" உங்கள் போட்டோ " அனிமேஷன் வாழ்த்து அட்டையில்.. !நண்பர்களே, நலமா ? இன்று உலகெங்கும் வாழ்த்து சொல்வது பெருகி வருகிறது.

நண்பர்களுக்குள் மட்டும் இல்லாமல் குடும்பதிற்குள்  கூட நாம் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சி அடைகிறோம்.இணையம்  மூலம் வாழ்த்து சொல்ல பல வழிகள் உள்ளன.

இனி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல்  " Animation "  அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம்.

இந்த அற்புதமான வசதியை தரும் தளம் பற்றி இந்த பதிவில் பார்போம். வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம் , வெற்றி பெற்ற நாள் , பாரட்டுவிழா , பண்டிகைகள் , விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை " Animation "  னுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான் அந்த வகையில் நமக்கு " Animation " மூலம்  வாழ்த்துச்சொல்ல " Got Free Cards "  என்ற இந்த தளம் உதவுகிறது.இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணினியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து  எல்லாம் சரியாகதெர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம்.


இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின்  பெயர் மற்றும் இமெயில் முகவரி , மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

இனி வாழ்த்துச்செய்தியை வெறுமையாக அனுப்பாமல் animation னுடன் அனுப்ப விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.


Thanks To  : Got-Free-Ecards


 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ERODE THANGADURAI

Back to top