தயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... !


நண்பர்களே .. ! நம்மில் நெறையபேர் தம்முடைய போட்டோவை எடுத்து வைத்துகொண்டு பார்த்து ரசிப்பவர்கள் உண்டு. அதே போல் தம் குடும்ப ஆல்பத்தை வைத்து கொண்டு பார்த்து ரசிப்பவர்கள் உண்டு. இன்னும் சில பேர் தைரியமாக தம் மனைவி படத்தை பர்சில் வைத்து பார்த்து ரசிப்பவர்கள் உண்டு ( அது ரசிக்கவா அல்லது பயம் தெளியவா ? ) .  


இன்னும் சில பேர் அடுத்த வீட்டு போட்டோ ஆல்பத்தை பார்த்து ரசிப்பவர்களும்  உண்டு. சரி விசயத்துக்கு வருவோம், நாம் நெறைய பேரின் குடும்ப ஆல்பத்தை பார்த்திருப்போம், இப்போது நான் ஒருவரின் குடும்ப ஆல்பத்தை காட்டப்போகிறேன். " குடும்பம் ஒரு பல்கலைகழகம் " என்பதற்கு அடையாளமாக இந்த ஆல்பம் இருக்கும்.  இந்த குடும்பத்தின் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்க்காக சினிமா மற்றும் அரசியல் துறையில் கடும்பணி ஆற்றி வருகின்றனர். 


சினிமா, டிவி, பத்திரிக்கை, அரசாட்சி,போக்குவரத்து,மதுபானம், உரம், தொலைதொடர்பு, இன்னும் பல்வேறு துறைகளில் வேறு யாரும் நுழைந்து நாட்டை கெடுத்துவிட கூடாது என்பதற்காக இந்த குடும்பத்தின் அத்துனை உறுப்பினர்களும் பாடுபட்டு வருகின்றனர்.    


அவர்கள் வேறு யாரும் அல்ல. நமது முதல்வர் ,மாண்புமிகு , டாக்டர். கலைஞர் , அவர்களும் , அவரின் குடும்ப உறுப்பினர்களும் தான்.


அவர்களின் குடும்ப ஆல்பத்தை இங்கு பாருங்கள்.     
இப்படி பரம்பரை  பரம்பரையாக தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் இவர்கள் அனைவருக்கும் ஒரு நன்றியை தெரிவிப்போம்.  

" கிளைமாக்ஸ்  சீன்  "

திட்டம்  போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்...........


No comments: