அனைத்து பதிவர்களின் கவனத்திற்கு.....


நண்பர்களே ...! இது என்னுடைய " 25 - வது பதிவு " . செப்டம்பர் 5 ஆம் தேதி என் முதல் பதிவை எழுத துவங்கினேன். இந்த 25  நாட்களில் 25  பதிவுகளையும்  17 நண்பர்களையும் சேர்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. 
 இது ஒரு சாதனையாக நான் கருதவில்லை , இருந்தாலும் என் வலைப்பூவை அழகாக்க சில டிப்ஸ் கொடுத்த நண்பர்களுக்கும், என் பதிவுகளுக்கு கருத்துரைத்த நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை சொல்லிக்கொண்டு இன்றைய பதிவை எழுதுகிறேன்....! 


நாம் எவ்வளவுதான் நல்ல பதிவுகளை எழுதினாலும் , அந்த பதிவுகளை நெறையபேர் படித்தால் தான் நம் பதிவு பிரபலமாகும். அப்படி நம் பதிவை பிரபலப்படுத்ததான் இந்த டிப்ஸ் .  நாம் இணையத்தில் நெறைய வசதிகளை பயன்படுத்திவருகிறோம், குறிப்பாக " மெயில், சோசியல் வெப் சைட் , வலைப்பூ, இன்டெர்நெட் மெசென்சர் , இன்னும் பல ....

இப்படி நாம் பயன்படுத்தும் எல்லாவற்றிலும் இருக்கும் நம் நண்பர்களுக்கு , நம் பதிவுகளை ஈசி யாக கொண்டு சேர்த்தால் நல்லாருக்கும் தானே ? ஆம் இப்படிப்பட்ட ஒரு நல்ல வசதியை நம் பிளாக்கர் லில் பயன்படுத்த ஒரு கருவியை மட்டும் நிறுவினால் போதும். வாருங்கள் அதை காட்டுகிறேன்.

 முதலில் இங்கு செல்லுங்கள்.   

முகப்பு இப்படி இருக்கும்


இதில் Learn More என்ற இடத்தில் கிளிக் செய்தால் அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 


பின்பு நான் காட்டி உள்ளது போல Free SignUp கிளிக் செய்து உங்கள் மெயில் முகவரியை தாருங்கள். 


இப்பொது உங்கள் மெயிலுக்கு ஒரு லிங்க் மெயில் வந்திருக்கும் , அந்த லிங்க் சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் சென்று உங்களுக்கு பிடித்த பாஸ்வோர்ட் கொடுத்து உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 


இப்போது உங்கள் கணக்கில் இருக்கும் பக்கத்தில் தேவையான மாற்றங்களை செய்து  " code " என்பதை அழுத்தினால் கீழே உங்களுக்கான " code " வரும் . அதை காப்பி செய்துகொள்ளுங்கள். 


இனி கீழ் உள்ளவாறு செய்யுங்கள் :

1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்.
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget
Template  கிளிக் செய்யுங்கள்


3- <data:post.body/> என்ற code  தேடவும்.

பின்பு அதன் கீழே , காப்பி செய்த " code”  இணைக்கவும் .
பின்பு SAVE செய்துவிடவும். 
பின்பு உங்கள் ப்லோக்கரை திறந்தால் உங்கள் புது வசதிக்கான பட்டை வந்திருக்கும்.
இதை கிளிக் செய்தால் இதில் உள்ள வசதிகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும்.

இதில் நெறைய வசதிகள் உள்ளன. எல்லாவரையும் விளக்க முடியாததால் பட்டியளிடுள்ளேன்.
நீங்கள் பயன்படுத்திபார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

( புக்மார்க் வசதி )

( ப்ளாக்கிங் வசதி )

( சோசியல் நெட்வொர்க் வசதி )

( இ-மெயில் வசதி )

( சாட்டிங் வசதி )

இவ்வளவு வசதிகள் நிறைந்த இந்த பட்டையை நீங்களும் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.


பதிவு பிடித்திருந்தால் உங்கள் வோட்டையும் போட்டுவிட்டு செல்லுங்கள். இம்புட்டு இருக்கா.......  இப்பவே கண்ண கட்டுதே .....  


அனைத்து வசதிகளும் ஒரே செல்போனில் -Must See..!

எல்லோரும் ஒருதடவ "ஜோரா "கை தட்டுங்க .....  ஒரு செல்போன் நாம் விரும்பும் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தால் நமக்கு சந்தோசம் தானே ? ? ஆம் நம்மில் பலரும் பலநாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல செல்போன் வந்துவிட்டது.

இந்தியாவில் செல்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள
" சாம்சங் " நிறுவனம் புதிதாக ஒரு மாடல் அறிமுகபடுத்தி உள்ளது. 

அந்த மாடல் பெயர் :  Samsung B-7722இந்த செல்போனில் நாம் விரும்பும் அணைத்து வசதிகளும் உள்ளன. இதில் முக்கியமான , செல்போன் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய வசதியான ஒரே செல்போனில் " 3G + 2G (HSDPA + EDGE) Dual Standby "  வசதியுடன் வந்திருப்பது தான் சிறப்பு .

இன்னும் சில மாதங்களில் " 3G " வசதியை பயன்படுத்த இருக்கும் நமக்கு இந்த வகை செல்போன் ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம் . 
இந்த செல்போனில் உள்ள வசதிகளை அனைவர்க்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் ,

தமிழ் விரும்பிகள் கோப படவேண்டாம்.... ப்ளீஸ் ....

The new Samsung Star Duos is the industry’s first 3G + 2G Dual-Standby Touch phone , best suited for consumers who prefer Full – touch functionality in their phones.

The 3G + 2G (HSDPA + EDGE) Dual Standby expands communication networks by utilizing two SIM cards to expertly manage both work and life tasks in one unit, and allows switching between both without re-powering the handset.

The WAP/MMS/E-mail supported software keeps the user always connected the Touch functionality helps in instant messaging, easy access to mobile applications and business related features. While dedicated widgets seamlessly manage switching between 2 SIM cards, the 3 page extended Menu and Touchwiz 2.0 plus provides intuitive UI for easy navigation.

The Samsung B-7722 has distinct Business Features and tools to maintain a mobile office, Active Sync which updates e-mails from the desktop to the user’s mobile, Phone Book 2000 for organizing contacts, Document viewer handles MS Office, PDF TXT and other files, Multi –language dictionary and an offline mode which allows the user to turn off his/her phone while he/she continues to work on other functions.
The versatile Multimedia experience of GT – B7722 is further accentuated by the SoundAlive feature, 5MP AF Camera with Power LED, FindMusic that tracks down new song titles for download on MP3 and Bluetooth 2.1 with A2DP to enjoy music on wireless headset. It comes with a 250MB Internal memory, expandable upto 16GB.

The phone offers enhanced connectivity to various Social –Networking sites through wi-fi connections, users can upload photos & videos to sites like Facebook, YouTube and Flickr and Multi IM created limitless chat opportunities to Palringo, Gtalk and AOL. The Samsung GT B7722 is priced at Rs. 12300.

நான் வாங்கிவிட்டேன்  அப்போ நீங்க ? ? ?

அது சரி , இது என்னோட பழைய செல்போன் , என்ன விலைக்கு போகும் ? 

கம்ப்யூட்டர் டிப்ஸ் - நானும் ரவுடிதான்... !

வலைப்பூவில் எல்லோரும் கம்ப்யூட்டர் டிப்ஸ் தருகிறார்கள். நானும் என்பங்கிற்கு ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். இது நிறைய பேருக்கு தெரிந்த ஒன்றுதான் , தெரியாதவர்கள் பயன்பெறலாம். 


  விண்டோஸில் குறிப்பிட்ட Folderளில் இருக்கும் அதிகமான பைல்களின் பெயரை மாற்ற     ( Rename ) வேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்கின்றதா?. ஒவ்வொரு பைல்களிலின் மீதும் வலது கிளிக் செய்து பின்னர் Rename ஆப்ஸனை தேர்வு செய்வது நேர விரயமாகும். இதை எவ்வாறு மிக வேகமாக செய்வது என்ற கேள்வி நம்மில் பலருக்கு வரும்.
அதற்கு ஈசியான ஒரு வழி உள்ளது. போல்டர்  திறந்து பெயர் மாற்ற வேண்டிய பைலை வலது கிளிக் செய்து ரீநேம் செய்யுங்கள். அதன் பின்னர் கீபோட்டில் டேப் விசையை அழுத்தியதும் அடுத்த பைலுக்குரிய ரீநேம் ஆப்ஸன் தானகவே தேர்வு செய்யப்படும். பெயரை கொடுத்து மீண்டும் டேப் கீயை அழுத்தி அடுத்த பைலுக்கு செல்லலாம்.

 
அதிகமான பைல்களை ரீநேம் செய்ய விரும்புவர்கள் இந்த முறையைக் கையாண்டால் இன்னும் வேகமாக செயற்படலாம்.
 
 
வீடியோ இணைப்பை பார்க்கவும். 


நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள், கருத்து சொல்லுங்கள் .. ! எல்லாரும் பார்த்துக்குங்க .... நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான் ... ! 

சூப்பர் விளம்பரம் - Must See...!

இன்று நம் டிவி - ல் எத்தனையோ விதமான விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் தான் நம் மனதில் நிற்கின்றன. அப்படி நான், சமிபத்தில் பார்த்த ஒரு விளம்பரம் பற்றி தான் இந்த பதிவு. இந்த விளம்பரம் ஏர்செல் நிறுவனம் சமிபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் Aircel - Pocket Apps Store பற்றிய விளம்பரம் தான் அது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா ? நாம் அந்த காலத்தில் ஒருவருக்கு போன் செய்தால் " ட்ரிங் " " ட்ரிங் " என்ற ஓசை தான் கேட்கும். அதில் வந்த மாற்றம் இன்று " மொபைல் அப்ளிகேசன் " என்ற பெயரில் நம் வாழ்க்கை முறையை நெறையவே மாற்றி விட்டது. அதுபோலதான் Aircel - Pocket Apps Store நமக்கு ஆயிரக்கணக்கான  " மொபைல் அப்ளிகேசன் " களை வழங்குகிறது . அது பற்றிய விளம்பரம் தான் இங்கு நீங்கள் பார்ப்பது ......

இந்த விளம்பரத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு கூட புரியும் வகையில் , நம் அனைவருக்கும் தேவைப்படும் முக்கியமான பல நல்ல " மொபைல் அப்ளிகேசன் " களை நமக்கு புரியும் படி சொல்லி இருப்பது சிறப்பு. 

உங்கள் ஏர்செல் போனில் , நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி பார்க்க வேண்டுமா ?  இந்த வழிமுறையை பின்பற்றுங்கள் ...!


To enjoy a million possibilities with Aircel PocketApps, follow 3 easy steps:
 • SMS “PA” to 52777 from your mobile phone to receive an SMS with a link.
 • Clicking on this link will direct you to the PocketApps page where you can browse thousands of apps by categories, new apps and top apps. Click on an app to get more information
 • If you are a subscribed user you can download the app. However, if you’re not a subscribed user you will be redirected to the Subscription page to choose a plan according to your needs.
Currently, there are 3 subscription plans to choose from:
 • Free Subscription: There are no charges for this subscription and it is valid for a single day. You can avail this plan for maximum 3 days over a period of 1 year .
 • Rs.2 Daily Plan: This plan gives you an access to PocketApps™ for a period of 1 day ending at 00:00hrs. This plan is on auto renewal.
 • Rs.7 Weekly Plan: This plan gives you an access to PocketApps™ for a period of 7 days ending at 00:00hrs of the 7th day. This plan is on auto renewal.
 • After choosing a plan, you can simply click on the download button.
பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
நம்ம விளம்பரம் எப்படி இருக்கு ? 

3G - விரைவில் வருகிறது. .!


இந்தியா தொலை தொடர்புத்துறையில் மிகப்பெரிய  முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் வரப்போகும் 3G பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை இங்கு பார்போம்.அதற்கு முன்னால் இந்தியாவில் உள்ள தொலை தொடர்பு வட்டங்கள் மற்றும் இன்றைய சூழ்நிலைகள் , இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் பற்றியும்,  இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன். 


 •  இந்தியாவில் உள்ள தொலை தொடர்பு வட்டங்கள்  ( Circles in a Glance )

 • இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் ( Services Providers in India ) • இன்றைய சூழ்நிலைகள் ( Present Scenario - Indian Telecom ) 
                • தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ( Technology Evolution )
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது. 

2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

                     
  
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
  
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை  (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 3G தொழில்நுட்பத்தின் சிறப்புகள் ( Advantages of 3G டெக்னாலஜி ) 
 1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
 2.  குரல் (Voice) மற்றும் அதி வேக தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
 3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)  Includes mobile office services such as virtual banking and online-billing, video conferencing, online entertainment and access to the Internet.

3G தொழில்நுட்பத்தின் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை பெறப்போகிறோம், அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் கொடுத்துள்ளேன்.

1. Video Calling சேவை :  

Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும்

2. அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband):

3G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இதர வசதிகள் :

1. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.


2. வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.

3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் 3G தொழில்நுட்பம்
மேலை நாடுகளில் பயன்படுத்திவரும் இந்த வசதியை நாம் விரைவில் இந்தியாவிலும் பயன்படுத்த இருக்கிறோம்.

இந்தியாவில் May-19. 2010 முடிவடைந்த ஏலத்தில், தொலை தொடர்புத்துறையில் முன்னணியில் இருக்கும்  7 நிறுவனங்கள் மிக அதிக விலையாக  Rs 67,719 crore கொடுத்து உரிமையை பெற்றுள்ளன. 
இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் உள்ள ஏர்செல், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ், ஐடியா , டாட்டா , எஸ் டெல் ஆகிய செல்பேசி நிறுவனங்கள் 3G சேவையை வழங்க போகின்றன . 
நம்ம சைனா செட்ல இதெல்லாம் வருமான்னு தெரியலையே ?