இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ..!

 
 
 
 
 
 
 
 
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ..!
  
 

பிளாக்கர்க்கு 7 புதிய வடிவங்கள் - கூகிள் வழங்கும் சூப்பர் வசதி ..!

         

             நண்பர்களே, நாள்தோறும் ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு புது வசதியை கூகிள் வழங்கி வருவது வழக்கம். அந்த வகையில் ஒரு சூப்பர் வசதியை பட்டிய பதிவுதான் இது.

நாம் நமது ப்ளாக்கை அழகாக வைத்திருக்க புது புது டெம்ப்ளட் பயன்படுத்துவோம். இனி அது தேவை இல்லை . கூகிள் வழங்கும்" Dynamic View " வசதியை பயன் படுத்தினால் மட்டும் போதும்.

கீழே உள்ளவற்றை கொஞ்சம் கிளிக் செய்து பாருங்கள்


எப்படி இருக்கிறது நண்பர்களே ? நீங்கள் வைத்திருக்கும் ஒரே டெம்ப்ளட் எழு வித்தியாசமான வடிவங்களில் இருக்கிறதா ?

இதில் நீங்கள் விரும்பும் வடிவத்தை உங்கள் வலைபக்கத்திர்க்கு வைத்து கொள்ளாம்.
  1. முதலில் உங்கள் ப்ளாக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  2. Dashboard பகுதில் உள்ள Template tab ஓபன் செய்து கொள்ளுங்கள்,
  3. அதில் புதிதாக " Dynamic View " என்று ஒரு மெனு வந்திருக்கும் .
  4. அதில் நுழைந்து உங்களுக்கு பிடித்த வடிவத்தை செலக்ட் செய்து save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் .... இனி உங்கள் வலைப்பூ புதிய பொலிவுடன் அழகாக இருக்கும்.அறிவிப்பு :
நண்பர்களே புதிதாக TechNewsஎன்ற ஒரு ஆங்கில தளம் உருவாக்கி உள்ளேன். இதில் தொலைதொடர்பு ,கணினி,மற்றும் இணையம் சார்ந்த புதிய செய்திகளை பகிர உள்ளேன்.

இந்த தளம் ஆரம்பித்த முக்கிய நோக்கம் என்னுடைய அலுவலக நண்பர்கள் விருப்பத்திற்காக மற்றும் ஆங்கில தளங்களுக்கு மட்டுமே பயன்படும் சில விசயங்களை பற்றியும் எழுத உள்ளேன்.

உங்களின் ஆதரவையும் தாருங்கள். TechNews தளத்திற்கு ஒரு முறை வருகை தரவும்...........

SMS அனுப்ப புது விதிமுறை - ஒரு நாளுக்கு 100 SMS மட்டும் தான்

      
 
         நண்பர்களே, நலமா... ? இந்த பதிவு மொபைல் பயன்படுத்தும் அனைவருக்கும் முக்கியமானது.
 
இந்தியாவில் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான " TRAI " ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது, இதன் படி இந்தியாவில் மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு நாளுக்கு 100 SMS மட்டும் அனுப்ப முடியும், அதாவது ஒரு மாதத்திற்கு 3000 SMS மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்ற கட்டாய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
 
 
 
நாம் எந்த நிறுவனத்தின் சேவை பயன்படுத்தினாலும் போஸ்ட் பெய்டு அல்லது ப்ரிபைடு எதுவாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும். ஏற்கனவே பெரும்பாலான நிறுவனங்கள் Unlimitted Free SMS சேவையை நிறுத்தி விட்டன .
 
TRAI அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறையால் SMS மூலமாகவே பேசிக்கொள்ளும் பலருக்கும் இது வருத்தம் தரும் அறிவிப்பாகும். இந்த புதிய விதிமுறை நாளை (27 .09 .2011 ) அமலுக்கு வருகிறது. ( இது சம்பந்தமாக அந்தந்த நிறுவனங்களும் நமக்கு SMS மூலம் தெரிவித்து வருகின்றன. ) 
 
 
ஒருவகையில் பார்த்தால் தேவையற்ற தொல்லை SMS களில் இருந்து நாம் விடுபடலாம், மற்றொரு வகையில் பார்த்தால் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட இனி நாம் Call செய்து பேச வேண்டியதிருக்கும்.
 
எது எப்படியோ நாளை முதல் SMS டைப் பண்ணுவதை குறைத்து கொள்ளுவோம்.    
     
 
அறிவிப்பு :
 
     நண்பர்களே புதிதாக TechNews என்ற ஒரு ஆங்கில தளம் உருவாக்கி உள்ளேன். இதில் தொலைதொடர்பு ,கணினி,மற்றும் இணையம் சார்ந்த புதிய செய்திகளை பகிர உள்ளேன்.
 
 
 
இந்த தளம் ஆரம்பித்த முக்கிய நோக்கம் என்னுடைய அலுவலக நண்பர்கள் விருப்பத்திற்காக மற்றும் ஆங்கில தளங்களுக்கு மட்டுமே பயன்படும் சில விசயங்களை பற்றியும் எழுத உள்ளேன்.
 
உங்களின் ஆதரவையும் தாருங்கள். TechNews தளத்திற்கு ஒரு முறை வருகை தரவும்...........
 
 

YouTube - வீடியோ தானாகவே டவுன்லோட் செய்யும் மென்பொருள் - புதிதுநண்பர்களே,இன்றைய பதிவு You Tube வீடியோ பற்றியது.

இணையத்தில் கோடிக்கணக்கான வீடியோ கொட்டி கிடைகிறது.
நமக்கு வேண்டிய பிரிவுகளில், வேண்டிய பார்மட்களில், வேண்டிய குவாலிட்டி யில் நமக்கு வகை பிரித்து தருவதில் முன்னணி தளம் தான் You Tube வீடியோ தளம்.

இந்த தளத்தில் இல்லாத வீடியோ களே இல்லை என சொல்லலாம்.

மேலும் நாம் கூகிள் கணக்கு வைத்திருந்தால் ,நம்முடைய சொந்த வீடியோ களையும் கூட இந்த தளத்தில் Upload செய்து உலகில் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் செய்யலாம்.

இந்த தளத்தில் உள்ள வீடியோ களை பார்க்கும் போதே நம்மால் டவுன்லோட் செய்ய முடியாது.( டவுன்லோட் செய்யும் வசதியை You Tube நமக்கு வழங்குவதில்லை )

ஆனால் இந்த You Tube வீடியோ தளத்தில் நாம் பார்க்கும் வீடியோ களை டவுன்லோட் செய்ய இணையத்தில் பல சாப்ட்வேர்கள் உள்ளன.


Online மூலமாக நமக்கு பிடித்த You Tube வீடியோ வின் URL கொடுத்து அந்த வீடியோ களை டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும்.

ஆனால் இன்று நான் சொல்லும் இந்த Appilication முற்றிலும் வித்தியாசமானது,அதிக வசதிகள் கொண்டது.

அந்த Application பெயர் " FastestTube " என்பதாகும்.FastestTube
இதை உங்கள் இணைய உலவியில் ஒருமுறை மட்டும் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் , இனி You Tube வீடியோ கள் டவுன்லோட் செய்வது மிக மிக சுலபம்.

" FastestTube " - சிறப்புகள் :

1 . வெறும் 290 KB மட்டுமே கொண்டது.

2 . Opera 11, Safari 5, Google Chrome, Firefox and Internet Explorer - என அனைத்து வெப் ப்ரௌசெர் களுக்கும் ஏற்றது.
3 . தனி Application -ஆகவோ, URL காப்பி செய்தோ சிரமப்பபட தேவையில்லை.
4 . நமக்கு வேண்டிய பார்மட் களில் டவுன்லோட் செய்யலாம்.
5. மிக விரைவாக டவுன்லோட் செய்கிறது.

இதை பயன் படுத்த உங்கள் வெப் ப்ரௌசெரில் இருந்து கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
இன்ஸ்டால் செய்தவுடன் ஒருமுறை உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கணினியில் எந்த Applicatin னும்இன்ஸ்டால் ஆனது போல தெரியாது.

பரவாயில்லை விடுங்கள், இப்போது You Tube தளம் செல்லுங்கள்,

உங்களுக்கு பிடித்த வீடியோ வை கிளிக் செய்து பாருங்கள் ,

இப்போது உங்கள் YouTube பிளேயர்யை கவனித்து பாருங்கள் புதிதாக Download என்று ஒரு மெனு வந்திருக்கும்.


அந்த Download மெனுவை கிளிக் செய்தால் அந்த வீடியோ டவுன்லோட் ஆகும் பார்மட் தெரியும்,

உங்களுக்கு தேவையான பார்மட் செலக்ட் செய்து டவுன்லோட் கொடுத்தால் போதும்,அந்த வீடியோ உங்கள் கணினிக்கு எளிதாக டவுன்லோட் செய்யப்பட்டு விடும்.


நீங்கள் இது வரை பயன்படுத்திய முறைகளை காட்டிலும் நான் சொல்லும் இந்த முறையில் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் YouTube வீடியோ களை டவுன்லோட் செய்ய முடியும்.

இதில் ஒரே ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் பல ப்ரௌசெர்களை பயன்படுத்துபவராக இருந்தால் ஒவ்வொரு ப்ரௌசெரிலும் இருந்து ஒரு முறை மட்டும் இந்த Applicatin இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வெப் ப்ரௌசெரில் இருந்து இங்கு சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.

facebook சாட்டிங் செய்ய சுலபமான மென்பொருள் - இலவசம்


 
நண்பர்களே , இன்று நாம் பார்க்க போகும் பதிவு Face Book சம்பந்தமானது.

இணைய உலகில் சமுக வலைதளங்களில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பது facebook தான்.

நாம் எல்லோருமே அதில் கணக்கு வைத்திருப்போம். ( இல்லாதவர்கள் இங்கு சென்று புதிதாக கணக்கு துவங்கி கொள்ளவும் ).

இந்த facebook -ல் நம்முடைய கருத்துகளையும், போட்டோ களையும், நம்முடைய நண்பர்களிடம் பகிர்ந்து வருகிறோம்.

இது தவிர , நம்முடைய ஓய்வு நேரங்களில் நம்முடைய நண்பர்களிடம் chating செய்தும் வருகிறோம். அப்படி சாட்டிங் செய்யும் வேலையை சுலபமாக செயும் ஒரு மென்பொருள் பற்றி தான் இந்த பதிவு.
 

இனி நீங்கள் facebook ல் சாட்டிங் செய்ய ஒவ்வொரு முறையும் facebook பக்கத்திற்கு சென்று login செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


அதற்க்கு பதிலாக fTalk என்ற அருமையான மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துஉங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும்.உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து முடித்ததும் ஒரு முறை மட்டும் உங்கள் facebook user name மற்றும் password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்,

இனி நீங்கள் உங்கள் மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டே உங்கள் நண்பர்களிடம் சாட்டிங் செய்து கொள்ளலாம்.

fTalk மென்பொருளின் பயன்கள்
1 . Online மற்றும் Offline நண்பர்களை தனித்தனியாக அடையாளம் காட்டும்.
2 . நம்முடைய மற்றும் நம்முடைய நண்பர்களின் Photos,Profile ,Massage போன்றவற்றையும் காட்டும்.

3 . சாட்டிங் செய்யும் பொது Emoticons களையும் பயன்படுத்தி கொள்ளலாம் .
4 . நாம் இணையத்திலோ,வேறு ஏதாவது வேலைகளோ செய்து கொண்டே சாட்டிங் செய்யலாம்.

5 . நம்முடைய Status பகுதியில் சொல்ல விரும்பும் கருத்துகளை இங்கிருந்தே post செய்யலாம்.
6 . நம்முடைய Online Status நமக்கு வேண்டியவாறு மாற்றி கொள்ளலாம்.


இவ்வளவு பயன்பாடுளை கொண்ட இந்த மென்பொருளை முழுவதும் இலவசமாக கீழே உள்ள பட்டனை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

நான் பயன்படுத்தி வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது. நீங்களும் பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.

இங்கு பதிவு போட " மேட்டர் " தரப்படும் ......

வணக்கம் நண்பர்களே ,
இடைவிடாத வேலைகளுக்கு மத்தியில் ( சி.பி. : அப்படி நீ என்னடா பண்றே ? ) இணையத்தின் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது.( ஜோதிடர் சதிஸ் குமார் : பரவால்ல . . பரவால்ல... )
இனி தினமும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் ( கரன் : என்னது இனி தினமுமா ? ) இந்த பதிவை துவக்குகிறேன்.

இன்றைய பதிவு நிறைய சிறப்பு வாய்ந்தது. ( சௌந்தர் : அப்படியா ? )
முதல் சிறப்பு இன்று நமது இந்திய திரு நாட்டின் 65 -வது சுதந்தர திருநாள். ( பன்னிகுட்டி ராம்சாமி : அது நாட்டுக்கு சிறப்பு, உனக்கு என்ன ? )

இந்த அருமையான நாளில் இந்த இணையம் வழியாக நம்முடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் தனி திறமைகளையும் வெளி உலகிற்கு காட்டக்கூடிய சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு,


இணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்தர திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ( நிரூபன் : சரி சரி விசயத்துக்கு வா )

அடுத்த சிறப்பு நான் பதிவுலகில் எழுத துவங்கி ஒரு வருடம் ஆகிறது.( சங்கரலிங்கம் : அப்படி நீ என்ன எழுதி கிழிச்சிட்டே .. ? )

பதிவுலகத்தில் எத்தனியோ ஜாம்பவான்கள் பல வருடங்களாக பல்வேறு சுவையான பதிவுகளை எழுதி வந்தாலும், நானும் இங்கு ஒருவருடம் தாக்கு பிடித்து வந்து விட்டேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது .

அடுத்த சிறப்பு நான் இதுவரை 75 பதிவுகளை எழுதிவிட்டேன் ( சசிகுமார் : டேய் 750 பதிவு எழுதனவங்க எல்லாம் சும்மா இருக்காங்க ... ) அது சரி தான் ,இருந்தாலும் நானெல்லாம் 75 பதிவு எழுதுவேன் என்பது ஒரு சிறப்பு தானே ..?

என்னுடைய பெரும்பாலான பதிவுகள் செல்போன் மற்றும் தொலை தொடர்பு துறை சம்பந்தப்பட்டதாகவே இருக்கும் ( கந்தசாமி : வேற எதாச்சும் தெருஞ்சதானே...? ) அதற்க்கு காரணம் ,

என்னுடைய பணி தான். நான் அந்த துறையில் பணியாற்றுவதால் அத்துறை சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகளை பதிவுகளாக தருகிறேன் .

இனி முடிந்த வரை இணையம், கம்ப்யூட்டர்,செல்போன்,பொழுதுபோக்கு சம்பத்தப்பட்ட செய்திகளை தரப்போகிறேன். ( ராஜபாட்டை ராஜா : எதாச்சும் நல்லதா கொடுத்தா சரி ..!)

அடுத்த சிறப்பு என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை இன்று தான் 100 வந்திருக்கிறது ( மதி சுதா : உனக்கு 100 பேரா ...? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல ...? )
என்ன செய்வது இந்த 100 Followers திருப்தி அடைவது மாதிரி நான் எழுத வேண்டுமே...? அதுவே எனக்கு கஷ்டம் ...!

இருந்தாலும் என்னை நம்பி வந்த இந்த 100 Followers இனியும் ஏமாற்ற போவதில்லை. ( சங்கவி : அடப்பாவி என்ன செய்ய போறே ...? )

என்னுடைய 100 Followers , 1000 Followers ஆக உயரும் வரை நான் எழுதுவதை நிறுத்த போவதில்லை ( மங்குனி அமைச்சர் : கக்கக்க போ ) .

இந்த நேரத்தில் இந்த சிறப்புகள் எல்லாம் வர காரணமாக இருந்த அனைத்து திரட்டிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

மீண்டும் ஒரு முறை என்னுடைய பழைய 100 Followers , மேலும் இனி வரபோகும் புதிய Followers , அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும்,

இனிய சுதந்தர திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . ஜெய் ஹிந்த் ...!

( ஈரோடு தங்கதுரை : அப்பாடா கடைசி வரைக்கும் மேட்டரே இல்லாமல் ஒரு பதிவு போட்டாச்சு .... )G Mail - வழங்கும்" Preview Pane "புதிய வசதி.. !நண்பர்களேஎன்னுடைய Gmail ல் ஒரு சில மாற்றங்களை செய்து 
கொண்டிருந்த போது ஒரு புது வசதி வந்திருப்பதை பார்த்தேன். 

நீங்களும் அதை பார்த்திருக்கலாம். அந்த வசதியை எல்லா நண்பர்களும்
பயன்படுத்த உதவியாக இந்த பதிவை எழுதுகிறேன்.

பொதுவாக Microsoft Outlook பயன்படுத்தும் போது நமது மெயில் களை
Preview Pane முறையில் பார்க்கும் படி வைத்திருப்போம்,

இதன் மூலம் நமது மெயில் பாக்ஸ் அழகாகவும்
தனித்தனி மெயில் களை  Preview பார்பதற்கு வசதியாகவும் இந்த முறை இருக்கும். 

அதே போல Gmail ல் நமது மெயில் களை PreviewPane முறையில் 
பார்க்கும்  வசதியை கூகிள் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த வசதியை நீங்களும் பெற

1.) உங்கள் G mail - ல் Setting பகுதியில் நுழைந்து கொள்ளுங்கள்.


2.) அங்கு உள்ள " Preview Pane " என்ற மெனு வை Enable செய்யவும்.


3.) முதல் பக்கத்தில் படத்தில் காட்டி உள்ள இடத்தில் கிளிக் செய்யவும்.


இப்போது உங்களுக்கு வந்திருக்கும் ஏதாவது ஒரு மெயில் கிளிக் செய்து பார்க்கவும் ,

பக்கத்தில் அழகாக " Preview Pane "  முறையில் உங்கள் மெயில் தெரியும்.

இப்போது என்னுடைய மெயில் பாருங்கள்.


உங்களுக்கம் இந்த வசதி தேவைப்பட்டால் இந்த முறையில் செய்து கொள்ளுங்கள் ...!

நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.

1GB அளவுள்ள பைல்-களை சுலபமாக அனுப்பலாம்.. ( Must Read )


நண்பர்களே, 

ஆன்லைன் பைல் ஷேரிங் ( OnlineFileSharing ) பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதை சுலபமாக செய்யும் ஒரு தளம் பற்றித்தான் இந்த பதிவு.நம்மிடம் உள்ளபைல் களை மெயில் மூலம் அனுப்ப இணையத்தில் பல தளங்கள் உள்ளன. 

இவற்றில் சில சரியாக வேலை செய்யும்,சிலது சரிவர செய்யாது.
நான் நேற்று சுமார் 800Mb அளவுள்ள 6 பைல்களை ஈ மெயில் செய்ய வேண்டி இணையத்தில் உலவிய பொது இந்த தளம் கண்ணில் சிக்கியது.

அதை உங்கள் வசதிக்கு நீங்களும் பயன்படுத்திக் கொள்ளவே இந்தபதிவு.இந்த தளத்தின் பெயர் : UploaderBOX.com
இந்த தளத்திற்கு செல்ல இங்கு செல்லவும்.

இதன் சிறப்புகள் :

பைல் ஷேரிங் முழுக்க முழுக்க இலவசம்.

Registration செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதிகபட்சம் 1024 MB ( 1GB ) வரை பைல் களை அனுப்பலாம். 

ஒரே சமயத்தில் பல பைல் களை செலக்ட் செய்து அனுப்பலாம். 

ஒரே சமயத்தில் பல ஈ-மெயில் களுக்கும்  செலக்ட் செய்து அனுப்பலாம்.

நாம் அனுப்பும் பைல் களை  Password போட்டு வைத்து கொள்ளலாம்.


  
நான் நேற்று மட்டும் சுமார் எட்டு முறை 800mbஅளவுள்ள பைல் கள் அனுப்பினேன்,

மிகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பைல்கள் சென்றது. 

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் ... உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். 

நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.
செல்போனில் Unlimitted - 2G { GPRS / EDGE } சேவை வேண்டுமா ? ( Must Read )

 
நண்பர்களே, இன்று தொலை தொடர்பு துறையில் டேட்டா களின் ஆதிக்கம் { " Data Service " } அதிகமாகி விட்டது.
 
நம்மில் பெருபாலனானவர்கள் நமது மொபைலில் " GPRS அல்லது 3G " பயன்படுத்தி வருகிறோம்.
 
3G கட்டணங்கள் மிகவும் அதிகம் என்பதாலும்,Covarege ஏரியா குறைவு என்பதாலும் 3G பயன்பாட்டை காட்டிலும் 2G { GPRS / EDGE } பயன்பாடு நம்மில் அதிகம்.
 
2G { GPRS / EDGE } -க்கான கட்டணங்கள் மிக குறைவாக Unlimitted பிளான் Rs .98 முதலே நமது நாட்டில் கிடைகிறது.
 
ஆனால் சமீபத்தில் ஏர்செல்,ஏர்டெல்,வோடபோன்,ஐடியா உள்ளிட்ட அனைத்து கம்பனிகளும் Unlimitted பிளான் நிறுத்தி விட்டன.
 
அதற்க்கு பதிலாக அதே கட்டணத்திற்கு 2GB முதல் 4GB வரை மட்டுமே பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளன.
 
அதற்க்கு மேலே பயன்படுத்தினால் 10p/10kB which is Rs. 10/MB or Rs. 10,000/GB என்று நமது பில் எகிறிவிடும்.
 
எனவே நாமும் நம்முடைய பயன்பாட்டை குறைத்து கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.அதற்க்கு உதவியாக வந்துள்ளது தான் " Opera Software " in " Opera Mini Turbo " .
 
இந்த மொபைல் ப்ரௌசெர் எல்லாவகையான { (Windows, Linux, Mac, iOS, Android, Symbian, Java, MeeGo etc } மொபைல் க்கும் ஏற்றது.
 
மேலும் இந்த புதிய " Opera Mini Turbo " ப்ரௌசெர், நமது 2G { GPRS / EDGE } -க்கான டேட்டா பயன்பாட்டை வெகுவாக குறைகிறது.
 
நமது மொபைல் களில் உள்ள ப்ரௌசெர்களை காட்டிலும் இது வேகம் அதிகமாகவும் அதே சமயம் டேட்டா குறைவாகவும் வரும் வகையில் தயாரிக்க பட்டுள்ளது.
 
அந்த விபரத்தை கீழே பாருங்கள்.
 
 
 
உதாரணமாக " Twitter " இணையத்தளத்தை சாதாரண ப்ரௌசெரில் பார்க்கும் போது நமக்கு 241 KB செலவாகிறது.
 
 
அதே இந்த " Opera Mini Turbo " மொபைல் ப்ரௌசெரில் பார்க்கும் பொது வெறும் 24 KB மட்டுமே செலவாகும், சுமார் பத்து மடங்கு டேட்டா நமக்கு மிச்சம் ஆகிறது.
 
" Opera Mini Turbo " - ( Features ) சிறப்புகள்.
Full HTML Internet access
Full page overview and zoom
Synchronize bookmarks, Speed Dials and other info w/ Opera Link
Next-generation mobile UI
Full rendering engine on device
Instant access to your favorite websites
Multitask with tabs
Pinch-to-zoom
Read the largest pages comfortably
Easy access to your bookmarks
Adobe Flash support
Saved pages for offline viewing
Adjustable text size
Privacy management (clear history, bookmarks, cache, etc.)
Optimized UI for touchscreen devices
Cookie support and Speed dial
Predictive text input and Password manager
Virtual keyboard (touchscreen only)
96 Languages supported in user interface

இது மட்டும் இல்லாமல் இன்னும் பற்பல நன்மைகளும் இதில் உள்ளன,
 குறிப்பாக நமது வலைபக்கங்களை தமிழ்லில் காட்டும் வசதியும் இதில் உள்ளது.

இந்த ப்ரௌசெரை தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைல் போனில் m.opera.com. செல்லவும்.

நண்பர்களே, மேலும் சில வழிகளை கடைபிடிப்பதாலும் உங்கள் டேட்டா பயன்பாட்டை குறைக்க முடியும்.


மொபைல் மூலமாக ஈ-மெயில் படிக்கும் போது அவசியம் இருந்தால் மட்டும் அட்டாச்மென்ட் களை ஓபன் செய்யவும்.

மொபைல் push notifications களை எப்போதும் ஆப் செய்திடுங்கள்.

WiFi covarage இருக்கும் இடங்களில் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எப்போதும் " mobile-friendly webpages " களை மட்டும் மொபைல் களில் பாருங்கள்.

இமேஜ் களை தேவையில்லாமல் பார்க்காதீர்கள்.

YouTube - பார்க்கும் போது HD video களை மொபைல் மூலமாக பார்க்காதீர்கள்.

இவ்வாறு பயன்படுத்தினால் நாமும் 2G { GPRS / EDGE } சேவைகளை ஒவ்வொரு மாதமும் Unlimitted யாக பயன் படுத்தி கொள்ளலாம்.

நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.


மொபைல் போனுக்கு புத்தம் புதிய வசதி.. !


நண்பர்களே , தொலைதொடர்பு துறை நாளுக்கு நாள் அதிகம் முன்னேற்றம் அடைந்து வருவது உங்களுக்கு தெரிந்ததே. 

அதே போல செல்போன் பயன்படுத்துபவர்களும்,அவர்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.

மொபைல் போன்களில் ஏதாவது ஒரு மாற்றம் அல்லது ஒரு வசதி வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் ஸ்மார்ட் போன் வகை செல்போன் தயாரிக்கும் ப்ளாக்பெரி நிறுவனம் தமது போனுக்கு இரண்டு அருமையான அப்பிளிகேசன்களை வெளியிட்டுள்ளது. 

முன்னணி சோசியல் நெட்வொர்க் வலைத்தனமான " Face Book " - பயன்படுத்த " Facebook for BlackBerry smartphones 2.௦ " என்ற அப்பிளிகேசனும் " BlackBerry Messenger 6.௦ " என்ற அப்பிளிகேசனும் ஆகும்.

" Facebook for BlackBerry smartphones 2.0 " - வசதிகள் :

Facebook Chat : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களுடன் சாட்டிங் செய்து கொள்ள முடியும்.

Video uploading : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களுடன் நமது வீடியோ களை பகிர்ந்து கொள்ள முடியும்.

Facebook Places : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களுடன் நமது Places & Map களை பகிர்ந்து கொள்ள முடியும்.

Facebook Events : இந்த புதிய வசதியின் மூலம் நண்பர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற நாட்களில் நமது வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள முடியும்.


மேலும் இந்த வீடியோ - பாருங்கள் 


இது போல இன்னும் பற்பல புதிய வசதிகள் இந்த புதிய " Facebook for BlackBerry smartphones 2.0 " - அப்ளிகேசனில் உள்ளது.


" BlackBerry Messenger 6.0 " - வசதிகள் :


இன்ஸ்டன்ட் Messenger வகையை சார்ந்த இந்த " BlackBerry Messenger 6.0 " நிறைய புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது.

Share app experiences with friends : நமது செல்போனில் இருக்கும் அப்ளிகேஷனை நமது நண்பர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம்.

Have a BBM chat within apps : நமது BBM நண்பர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் ,அவர்களுடன் சாட்டிங் செய்யவும் உதவுகிறது.

Audio & Video : மிகவும் எளிதாக Audio & வீடியோ களை share செய்து கொள்ள முடியும் .
இந்த இரண்டு புதிய அப்ளிகேசனை ப்ளாக்பெரி செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் " BlackBerry App World " -இல் நுழைந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் .


நண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.
ப்ளொக்கரில்" File Upload " வசதியுடன் Contact me அமைக்க புது வசதி .. !

 
நண்பர்களே, நமது வலைப்பூவில் நம்மை நமது நண்பர்கள் தொடர்பு கொண்டு, சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் கேட்கவும் உதவியாக " Contact Me " Page வைத்திருப்போம்.
 
இந்த வசதியை நமக்கு உருவாக்கி தர இணையத்தில் பல வெப் சைட்-கள் உள்ளன.
 
அந்த வகையில் நான் சொல்லும் இந்த வெப்சைட் சாதரணமாக இல்லாமல் பல்வேறு வசதிகள் கொண்டது.

வசதிகள்:
  • தொடர்பு கொள்பவர்கள் தமது வலைப்பூவை இணைக்கலாம்.
  • தொடர்பு கொள்பவர்கள் விரும்பும் செய்திகளை File வடிவத்தில் Upload செய்யலாம்.
  • பல மெயில் முகவரிகளுக்கு செய்திகளை வரவைக்கலாம்.
  • தொடர்பு கொள்பவர்கள் தமது மொபைல் நம்பர் மற்றும் நேரத்தையும் காட்டலாம்.
  • இன்னும் பல்வேறு வசதிகளும் உள்ளன.
  •  
இந்த அருமையான வசதிகளை நீங்களும் பெற இங்கு செல்லுங்கள்.
 
பின்பு கீழே உள்ள படங்களை பார்த்து ஒவ்வொரு Step -யாக செய்யவும். உங்களுக்கு தேவையான மாற்றங்களை இங்கு செய்துகொள்ளுங்கள்.
 உங்களுக்கு தேவையான மாற்றங்களை இங்கு செய்துகொள்ளுங்கள்.
 உங்களுக்கு தேவையான மாற்றங்களை இங்கு செய்துகொள்ளுங்கள்.

 உங்களுக்கு தேவையான மாற்றங்களை இங்கு செய்துகொள்ளுங்கள்.

 உங்களுக்கு தகவல் வரவேண்டிய மெயில் address கொடுக்கவும்

இப்போது வந்திருக்கும் " Code " காப்பி செய்து உங்கள் பிளாக்கர் கணக்கில் நியூ பேஜ் சென்று அமைத்து " Paste " செய்யவும்.
அதற்கான முறை ( Dashboard...NewPost.....EditPage......NewPage.)
 
இப்போது உங்கள் வலைப்பூவில் வந்து பார்த்தால் அழகான Contact me பேஜ் வந்திருக்கும்.
 
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளையும் ஒட்டுக்களை போட்டு செல்லுங்கள்.

அறிவிப்பு :
நண்பர்களே கூகிள்+ வசதி கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவரா.. ?
நீங்களும் உடனே அந்த வசதியை அனுபவிக்க வேண்டுமா.. ?
உங்களுக்கும் கூகுளின் + அழைப்பு வேண்டுமா .. ?
கீழே கருத்து ( கமெண்ட்ஸ் ) பகுதியில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு கூகுள் பிளஸ் அழைப்பை நான் அனுப்புகிறேன்.

உங்கள் மெயிலுக்கு அழைப்பு வந்தவுடன் அதில் உள்ள Learn More about Google+ என்ற பட்டனை அழுத்தி கூகுள் + தளத்திற்கு சென்றால் ஒரு சிறிய விண்டோவில் உங்களுக்கான சில தகவல்களை கேட்கும்.
அதை கொடுத்து கீழே உள்ள Join என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இது போன்று அனுப்பப்படும் அழைப்புகளில் பெரும்பாலான வர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.( எனக்கு கூட இந்த வகையில் தான் கிடைத்தது ) .
உடனே அனுப்புங்கள் ... ! நன்றி .....!