐடியா,BSNL -  போன்ற டெலிகாம் கம்பனிகள் வழங்கும் சேவையில் கிடைக்கும்.

இந்த வகை " Data கார்டு " களின் விலை Rs .1599 முதல் Rs 4999 வரையில் கிடைக்கும்.( இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு தனி கட்டணம் பொருந்தும்).

முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்த வகை " Data Card " களை தயாரித்து விற்பனை செய்கின்றன.


இந்தியாவில் " Micromax,Beetel,Lava Mobiles,Olive " போன்ற கம்பனிகள் " Unlocked Data Card "  தயாரித்து விற்பனை செய்கின்றன.

இது தவிர , 3G அலைவரிசையில் இயங்கும் Data Card " களை   Wi Fi  யாக மாற்றும் " Wireless Routers - Type "  Data Card  களும் விற்பனைக்கு வர துவங்கி விட்டன.

எனவே நண்பர்களே நான் தலைப்பில் சொன்னது போல இலவசம் என்ற பெயரில் " Data Card " களை வாங்கி  ஏமாறாமல் உங்கள் தேவைக்கும் ,வசதிக்கும் ஏற்ற சரியான Data Card களை தேர்வு செய்து வாங்கி பயன் பெறுங்கள்.


நோக்கியா - புதிய டூயல் சிம் போன்கள் வந்துவிட்டன .. !


நண்பர்களே, இன்று இந்தியாவில் ஏராளமான கம்பனிகள் டூயல் சிம் செல்போன் தயாரிப்பில் களம் இறங்கி பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 

இருந்தாலும் நம் விருப்பம் நோக்கியா அந்த வகை மாடல்களை தராதா என்பதாகும். நம்  விருப்பத்தை  நிறைவேற்ற நோக்கியா தயாராகி விட்டது.

Nokia X1-01
C2-00

ஆம் , நோக்கியாவின் புதிய டூயல் சிம் செல்போன்  இந்தியாவில் அறிமுகமாக போகிறது.  A Twin’s Day Out என்ற பெயரில் வரும் 4 -ம் தேதி இந்தியா முழுவதும் நோக்கியாவின்  டூயல் சிம் செல்போன் விற்பனைக்கு   வர உள்ளது. 

Nokia X1-01 மற்றும்  Nokia C2-00  என்ற இரண்டு புதிய மாடல்களில் டூயல் சிம்வசதிகளுடன் பல்வேறு சிறப்மம்சங்களும் கொண்டுள்ளது இந்த இரண்டு மாடல்களும்.   

Nokia X1-01 - மாடலின் சிறப்பம்சங்கள் :


Nokia X1-01- இந்த மாடலில் பாட்டரி Standby time 40 நாட்களுக்கும் மேல் வரும் என்றும் Talk time 13  மணி நேரம் பேசலாம்.அடிப்படை தேவைகளுக்கு  மட்டும் பயன் படுத்துவதாக இருந்தால் இந்த மாடல் மிக சிறந்தது.   

அடுத்த மாடல் C2-00 நிறைய அம்சங்கள் கொண்டுள்ளது.

Nokia C2 -00 - மாடலின் சிறப்பம்சங்கள் :

 C2-00 நாம் அதிகம் பயன்படுத்தும் வசதிகளான கேமரா,GPRS,Bluetooth,போன்ற வசதிகளுடன் வந்துள்ளது.

இன்று சந்தையில் நிறைய  கம்பனிகள் தரமான செல்போன் தயாரித்து, விற்பனையில்  ஈடுபட்டு, நோக்கியா விற்கு போட்டியாக திகழ்கின்றன.

நோக்கியா இந்த இரண்டு  மாடல்களை  வைத்து சமாளிக்குமா ? பொறுத்திருந்து பார்போம்.   


" Amoled Screen " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )

நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ?


 " Amoled Screen  " 

நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

Thanks to : Vodafone & Kochar.
ரஜினிகாந்த் பற்றி புது சர்ச்சை - விளக்கம் தாருங்கள் ..!


நண்பர்களே , இந்த பதிவை வெளிடும் முன் பலமுறை யோசித்துவிட்டு ஒரு குழப்பமான மன நிலையில்   தான் வெளியிடுகிறேன். சமிபத்தில் என் மெயில் க்கு  வந்த ஒரு செய்தியை அப்படியே தந்துள்ளேன் .

படித்துப்பாருங்கள், இது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி .
( இந்த மெயில் உங்களுக்கும் கூட வந்திருக்கலாம் ) .


அந்த செய்தி : " மூடர்களே ..... சமீபத்தில் செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.

இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!!

யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.

உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை,

அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன.

உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.

இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம். யோசியுங்கள்........

நாட்டிலும், வீட்டிலும் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ..... அதை போய்  கவனியுங்கள்....... இன்னமும் சினிமா மூடர்களாக இருக்காதீர்கள்  "      - இப்படி தான் வந்தது அந்த மெயில். ரஜினி மேல் என்ன கோவம் ? ஏன் இப்படி மிக காட்டமான வரிகள் ..? எனக்கு  புரிய வில்லை ..!  அவர் ஒரு நல்ல நடிகர் .. எல்லோருக்கும் பிடித்தமானவர் .. ஆன்மிகவாதி.. பண்பாளர் ... இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்காக நாம் வருத்தப்படுவதும் , அவர் நல பெற பிராத்தனைகள் செய்வதும் என்ன குற்றம் .. ? 
   
இது ஒரு பக்கம் இருக்கட்டும் , அந்த மெயில் குறிப்பிட்டுள்ள ஒரு வரிகளில் கூட பொய் இல்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே ....? அவர் நம்மை பொறுத்தவரை  ஒரு சினிமா நடிகர் மட்டுமே ..! அவருக்காக நாம் வேண்டுதல் இருப்பது, மண்சோறு சாப்பிடுவது, பிராணிகளை உயிர் சேதம் இடுவது, உண்ணா விரதம் இருப்பது ...   என்பதில்லாம் எந்த வகையில் சரி .. ? ? 
இப்படி இரண்டு வேறுபட்ட கருத்துகள் என் மனதில் ஓடுகின்றன. ஒரு அடிப்படை ரஜினி ரசிகனான எனக்கு எதை இப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை .

நண்பர்களே உங்கள் கருத்துகள் மூலம் தெளிவு  படுத்துங்கள்...   !  


ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முன்  பேசிவிட்டு சென்றதாக வெளியிடப்பட்டுள்ள  ஆடியோவை இங்கு சென்று கேளுங்கள்..

" Google SMS " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )

 
நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

 அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? Google SMS "Google SMS  - என்பது Google  நிறுவனம் வழங்கும் ஒரு அற்புதமான இலவச சேவையாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் SMS வாயிலாக பெற முடியும். 

நமக்கு தேவையான தகவலின் keyword  டைப் செய்து 9773300000 - என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். இதற்கு நமது நார்மல் SMS கட்டணம் மட்டுமே செலவாகும்.    

மேலும் இந்த வசதியின் மூலம் நமது Google  காலண்டர் மற்றும் Upcoming events பற்றிய தகவல்களையும் பெற முடியும்.  இது எல்லா வகையான போன் களுக்கும் சப்போர்ட் செய்யும்.    

நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !


Thanks to : Vodafone & Kochar.