தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!

 " தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ...! " - இந்த டயலாக்க நாம் தினமும் மினிமம் 5 பேர் கிட்டயாவது சொல்லுவோம் . யார் அந்த 5 பேர்ன்ன " சார் .. உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா ?  பர்சனல் லோன் வேணுமா ?  மிக்சி வேணுமா ? கிரைண்டர் வேணுமா ? அப்படின்னு நமக்கு போன் செய்து கண்ட கண்ட நேரத்துல கடுப்படிப்பாங்க ....! நம்ம செல் நம்பர் இவங்களுக்கு எப்படி கெடச்சதுன்னு யோசிக்கும் போதே அடுத்த கால் வந்திடும் , நீங்களும் இப்படி பல நாட்கள் கஷ்டப் பட்டுறிப்பீங்க தானே ...?   தொடர்ந்து படிங்க ... நமக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி காத்திக்கிட்டு இருக்கு ... !

நமக்கு போன் செயும் அவங்களை " Telemarketers " அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களோட வேலையே எல்லோருக்கும் போன் செய்து குறிப்பிட்ட கம்பனிகளின் பொருட்களையோ , வசதிகளையோ அல்லது லோன் , பேங்க் அக்கௌன்ட் ஒபெனிங் , இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றை விற்பதுதான் நோக்கம். டெலி மார்கெட்டிங் என்பது நமக்கு கஷ்டத்தை கொடுக்காத வரை நல்லதுதான் , ஆனால் இன்று அந்த டெலி மார்கெட்டிங் நமக்கு துன்பத்தை தருவதுதான் வேதனையான விசயம். ஏன் ? சமிபத்தில் நம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவருக்கே இந்த மாதிரி " கால் " வந்து பெரிய பிரச்சனை உருவானது உங்களுக்கு நினைவிருக்கலாம். 


சரி , விசயத்துக்கு வருவோம், இந்த மாதிரி டெலி மார்கெட்டிங் அழைப்புகளுக்கு இந்தியாவின் ( TRAI ) டெலிகாம் ரேகுலார்ட்டி அதாரிட்டி போர்டு அப் இந்தியா பலமுறை , பலவகையான கட்டுபாடுகளை விதித்த போதும் , யாரும் அதி சரிவர நடைமுறைபடுத்த வில்லை . எனவே TRAI  இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளிட்டுள்ளது . அந்த அறிவிப்பின் படி இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனி நபருக்கும் , எந்த ஒரு கம்பனியும் டெலி மார்கெட்டிங் செய்யும் பொது அந்த அழைப்பு " 70 xxx-xxxxx " என்ற எண்ணில் இருந்து தான் செய்ய வேண்டும் , மேலும் அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனக்களும் " 70 " என்ற துவக்க எண்ணை டெலி மார்கெட்டிங் கம்பனிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த ஒரு டெலி மார்கெட்டிங் அழைப்பு அல்லது எஸ் எம் எஸ் களை காலை 9  மணி முதல் , மாலை  9 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 
 
 
இதன் மூலம் நமக்கு வரும் டெலி மார்கெட்டிங் அழைப்புகளை மிக எளிதில் நாம் கண்டுகொள்ளலாம் . நமக்கு நேரமும், சூழ்நிலையும் சரியாக இருந்தால் அந்த அழைப்பை ஏற்கலாம் இல்லாவிட்டால் விட்டு விடலாம். இந்த புதிய உத்தரவுகள் அனைத்தும் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்,  இந்த உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனக்களுக்கு Rs.25,000  முதல் Rs. 2,50,000  வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் TRAI அறிவித்துள்ளது. 
 
- இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நம் விருப்பம் போல இந்த அழைப்புகளை கையாளலாம். நன்றி ... "TRAI "..
 


"கிளைமாக்ஸ்  சீன்  "


மழை எவ்வளவு அழகு ... ?

 

டாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அருமையான சாதனம்..!

நண்பர்களே..! நலமா..?  இன்றைய பதிவில் டாட்டா இண்டிகாம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு அருமையான சாதனம் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்.

இன்று நாம் சொந்தமாக இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு "பிராண்ட் பேண்ட்" அல்லது "டேட்டா கார்டு " வசதியை பயன் படுத்துவோம். இந்த இரண்டு வகையிலும் சர்விஸ் தர நிறைய கம்பனிகள் உள்ளன.  இதில் "டேட்டா கார்டு " வசதி நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது.
உதாரணமாக , 
 1. லேப்டாப் மற்றும் கம்ப்யுட்டர் இரண்டிலும் பயன்படுத்தலாம். 
 2. எங்கு வேண்டுமானாலும் எடுத்துசெல்லலாம்.
 3. பயன்படுத்த மிகவும் எளிது. 
 4. வேகம் 3.1 Mbps ( CDMA ) , 7.2 Mbps ( 3G) ஆகிய அளவுகளில் கிடைக்கும்.
 5. ஸ்டோரேஜ் வசதியும் உண்டு. 
இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த "டேட்டா கார்டு "  இன்று பல வடிவங்களில், பல வசதிகளுடன் கிடைகிறது. முன்னணியில் இருக்கும் டாட்டா இண்டிகாம் ஒரு புதிய வசதியுடன் கூடிய ஒரு "டேட்டா கார்டு " அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த "டேட்டா கார்டு "  பெயர் " Tata Photon Plus-Music " என்பதாகும். இது CDMA  தொழில்நுட்பத்தில் Postpaid  மற்றும் Prepaid  பிளான் களில் கிடைகிறது.

இந்த " Tata Photon Plus-Music " சிறப்புகள்:
 
 1. வேகம் 3.1 Mbps  வரை பயன்படுத்தலாம். 
 2. 2 GB micro-SD card - போட்டுகொள்ளலாம். 
 3. MP3 Player இணைந்துள்ளது. 
 4. அணைத்து வகையான Songs Files இதில்  கேட்டு  மகிழலாம் .
 5. FM Radio இணைந்துள்ளது. 
 6. FM Radio பாடல்களை பதிவும் செய்து கொள்ளலாம்.
 7. live TV  இணைந்துள்ளது.
 8. 70 க்கும் மேற்பட்ட சேனல்களை இன்டர்நெட் வழியாக பார்த்து மகிழலாம்.
 9. விலை. Rs.3199. மட்டுமே. ( மாத வாடகை தனி ) 

இன்டர்நெட் பயன்படுத்த வந்த இந்த "டேட்டா கார்டு " கள் இன்று பல பரினாமங்களை பெற்றுள்ளன. அதன் மூலம், பயன்படுத்தும் நமக்கும் பற்பல நன்மைகள் கிடைத்துவருகின்றன. இந்த வகையான "டேட்டா கார்டு " மூலம் இனி நாம், இன்டர்நெட்டின் அடுத்த பரிணாமத்திற்கும் செல்லப்போகிறோம். நன்றி...! "கிளைமாக்ஸ் சீன்"  
 மியூசிக் நல்லாருக்கா..? ஏதாவது சினிமா சான்சு இருந்த சொல்லுங்க....


மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி...!

நண்பர்களே ..! தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்திருப்பீர்கள்... OK..OK..!  இனி பொங்கல் வரை லீவு கிடைக்காது..? வாங்க நம்ம வேலையை பார்ப்போம் ...!

நாம் பயன்படுத்தும் செல்போனில் நெறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி " Block list Calls " மற்றும் " Block list SMS"  என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி அப்ளிகேசன் மூலமாக தான் பயன் படுத்த முடியும் .

ஆனால் இப்போது புதிதாக " Killer Mobile  சாப்ட்வேர் " மூலமாக இந்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் " Blackballer " என்பதாகும்.

