உலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது....!



இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே  இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.

இன்று உலகெங்கும் இரண்டு சிம்கார்டு  போடும் செல்போன்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த வகையான செல்போன்கள் கணிசமாக பெருகி வருகின்றன . நோக்கியா , சாம்சங் , எல்.ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இந்த வகையான செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் OTECH என்ற கம்பெனி புதிதாக 4 (  நான்கு ) சிம்கார்டுகளை போட்டு பயன்படுத்திகொள்ளும் வகையில் ஒரு செல்போனை வடிவமைத்துள்ளனர். 



என்ன ? நம்பமுடியவில்லையா ....? உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 (  நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் " Quad SIM Mobile Phone " ஆகும். 

இந்த போனின் சிறப்புகள்

  • 2.4-inch touchscreen டிஸ்ப்ளே
  • 12.1-megapixel கேமரா
  • Supports PAL/NTSC/SECAM TV tuner
  • FM Radio
  • Bluetooth
  • Four SIM compatible
  • A full QWERTY keypad

  • GPRS for Internet connectivity

இந்த வகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று நெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல்  கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம் இந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... !



" கிளைமாக்ஸ் சீன்  "


இதுதான் என்னோட கேமரா மொபைல் .. !

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!


சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான்.. ! அதுவும் உண்பதற்கு வழி இல்லாமல் பட்டினியில் வாடும் மனிதர்களுக்கு உணவு கொடுத்து சந்தோசப்படுத்தி பார்ப்பது, தெய்வத்திற்கு செய்யும் தொண்டிற்கு இணையானது ...! அப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பற்றியது தான் இந்த பதிவு ... ! 

அந்த மனிதர்  CNN  உலக புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த மனிதராக டாப் 10  வரிசையில் இடம்பெறுள்ளார். அவர் ஒரு தமிழர். அவரைத்  தமிழர் என்பதை விட அதுக்கும்  மேல..... 

ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார்.

இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது போட்டிக்கு இவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி.

பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார். அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.

இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்.



சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.
 இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன். 


முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி.


பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன். 


நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.


இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.


அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.


பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.


இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன்.


நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.


இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க. உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.


இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க  இங்கு சென்று வாக்களிக்கலாம். 









முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும். பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.


நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்...


மொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ளன செல்போன் கம்பனிகள்


நண்பர்களே,கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் எந்த பதிவும் போட முடியவில்லை. நேத்து தான் இந்தியா திரும்பினேன். இனி பதிவு தினமும் வரும். 

செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதியை  நமது TRAI அடுத்த மாதம் துவங்கபோவதாக அறிவித்துள்ளது.  பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த MNP ( மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ) முறை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது  . இந்த வசதியின் மூலம் நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.





மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


செல்போன் கம்பனிகள் அறிவித்துள்ள தேதி விபரங்கள் :


Nov 8th -: Bharti Airtel, Videocon, Loop Mobile

Nov 11th –: Aircel, Uninor, Reliance GSM ( Rcom) and Tata Docomo

Nov 14th-: BSNL ,MTS, Idea Cellular and  BSNL CDMA

Nov 17th-: Vodafone Essar, Reliance Mobile (CDMA) and Tata indicom.

இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும்.

3G வசதியை வரும் தீபாவளிக்கு தரப்போவதாக டாட்டா -டோகோமோவும் ,டிசம்பரில் தரப்போவதாக ஏர்டேல்லும் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.





"கிளைமாக்ஸ் சீன் "



இனி நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்கலாம்..!



புதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்களோ.....? - கவனிக்கவும்... !



இன்று நம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று இருக்கும் . அது ப்ரிபைடு அல்லது போஸ்ட் பெய்ட்  எதுவாக இருந்தாலும் மொபைல் இன்று அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை. இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தருகிறேன் .

இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் 23  மண்டலத்திலும் ஐந்து முதல் பத்து  நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் ப்ரிபைடு மற்றும்  போஸ்ட் பெய்ட்  கட்டண முறையில்  பத்துக்கும் மேற்பட்ட  சேவைத் திட்டங்களை வழங்குகின்றன. தமிழ் நாட்டில்  ஏர்செல் , ஏர்டெல், வோடபோன் , பி.எஸ்.என்.எல், ஐடியா , வீடியோ கான் , யூனினார் , வெர்ஜின்,  எம் டி எஸ் , ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.

முதல் எட்டு நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் அடுத்த மூன்று  நிறுவனங்கள் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையும் தருகின்றன. இவற்றில்  ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இரண்டு வகையான இணைபயனையும் வழங்கி வருகின்றன.


முதலில் உங்களுக்கு எந்த வகை இணைப்பு வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம்  (GSM – Global System for Mobile Communications) மற்றும் சி.டி.எம்.ஏ (CDMA – Code Division Multiple Access) என்ற இரண்டு வகையான தொழில் நுட்பத்தில் தான் உலக அளவில் அதிக கம்பனிகள்  உள்ளது. இந்த இரண்டின் அம்சங்களையும், வேறுபாடுகளையும் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்களுக்கான தொழில் நுட்பத்தினைத் தேர்ந்து எடுக்கலாம்.


ஜி.எஸ்.எம். வகையைப் பொறுத்த வகையில் நிறைய மாடல் செல் போன்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை ஜி.எஸ்.எம் - 900/1800 என்ற இரண்டு பேண்ட் அளவில் இயங்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையில் எக்கச் சக்கமாய் போன் மாடல்கள் உள்ளன. அதன்பின் இதற்கான சிம் கார்டை ஏதேனும் ஒரு சர்வீஸ்புரவைடரிடம் வாங்கி இதில் இணைத்து தொடர்பினை மேற்கொள்ளலாம். இந்த கார்டை எந்த ஜி.எஸ்.எம். வகை போனிலும் பயன்படுத்தலாம்.


இணைப்பு சேவை வழங்குபவர் நீங்கள் எந்த போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கவலைப்பட மாட்டார். அதே போல ஒரே போனில் பல சர்வீஸ் புரவைடர் தந்த சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். நீங்கள் நான்கு பேண்ட் ஜி.எஸ்.எம். மொபைல் வைத்திருந்தால் அதனையே எந்த நாட்டிலும் ஜி.எஸ்.எம். இணைப்பு தரும் நிறுவனத்தின் சிம் இணைத்து பயன்படுத்தலாம்.

சி.டி.எம்.ஏ. வகையில் இப்போது சிம் கார்டு தரப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட போன் வகையுடன் இணைந்தே தரப்படுகிறது. ரிலையன்ஸ் அல்லது டாட்டா இண்டிகாம் நிறுவனங்களிடம் இவை கிடைக்கின்றன. முன்பு ஒரு போனுக்கு ஒரு எண் என்று இருந்தது. இப்போது போன் செட்டை மாற்றிக் கொள்ளலாம். எனவே போன் மாடல்கள் மிகவும் குறைவு. வாங்கிய போனை அதனை வாங்கிய சர்வீஸ் புரவைடர் தரும் இணைப்புடன் மட்டுமே பயன்படுத்த முடியும். எந்த வகை என முடிவு செய்த பின்னர் உங்கள் ஏரியாவில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எந்த சர்வீஸ் புரவைடர்கள் இயங்கு கிறார்கள் என்று பார்க்கவும்.

நீங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது சொந்த அலுவல் ரீதியாகவோ அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் செல்பவராக இருந்தால் நீங்கள் செல்லும் இடங்களில் இங்கு சேவை வழங்கும் நிறுவனம் மொபைல் சேவையினை வழங்குகிறதா என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இங்குள்ள நிறுவனம் நீங்கள் செல்லக் கூடிய இடங்களில் ரோமிங் வசதியினைத் தருகிறதா என்று கேட்டு அறியவும்.
அடுத்தது உங்கள் மொபைல் போனின் விலை. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பல மாடல் போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே உங்களுக்கான விலையில் உள்ள போன்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பின் ஒப்பிட்டு வாங்கவும். அடுத்து போன் பேசுவதற்கான செலவு. மாதம் இவ்வளவு தான் போனுக்கு செலவழிக்க வேண்டும் என முடிவு செய்தால் பிரீ பெய்டு எனப்படும் முன் கூட்டியே பணம் செலுத்தும் கார்டினை வாங்கவும். ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் எவ்வளவு செலவழிந்துள்ளது. கார்டில் எவ்வளவு மிச்சம் உள்ளது என அறியலாம். அதற்கேற்றார் போல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.

அவ்வப்போது சர்வீஸ் புரவைடர்கள் தரும் திட்டங்களுக்கேற்பவும் சலுகைகளுக்கேற்பவும் புதிய இணைப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் ஏரியாவில் எந்த நிறுவனத்தின் சேவை நல்ல முறையில் உள்ளது எனக் கேட்டு அறியலாம். நீங்களும் சோதித்துப் பார்க்கலாம். போஸ்ட் பெய்ட் என்பதில் மாதந்தோறும் அதனைப் பயன்படுத்த லேண்ட் லைன் போல மாதம் ஒரு குறிப்பிட்ட வாடகை கட்டணமும் பயன்படுத்துவற்கான கட்டணமும் கட்ட வேண்டும். இதிலும் உங்களுடைய பயன்பாடு முறைதான் எத்தகையது வேண்டும் என்பதனை முடிவு செய்கிறது.

குறைந்த மாதக் கட்டணத்தில் உள்ள ஒரு இணைப்பினை வாங்கி பின் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் கணக்கிட்டால் போஸ்ட் பெய்ட் இணைப்பினைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். போஸ்ட் பெய்ட் கட்டண திட்டத்திலும் நெறைய நன்மைகள் உள்ளன. 

பிரீ பெய்ட் கார்டில் குறிப்பிட்ட அளவிற்கான பணத்திற்கு பேசலாம் என்றாலும் இதற்கான கால அளவு இருக்கும். அதற்குள் பேசாவிட்டால் மீதமுள்ள பணம் கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் உடனே ரீசார்ஜ் கார்ட் மூலம் புதுப்பித்தால் ஏற்கனவே மீதம் உள்ள பணம் இதில் சேர்ந்துவிடும். இல்லை என்றால் பணம் வீண். ரீசார்ஜ் கூப்பன்களிலும் வேறுபாடு உண்டு. ஒரு சில நிறுவனங்கள் சில வேளைகளில் கார்ட் வேல்யூ முழுவதும் அல்லது சற்று கூடுதலான அளவிற்கு மதிப்பு வழங்குவார்கள்.

சிலர் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே வழங்குவார்கள். எடுத்துக் காட்டாக ரூ.2,000 க்கு வாங்கி ரீ சார்ஜ் செய்தால் ரூ.2,250க்கு பேசும் திட்டம் உள்ளது. ரூ.300க்கு வாங்கினால் ரூ.185 மட்டுமே பேச முடியும் என்ற திட்டமும் உள்ளது. இரண்டின் கால அளவு வேறுபடலாம்.இன்று நெறைய டாப் அப் , டாக் டைம் கூப்பன்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருகின்றன. நீங்கள் வாங்கும் முன் உங்கள் தேவைக்கு அது ஏற்றதா என்பதை அறிந்து வாங்க வேண்டும் . 
பெரும்பாலான  நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மற்ற போன்களுக்கான அழைப்புகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் விதித்திருப்பார்கள். எனவே நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்பவர்கள் எந்த இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து அதே நிறுவன இணைப்பு வாங்க முடிவுசெய்திடுங்கள். வாங்கியவுடன் உங்கள் போன் இணைப்பிற்கான இந்த சலுகைகளுக்கான ஏற்பாடுகளை உங்கள் போனில் செட் செய்திடுங்கள்.

இவ்வளவு விஷயங்களையும் ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும். இணைப்பு வாங்கச் செல்கையில் உங்கள் முகவரி, போட்டோ அடையாள அட்டை கேட்பார்கள். போட்டோ ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைக்கச் சொல்வார்கள். உண்மையான முகவரி, உங்கள் போட்டோ கொடுத்து கார்டை வாங்கிச் சரியான நோக்கத்திற்குப் பயன்படுத்தி தொழில் நுட்பத்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடுத்தவருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துங்கள்.




" கிளைமாக்ஸ் சீன் "
பதிவு பிடித்திருந்தால் " கை கொடுங்கள் " அதாங்க... கருத்துகளையும் , ஓட்டுக்களையும் போடுங்க...




நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. !



நம் இந்துக்களின் மரபு வழக்கப்படி நாம் காலம் காலமாக செய்துவரும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கதை வைத்திருப்போம், அவ்வாறு நவராத்திரி கொலு பொம்மை மற்றும் சரஸ்வதி பூஜை கும்பிடுவதர்கான கதையை கேளுங்கள்.

 " ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.  “ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.


எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது."  மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.


1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.


இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

கொலுபடி தத்துவம் !
கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்; அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.



சரஸ்வதி வழிபாட்டின் பலன்!
வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், “சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும். 


நங்கையருக்கு நலம் தரும் நவராத்திரி!
சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, “வசந்த நவராத்திரி!’ புரட்டாசி மாதத்தில் வழிபடுவது, “பாத்ரபத நவராத்திரி’ அல்லது “சாரதா நவராத்திரி. சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர். புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், “தசரா’ என்று அழைக்கின்றனர். 




நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, ஆகரி துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள். 

அஷ்டலட்சுமி: ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை லட்சுமியின் அம்சங்கம்.
அஷ்ட சரஸ்வதி; வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள். 




உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம். விரதம் இருக்கும் பக்தர்கள் (பெண்கள்) அன்னையை பல வேடங்கள் புனைந்து வழிபாடு செய்கின்றனர்.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..!






" கிளைமாக்ஸ் சீன் "



3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..!

இந்திய தொடர்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்த போகும் 3G தொழில் நுட்ப வசதியை தர , இந்தியாவில் இத்துறையில் முன்னணியில் உள்ள 7 கம்பனிகள் தயாராகி வருவது உங்களுக்கு தெரிந்ததே . இந்த வசதியின் நன்மைகளை உணர்ந்தவர்கள் 3G எப்போ வரும் ? எப்போ வரும் ? என்று ஏங்கி கொண்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் , வரும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் அனைவரும் 3G வசதியுடன் கொண்டாடத் தயாராகுங்கள் என்று டாட்டா டோகோமோ தனது விளம்பரத்தை துவக்கியுள்ளது .   


3G வசதியை வழங்க ஏர்செல், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் , ஐடியா , எஸ் டேல், டாட்டா டோகோமோ ஆகிய கம்பனிகள் தான் அனுமதி பெறப்பட்டன . இதில் எஸ் டேல்  மற்றும் டாட்டா டோகோமோ தான் மிகவும் புதிய கம்பெனி , மற்ற கம்பனிகள் எல்லா பலவருடங்களாக சர்விஸ் தந்து  கொண்டிருந்த கம்பனிகள் , இவற்றுக்கிடையில் ஏலத்தில் வெற்றி பெற்று இந்தியாவில் உள்ள 9 தொலைதொடர்பு வட்டங்களில் 3G சேவையை தர இருக்கிறது. 




மற்ற கம்பனிகள் எல்லாம் 3G சேவையைப்பற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் , டாட்டா டோகோமோ மட்டும் தான் வரும் தீபாவளிக்குள் இந்த வசதியை இந்தியாமுழுவதும் தர தயாராகி வருகிறது. அப்படி வழங்க ஆரம்பித்து விட்டால் இந்தியாவில் , அரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு அடுத்தபடியாக , தனியார் துறையில் இந்த வசதியை வழங்கும் முதல் கம்பெனி என்ற பெயர் கிடைக்கும். 




 
டோகோமோ விற்கு இது ஒன்னும் புதிதல்ல .... ஏனென்றால் "  NTT  டோகோமோ " தான் உலகிலேயே முதன்முதலில் 3G  வசதி மற்றும் 4.5 G வசதியை வழங்கிய கம்பனியாகும். அதுமட்டும் அல்ல இந்தியாவில் அனைத்து கம்பனிகளும் ஒரு நிமிட கட்டனத்திட்டதில் இருந்த நிலையில் டாட்டா டோகோமோ தான் ஒரு வினாடி கட்டனத்திட்டதை அறிமுகப்படுத்தி நாட்டிலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தான் அனைத்து கம்பனிகளும் ஒரு வினாடி கட்டனத்திற்கு மாறின. 

 


இந்த சூழ்நிலையில் 3G வசதியை டோகோமோ முதன்முதலில் தர துவங்கினால் கட்டனதிட்டங்கள் அனைத்தும் மிகவும் மலிவாகவும் , அனைத்து தரப்பினர்க்கும் ஏற்றதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  






" கிளைமாக்ஸ் சீன் "


சும்மா " தீபாவளி "  வருதில்ல ... அதான் ...!