கம்ப்யூட்டர் டிப்ஸ் - நானும் ரவுடிதான்... !

வலைப்பூவில் எல்லோரும் கம்ப்யூட்டர் டிப்ஸ் தருகிறார்கள். நானும் என்பங்கிற்கு ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். இது நிறைய பேருக்கு தெரிந்த ஒன்றுதான் , தெரியாதவர்கள் பயன்பெறலாம். 


  விண்டோஸில் குறிப்பிட்ட Folderளில் இருக்கும் அதிகமான பைல்களின் பெயரை மாற்ற     ( Rename ) வேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்கின்றதா?. ஒவ்வொரு பைல்களிலின் மீதும் வலது கிளிக் செய்து பின்னர் Rename ஆப்ஸனை தேர்வு செய்வது நேர விரயமாகும். இதை எவ்வாறு மிக வேகமாக செய்வது என்ற கேள்வி நம்மில் பலருக்கு வரும்.
அதற்கு ஈசியான ஒரு வழி உள்ளது. போல்டர்  திறந்து பெயர் மாற்ற வேண்டிய பைலை வலது கிளிக் செய்து ரீநேம் செய்யுங்கள். அதன் பின்னர் கீபோட்டில் டேப் விசையை அழுத்தியதும் அடுத்த பைலுக்குரிய ரீநேம் ஆப்ஸன் தானகவே தேர்வு செய்யப்படும். பெயரை கொடுத்து மீண்டும் டேப் கீயை அழுத்தி அடுத்த பைலுக்கு செல்லலாம்.

 
அதிகமான பைல்களை ரீநேம் செய்ய விரும்புவர்கள் இந்த முறையைக் கையாண்டால் இன்னும் வேகமாக செயற்படலாம்.
 
 
வீடியோ இணைப்பை பார்க்கவும். 


நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள், கருத்து சொல்லுங்கள் .. ! எல்லாரும் பார்த்துக்குங்க .... நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான் ... ! 

No comments: