மொபைல் நம்பர் போர்டபிலிட்டி

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி

செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதி நம் இந்தியாவில் வரப்போகிறது. ஆம் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை நமது TRAI அளித்துள்ளது . இப்பொழுது நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி என்ற வசதியை நாட்டில் அறிமுகப்படுத்த நமது அரசும் ஏற்கெனவே கொள்கை ரீதியில் முடிவெடுத்துவிட்டது. இந்த வசதி மூலம் ஒரு வாடிக்கையாளர் தனது செல்போன் எண்ணை மாற்றாமலேயே ஒரு தொலைத் தொடர்பு நிறுவன இணைப்பில் இருந்து மற்றொரு நிறுவன இணைப்பைப் பெற முடியும். MNP என்ற இந்த புது வசதி வரும் அக்டோபர் 31 முதல் நாடு முழுவதும் அமலாகிறது .

மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி வருகின்றன.

 இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும். 3G வசதிகள் வரபோகும் இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.
  

இவருக்கு இப்பவே ஆட்டம் தாங்கலை...!

No comments: