ஆன்லைன் Audio File convert - ஒரு சிறந்த தளம். .!


நண்பர்களே நலமா ?  இன்றைய புதிய  பதிவில் ஆன்லைன் பைல் convert பற்றி பார்க்கபோகிறோம். 

நண்பர்களே நாம்  Audio fileகளை ஒரு file formatலிருந்து மற்றொரு file formatஆக convert செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். Audio fileகளை convert செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன.

மென்பொருள்களின் உதவி இல்லாமல் Audio fileகளை convert செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. அந்த தளம் பற்றிய பதிவு தான் இது. நாம் சாதாரணமாக பாடல்களை convert செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக convert செய்வோம்.சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும்.Browsing மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை convert செய்வது என்றால் அதற்கு ஒரே வழி online மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை convert செய்ய ஒருதளம் உதவி செய்கிறது.

அந்த தளத்தின் பெயர்  :இந்த தளத்திற்கு  இங்கு செல்லவும்.

இந்த தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த format ஆக convert செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் button ஐ அழுத்தவும்.சில நொடிகளில் உங்களுடைய பாடலானது convertசெய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். இதில் iphone  ringtone ஆக மாற்றவும் முடியும் என்பது கூடுதல் வசதி.  

 

No comments: