நம்மைப்பற்றி - ஒரு பக்க இணையத்தளம் ( புதிய வசதி )


இன்றைய இனைய உலகில் எவ்ளவோ புதிய வசதிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி விரைவில் வரபோகும் ஒரு புதிய வசதி பற்றிதான் இந்த பதிவு.


இன்று நாம் பிளாக்கர் ஆரம்பித்து நமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.

இதுபோலவே நம்முடைய முழுப்பக்க புகைப்படத்துடன் மேலும் சில விபரங்களையும்  சேர்த்து நமக்கென்று  ஒரு பக்க,  இணையப்பக்கத்தை அழகாக உருவாக்கலாம். ஆம் நமக்கு அப்படி ஒரு வசதியை  about.me  என்ற இணையத்தளம் செய்ய போகிறது.


முகப்பு இப்படி இருக்கும் 


தற்சமையம் பொதுப்பாவனைக்கென அறிமுகப்படுத்தப்படாத போதும் betta வடிவில்  இயங்கி வருகிறது. இதில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள்  இந்த  தளத்திற்கு சென்று உங்களுடைய பெயரை விரைவாக பதிவு செய்துகொண்டால் அதே பெயர்களை உங்களுக்கென்றே ரிசர்வே செய்து வைப்பதாக கூறுகிறார்கள்.

இவர்களின் முழுமையான பதிப்பு வெளிவரும் போது நாம், நம்முடைய சொந்த தகவல்,விருப்பம்,நம்முடைய ஒருபக்க புகைப்படம் போன்றவற்றை வெளிப்படுத்திகொள்ளலாம்.இருங்க, போட்டோ எடுத்துட்டு போய் உங்க பெயர ரிசர்வ் பண்ணுங்க ...!   

No comments: