தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!

 " தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ...! " - இந்த டயலாக்க நாம் தினமும் மினிமம் 5 பேர் கிட்டயாவது சொல்லுவோம் . யார் அந்த 5 பேர்ன்ன " சார் .. உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா ?  பர்சனல் லோன் வேணுமா ?  மிக்சி வேணுமா ? கிரைண்டர் வேணுமா ? அப்படின்னு நமக்கு போன் செய்து கண்ட கண்ட நேரத்துல கடுப்படிப்பாங்க ....! நம்ம செல் நம்பர் இவங்களுக்கு எப்படி கெடச்சதுன்னு யோசிக்கும் போதே அடுத்த கால் வந்திடும் , நீங்களும் இப்படி பல நாட்கள் கஷ்டப் பட்டுறிப்பீங்க தானே ...?   தொடர்ந்து படிங்க ... நமக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி காத்திக்கிட்டு இருக்கு ... !

நமக்கு போன் செயும் அவங்களை " Telemarketers " அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களோட வேலையே எல்லோருக்கும் போன் செய்து குறிப்பிட்ட கம்பனிகளின் பொருட்களையோ , வசதிகளையோ அல்லது லோன் , பேங்க் அக்கௌன்ட் ஒபெனிங் , இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றை விற்பதுதான் நோக்கம். டெலி மார்கெட்டிங் என்பது நமக்கு கஷ்டத்தை கொடுக்காத வரை நல்லதுதான் , ஆனால் இன்று அந்த டெலி மார்கெட்டிங் நமக்கு துன்பத்தை தருவதுதான் வேதனையான விசயம். ஏன் ? சமிபத்தில் நம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவருக்கே இந்த மாதிரி " கால் " வந்து பெரிய பிரச்சனை உருவானது உங்களுக்கு நினைவிருக்கலாம். 


சரி , விசயத்துக்கு வருவோம், இந்த மாதிரி டெலி மார்கெட்டிங் அழைப்புகளுக்கு இந்தியாவின் ( TRAI ) டெலிகாம் ரேகுலார்ட்டி அதாரிட்டி போர்டு அப் இந்தியா பலமுறை , பலவகையான கட்டுபாடுகளை விதித்த போதும் , யாரும் அதி சரிவர நடைமுறைபடுத்த வில்லை . எனவே TRAI  இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளிட்டுள்ளது . அந்த அறிவிப்பின் படி இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனி நபருக்கும் , எந்த ஒரு கம்பனியும் டெலி மார்கெட்டிங் செய்யும் பொது அந்த அழைப்பு " 70 xxx-xxxxx " என்ற எண்ணில் இருந்து தான் செய்ய வேண்டும் , மேலும் அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனக்களும் " 70 " என்ற துவக்க எண்ணை டெலி மார்கெட்டிங் கம்பனிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த ஒரு டெலி மார்கெட்டிங் அழைப்பு அல்லது எஸ் எம் எஸ் களை காலை 9  மணி முதல் , மாலை  9 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 
 
 
இதன் மூலம் நமக்கு வரும் டெலி மார்கெட்டிங் அழைப்புகளை மிக எளிதில் நாம் கண்டுகொள்ளலாம் . நமக்கு நேரமும், சூழ்நிலையும் சரியாக இருந்தால் அந்த அழைப்பை ஏற்கலாம் இல்லாவிட்டால் விட்டு விடலாம். இந்த புதிய உத்தரவுகள் அனைத்தும் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்,  இந்த உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனக்களுக்கு Rs.25,000  முதல் Rs. 2,50,000  வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் TRAI அறிவித்துள்ளது. 
 
- இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நம் விருப்பம் போல இந்த அழைப்புகளை கையாளலாம். நன்றி ... "TRAI "..
 


"கிளைமாக்ஸ்  சீன்  "


மழை எவ்வளவு அழகு ... ?