 
இந்த அப்ளிகேசனின் சிறப்புகள்
 • நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
 • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, கால் வராமல் தடுக்கலாம்.
 • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, எஸ் எம் எஸ் வராமல் தடுக்கலாம்.
 • குருப் உருவாக்கி,தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
 • ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம்.
 • பாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம்.
 • அணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .( Nokia,Windows Mobile ,Android and Blackberry )
இதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு வசதி ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் வசதியாகும். நாம் எப்போது வேண்டுமானாலும் நமது நாட்டின் ஸ்பாம் நம்பர் களை அப்டேட்ஸ் செய்து நமது மொபைலுக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.

இந்த அப்ளிகேசன் " Lite version " மற்றும் " Paid version " என்ற இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த அப்ளிகேஷனை இங்கு சென்று டவுன்லோட் செய்யவும்.


"கிளைமாக்ஸ் சீன் "
ஹலோ... துபாயா ....?

தமிழகத்தின் முதல் 3G சேவையை வழங்குகிறது - ஏர்செல் .. !

தமிழகத்தின் No.1 செல்போன் சேவை நிறுவனமான ஏர்செல் சத்தமே இல்லாமல் தனது 3G சேவையை சென்னையில் நேற்று துவக்கியுள்ளது. இந்திய தொலை தொடர்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்த போகும் 3G தொழில் நுட்ப வசதியை தர , இந்தியாவில் இத்துறையில் முன்னணியில் உள்ள 7 கம்பனிகள் தயாராகி வருவது உங்களுக்கு தெரிந்ததே .
இந்த வசதியின் நன்மைகளை உணர்ந்தவர்கள் 3G எப்போ வரும் ? எப்போ வரும் ? என்று ஏங்கி கொண்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் , வரும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் அனைவரும் 3G வசதியுடன் கொண்டாடத் தயாராகுங்கள் என்று டாட்டா டோகோமோ தனது விளம்பரத்தை கடந்த மாதமே துவக்கியது. ஆனால் தமிழகத்தில் டோகோமொவிற்கு லைசென்சு இல்லாத காரணத்தால் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை .

இந்நிலையில் , ஏர்செல் நேற்று தனது "பிராண்ட் அம்பாசிடர் " நடிகர் சூர்யாவை வைத்து தனது 3G சேவையை சென்னை யில் நேற்று அறிமுகப்படுத்தியது. சென்னையின் பிரபலமான இடங்களான (Atrium2, Spencers Plaza; Fun City, Express Avenue; Atrium Citi Centre & Aircel Store PH road ) போன்ற இடங்களில் நேற்று முதல் ஏர்செல்லின் 3G சிக்னல் கிடைத்தன.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஏர்செல்  "பிராண்ட் அம்பாசிடர் " நடிகர் சூர்யா, CEO Mr.குருதீப் சிங், Mr. KVP பாஸ்கரன் , Operations Director, South. மேலும் பலர் கலந்து கொண்டனர் . பற்பல புதிய வசதிகளை தமிழகத்திற்கு முதலில் அறிமுகப்படுத்திவரும் ஏர்செல், இந்த 3G வசதியையும் முதலில் அறிமுகப்படுத்தி தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. 

தமிழகத்தில் 3G வசதியை வழங்க ஏர்செல், ஏர்டெல்,வோடபோன் ஆகிய 3 தனியார் சேவை நிறுவனக்களுக்கும் , அரசுத்துதுறை நிறுவனமான  BSNL க்கும்  அனுமதி  உள்ளது. இதில் ஏர்டெல் மற்றும் வோடபோன் வரும் ஜனவரி மாதத்தில் இந்த சேவையை வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் ஏர்செல்லின் இந்த துவக்கம் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சந்தோசமான தீபாவளி இனிப்பாக அமைந்துள்ளது.
" கிளைமாக்ஸ் சீன் "


இவர்தான் அடுத்த பதிவுல உங்களுக்கு 3G பத்தி சொல்லிகொடுக்க போகும் ஆபிசர் ..!


உலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது....!இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே  இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.

இன்று உலகெங்கும் இரண்டு சிம்கார்டு  போடும் செல்போன்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த வகையான செல்போன்கள் கணிசமாக பெருகி வருகின்றன . நோக்கியா , சாம்சங் , எல்.ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இந்த வகையான செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் OTECH என்ற கம்பெனி புதிதாக 4 (  நான்கு ) சிம்கார்டுகளை போட்டு பயன்படுத்திகொள்ளும் வகையில் ஒரு செல்போனை வடிவமைத்துள்ளனர். என்ன ? நம்பமுடியவில்லையா ....? உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 (  நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் " Quad SIM Mobile Phone " ஆகும். 

இந்த போனின் சிறப்புகள்

 • 2.4-inch touchscreen டிஸ்ப்ளே
 • 12.1-megapixel கேமரா
 • Supports PAL/NTSC/SECAM TV tuner
 • FM Radio
 • Bluetooth
 • Four SIM compatible
 • A full QWERTY keypad

 • GPRS for Internet connectivity

இந்த வகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று நெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல்  கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம் இந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... !" கிளைமாக்ஸ் சீன்  "


இதுதான் என்னோட கேமரா மொபைல் .. !

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!


சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான்.. ! அதுவும் உண்பதற்கு வழி இல்லாமல் பட்டினியில் வாடும் மனிதர்களுக்கு உணவு கொடுத்து சந்தோசப்படுத்தி பார்ப்பது, தெய்வத்திற்கு செய்யும் தொண்டிற்கு இணையானது ...! அப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பற்றியது தான் இந்த பதிவு ... ! 

அந்த மனிதர்  CNN  உலக புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த மனிதராக டாப் 10  வரிசையில் இடம்பெறுள்ளார். அவர் ஒரு தமிழர். அவரைத்  தமிழர் என்பதை விட அதுக்கும்  மேல..... 

ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார்.

இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது போட்டிக்கு இவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி.

பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார். அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.

இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்.சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.
 இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன். 


முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி.


பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன். 


நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.


இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.


அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.


பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.


இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன்.


நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.


இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க. உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.


இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க  இங்கு சென்று வாக்களிக்கலாம். 

முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும். பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.


நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்...


மொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ளன செல்போன் கம்பனிகள்


நண்பர்களே,கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் எந்த பதிவும் போட முடியவில்லை. நேத்து தான் இந்தியா திரும்பினேன். இனி பதிவு தினமும் வரும். 

செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதியை  நமது TRAI அடுத்த மாதம் துவங்கபோவதாக அறிவித்துள்ளது.  பல மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த MNP ( மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ) முறை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது  . இந்த வசதியின் மூலம் நமக்கு பிடிக்காத நெட்வொர்க்கில் இருந்து புது நெட்வொர்க்கிற்கு அதே பழைய எண்ணுடனே மாறிக்கொள்ளலாம்.

மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


மேலும் இந்த வசதி பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது Aircel, Airtel, Vodafone & BSNL உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து செல்போன் கம்பனிகளும் இந்த வசதியை தர தயாராகி விட்டன .


செல்போன் கம்பனிகள் அறிவித்துள்ள தேதி விபரங்கள் :


Nov 8th -: Bharti Airtel, Videocon, Loop Mobile

Nov 11th –: Aircel, Uninor, Reliance GSM ( Rcom) and Tata Docomo

Nov 14th-: BSNL ,MTS, Idea Cellular and  BSNL CDMA

Nov 17th-: Vodafone Essar, Reliance Mobile (CDMA) and Tata indicom.

இந்த வசதி வந்துவிட்டால் செல்போன் கட்டணங்கள் மற்றும் அன்றி அவர்களின் தரமான சேவைகளும் நமக்கு கிடைக்கும்.

3G வசதியை வரும் தீபாவளிக்கு தரப்போவதாக டாட்டா -டோகோமோவும் ,டிசம்பரில் தரப்போவதாக ஏர்டேல்லும் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில் MNPவசதியும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்சியை தரும் செய்தியாகும்.

"கிளைமாக்ஸ் சீன் "இனி நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்கலாம்..!