அனைத்து பதிவர்களின் கவனத்திற்கு.....


நண்பர்களே ...! இது என்னுடைய " 25 - வது பதிவு " . செப்டம்பர் 5 ஆம் தேதி என் முதல் பதிவை எழுத துவங்கினேன். இந்த 25  நாட்களில் 25  பதிவுகளையும்  17 நண்பர்களையும் சேர்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. 
 இது ஒரு சாதனையாக நான் கருதவில்லை , இருந்தாலும் என் வலைப்பூவை அழகாக்க சில டிப்ஸ் கொடுத்த நண்பர்களுக்கும், என் பதிவுகளுக்கு கருத்துரைத்த நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை சொல்லிக்கொண்டு இன்றைய பதிவை எழுதுகிறேன்....! 


நாம் எவ்வளவுதான் நல்ல பதிவுகளை எழுதினாலும் , அந்த பதிவுகளை நெறையபேர் படித்தால் தான் நம் பதிவு பிரபலமாகும். அப்படி நம் பதிவை பிரபலப்படுத்ததான் இந்த டிப்ஸ் .  நாம் இணையத்தில் நெறைய வசதிகளை பயன்படுத்திவருகிறோம், குறிப்பாக " மெயில், சோசியல் வெப் சைட் , வலைப்பூ, இன்டெர்நெட் மெசென்சர் , இன்னும் பல ....

இப்படி நாம் பயன்படுத்தும் எல்லாவற்றிலும் இருக்கும் நம் நண்பர்களுக்கு , நம் பதிவுகளை ஈசி யாக கொண்டு சேர்த்தால் நல்லாருக்கும் தானே ? ஆம் இப்படிப்பட்ட ஒரு நல்ல வசதியை நம் பிளாக்கர் லில் பயன்படுத்த ஒரு கருவியை மட்டும் நிறுவினால் போதும். வாருங்கள் அதை காட்டுகிறேன்.

 முதலில் இங்கு செல்லுங்கள்.   

முகப்பு இப்படி இருக்கும்


இதில் Learn More என்ற இடத்தில் கிளிக் செய்தால் அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 


பின்பு நான் காட்டி உள்ளது போல Free SignUp கிளிக் செய்து உங்கள் மெயில் முகவரியை தாருங்கள். 


இப்பொது உங்கள் மெயிலுக்கு ஒரு லிங்க் மெயில் வந்திருக்கும் , அந்த லிங்க் சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் சென்று உங்களுக்கு பிடித்த பாஸ்வோர்ட் கொடுத்து உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 


இப்போது உங்கள் கணக்கில் இருக்கும் பக்கத்தில் தேவையான மாற்றங்களை செய்து  " code " என்பதை அழுத்தினால் கீழே உங்களுக்கான " code " வரும் . அதை காப்பி செய்துகொள்ளுங்கள். 


இனி கீழ் உள்ளவாறு செய்யுங்கள் :

1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்.
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget
Template  கிளிக் செய்யுங்கள்


3- <data:post.body/> என்ற code  தேடவும்.

பின்பு அதன் கீழே , காப்பி செய்த " code”  இணைக்கவும் .
பின்பு SAVE செய்துவிடவும். 
பின்பு உங்கள் ப்லோக்கரை திறந்தால் உங்கள் புது வசதிக்கான பட்டை வந்திருக்கும்.
இதை கிளிக் செய்தால் இதில் உள்ள வசதிகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும்.

இதில் நெறைய வசதிகள் உள்ளன. எல்லாவரையும் விளக்க முடியாததால் பட்டியளிடுள்ளேன்.
நீங்கள் பயன்படுத்திபார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

( புக்மார்க் வசதி )

( ப்ளாக்கிங் வசதி )

( சோசியல் நெட்வொர்க் வசதி )

( இ-மெயில் வசதி )

( சாட்டிங் வசதி )

இவ்வளவு வசதிகள் நிறைந்த இந்த பட்டையை நீங்களும் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.


பதிவு பிடித்திருந்தால் உங்கள் வோட்டையும் போட்டுவிட்டு செல்லுங்கள். இம்புட்டு இருக்கா.......  இப்பவே கண்ண கட்டுதே .....  


No comments: