இந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு

                இந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு
                   இந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது . இதற்கான குறியீட்டை இந்தியாவிலுள்ள கவுஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருவதுடன் இந்திய மொழிகளின் எழுத்து வடிவம் குறித்தும், குறிப்பாக பழம் பெரும் மொழியான தமிழ் மொழியின் எழுத்து வடிவம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு .உதயகுமார் உருவாக்கி இருந்தார். இவர் உருவாக்கிய குறியீடை இந்தியப் பணமான ரூபாயின் குறியீடாகப் பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய ரூபாய் சர்வதேசக் குறியீடுஇந்திய ரூபாய்க்கு சர்வதேசக் குறியீடு தற்போது ஒரு எழுத்துருவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துருவைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொண்டால் ` என்கிற எழுத்தைத் தட்டச்சு செய்தால் இந்திய ரூபாய்க்கான சர்வதேசக் குறியீடு கிடைக்கும். இந்த எழுத்துருவை இந்திய ரூபாய்க் குறியீட்டுக்கான எழுத்துரு தளத்திற்குச்  சென்று இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


தங்கள் நாட்டுப் பணத்திற்கு சர்வதேசக் குறியீடுகளைக் கொண்டுள்ள சில நாடுகள்;
அமெரிக்கா -டாலர்
ஐரோப்பா -யூரோ
ஜப்பான் -யென்
கியூபா -பெசோஸ்,
கொரியா -வான்
லாவோஸ் -கிப்ஸ்
கோஸ்டாரிக்கா -கொலோன்
சுவிட்சர்லாந்து -பிராங்க்
நைஜீரியா -நைராஸ்
மங்கோலியா -டக்ரிஸ்
உக்ரைன் -இர்வினா
தாய்லாந்து -பாக்ட்
துருக்கி -லிராஸ்
தென்னாப்பிரிக்கா -ரான்ட்

No comments: