புதிய பதிவர் செய்த துரோகம்.. !
இன்று  புதிய பதிவு போடும் முன்னர் என்னுடைய இன்னொரு வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். 

இந்த  புதிய வலைப்பூவில், இன்றைய நம் நாட்டின் தொலை தொடர்புத்துறையில் உள்ள முக்கிய செய்திகளை உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன்,

இன்று நாம் நெறைய தொலைதொர்பு செய்திகளை பார்த்துவருகிறோம், அதில் என் தளம் உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துகிறேன். ..

இத்தளம்  முழுவதும் ஆங்கிலத்தில் தான் இருக்கும் , என்னென்றால் நெறைய டெலிகாம் வார்த்தைகள் உங்களுக்கு ஆங்கிலத்தில் தான் புரியும்.
உங்களின் ஆதரைவயும் , வாழ்த்துக்களையும் தாருங்கள். என்னால் முடிந்தவரை நல்ல டெலிகாம் செய்திகளை உங்களுக்கு நான் தருகிறேன்.

இந்த தளத்தில் புதிய செல்போன்களின் அறிமுகம், புதிய போஸ்ட் பெய்டு , ப்ரீபைடு , மற்றும் அனைத்து வகையான தகவல்களையும் நீங்கள் பெறலாம்.

மேலும், நோக்கியா, சாம்சங், எல் ஜி, போன்ற பல்வேறு வகையான செல்போன் கம்பனிகளின் புதிய புதிய செய்திகளையும் இந்த தளத்தில் நான் உங்களுக்காக தரப்போகிறேன். 

செல்போன்  மட்டுமல்ல இன்டர்நெட் , வெப், மற்றும் பல்வேறு வகையான செய்திகளையும், உங்களுக்காக தரப்போகிறேன்.

இதுதான் என்னுடைய முதல் வலைப்பூ ... ஆனாலும் இப்போதுதான் உங்களுக்கு தெரிகிறது..

உங்கள் வாழ்த்துக்களை தாருங்கள்... நன்றி... !

சரி , இப்போது தலைப்புக்கு வருவோம், நான் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை . என்னுடைய ஈரோடுதங்கதுரை வலைப்பூ எப்போதும் போல இயங்கும்.


என் புதிய தளத்தின் முகவரி :

" கிளைமாக்ஸ் சீன் ' 


சீக்கிரமா போய்  அந்த வலைப்பூவை பார்க்கணும். ...!No comments: