Cellphone - க்கு ஒரு சூப்பர் Application


இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே  இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உலகெங்கும் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் வகையை சேர்ந்த Android, Symbian, BlackBerry and Windows மொபைல் போன்ற operating system கொண்ட செல்போன்கள் பிரபலமானவை.

இந்த வகை செல்போன்களுக்கு மார்க்கெட்டில் எபோதுமே கிராக்கி உண்டு. காரணம் இந்த செல்போன் களில் தான் நமக்கு தேவையான Appilications & Softwares வெளி மார்க்கெட்டில் கிடைக்கும்.  சரி, விசயதுக்கு வருவோம்.

இன்று நாம் பார்க்க போவது நம் அனைவருக்கும் தேவையான ஒரு நல்ல  Appilications பற்றியது. நாம் அடிக்கடி செல்போன் களை மாற்றுவோம் , அப்படி மாற்றும் போது நம்முடைய பழைய செல்போனில் இருக்கும் DATA ( contacts, calls, calendar, photos, and messages,etc..) களை மாற்ற சிரமபடுவோம், இனி கவலை இல்லை , அந்த வேலையை மிக சுலபமாக செய்ய ஒரு  Appilications வந்துவிட்டது.

   முதலில் இந்த வெப் சைட் http://miqlive.com/ நுழைந்து கொள்ளுங்கள்.
முகப்பு இப்படி இருக்கும்

Get Started என்ற இடத்தில நுழைந்து கேட்கும் விபரங்களை தாருங்கள், பின்பு நீங்கள் கொடுத்த மெயில் க்கு வரும் லிங்கை உங்கள் மொபைல் ப்ரௌசர் மூலமாக சென்று  miQ என்ற appilication யை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.  

பின்பு அந்த Appilication யைஓபன் செய்து செட்டிங்க்ஸில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து Sync செய்யுங்கள், இப்போது உங்கள் வெப் சைட் இல் உங்கள் மொபைல் லின் அனனத்து DATA களும் உங்கள் miQ Account க்கு வந்திருக்கும்.இங்கு காட்டப்பட்டுள்ள இடத்தில சென்று பார்த்தால் தெரியும்.


அவ்வளவுதான் வேலை முடிந்தது . இனி எப்போதெல்லாம் மொபைல் யை மாற்ற நினைக்கறிர்களோ அப்போது இந்த மாதிரி DATA களை Back up எடுத்து வைத்துக்கொண்டு, புதுப்போனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

இங்கு பாருங்கள் உங்கள் மொபைல் இன் contacts, calls, calendar, photos,settings போன்ற அனைத்து மேனுகளும் இங்கு வந்திருப்பதை காணலாம். மேலும் உங்கள் போன் மாடல்,போட்டோஸ் , கால்ஸ், காலண்டர் போன்றவற்றையும் நீங்கள் சேமித்து கொள்ளலாம். இதனால் செலவும் குறைவு, அலைச்சலும் குறைவு.

    
இந்த வசதி Android, Symbian, BlackBerry and Windows மொபைல் போன் களில் மட்டுமே செயல்படும்.
இனி கவலை இல்லாமல் மொபைல் களை மாத்துங்க...!


இனி ஜாலி தான் .. புதுசு புதுசா செல்போன் வாங்கலாம்...!

No comments: