1.6.11

ரஜினிகாந்த் பற்றி புது சர்ச்சை - விளக்கம் தாருங்கள் ..!


நண்பர்களே , இந்த பதிவை வெளிடும் முன் பலமுறை யோசித்துவிட்டு ஒரு குழப்பமான மன நிலையில்   தான் வெளியிடுகிறேன். சமிபத்தில் என் மெயில் க்கு  வந்த ஒரு செய்தியை அப்படியே தந்துள்ளேன் .

படித்துப்பாருங்கள், இது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி .
( இந்த மெயில் உங்களுக்கும் கூட வந்திருக்கலாம் ) .


அந்த செய்தி : " மூடர்களே ..... சமீபத்தில் செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு.

இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!!

யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.

உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை,

அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன.

உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.

இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம். யோசியுங்கள்........

நாட்டிலும், வீட்டிலும் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ..... அதை போய்  கவனியுங்கள்....... இன்னமும் சினிமா மூடர்களாக இருக்காதீர்கள்  "      - இப்படி தான் வந்தது அந்த மெயில். 



ரஜினி மேல் என்ன கோவம் ? ஏன் இப்படி மிக காட்டமான வரிகள் ..? எனக்கு  புரிய வில்லை ..!  அவர் ஒரு நல்ல நடிகர் .. எல்லோருக்கும் பிடித்தமானவர் .. ஆன்மிகவாதி.. பண்பாளர் ... இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்காக நாம் வருத்தப்படுவதும் , அவர் நல பெற பிராத்தனைகள் செய்வதும் என்ன குற்றம் .. ? 
   
இது ஒரு பக்கம் இருக்கட்டும் , அந்த மெயில் குறிப்பிட்டுள்ள ஒரு வரிகளில் கூட பொய் இல்லை என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே ....? அவர் நம்மை பொறுத்தவரை  ஒரு சினிமா நடிகர் மட்டுமே ..! அவருக்காக நாம் வேண்டுதல் இருப்பது, மண்சோறு சாப்பிடுவது, பிராணிகளை உயிர் சேதம் இடுவது, உண்ணா விரதம் இருப்பது ...   என்பதில்லாம் எந்த வகையில் சரி .. ? ? 
இப்படி இரண்டு வேறுபட்ட கருத்துகள் என் மனதில் ஓடுகின்றன. ஒரு அடிப்படை ரஜினி ரசிகனான எனக்கு எதை இப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை .

நண்பர்களே உங்கள் கருத்துகள் மூலம் தெளிவு  படுத்துங்கள்...   !  


ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முன்  பேசிவிட்டு சென்றதாக வெளியிடப்பட்டுள்ள  ஆடியோவை இங்கு சென்று கேளுங்கள்..

29 comments:

  1. thiru eerodu thanga thuai awargalee thangalin inda santhegam niyayamanethe

    ellavatrirkum appaal manithaneyam enbathu namathu manathirkku pidithamaanavargalin meethu athiga anbu seluthuvathu.avvalavee.

    ivvalavu naatkalaga ungalin kavalai maranthu sirikka vaikka,ungalai herovaaga ennikkolla ungalin maru bimbamaga oru rajinikanth devaippattar,avarukku udalnilai sariyillatha pothu varunthuvathu iyalbe,udaaranathirkkaga,ungal veettu naai kutty allathu karavai maadu sugamillai endral ungal manam thudikkume athaippondra pasame itu,

    ungalin pathivukal anaithum,athavathu ungalukku vantha mail vishayam anaithum oru islamiya website allathu islamiya theeviravatham kondavarin varikal athilirunthu kalavaadappattavaikal,

    avatril oru idathil kooda srilankavil kollappattavarkal pattri kurippidavillaye kavanikkavum.

    muzhukka muzhukka yaar antha rajini endru keetkum kurippitta antha koottam..engeyo ulla palasteenathirkum,yaar endra vadayee theriyatha serbiyavirkum,thadam theriyatha kosovovirkum thudippatheen..?sinthikka.

    athilum kooda niraveri ondrai kavanikka vendum.palasteenam,kosovo,serbia virkaha thudikkum ivarkal ethiyoppiya,somalia islamiyarkalukka thudippathillai,yeenendral avarkal karumai niram kondavarkallaga kooda irukkalam.

    modikkum rajinikkum sindu mudivathu mottai thalaikum muzhangalukkum mudivathaippondrathu.

    ellavattrikkum meel saga manithan,panbalan endroru ennamirunthal pothum..

    nallathoru manithan meendu vara prarthippom avar avar vazhiyil.

    ReplyDelete
  2. ரஜினியை எதிர்ப்பதே பிழைப்பாக வைத்திருக்கும் ஒரு கிறுக்கு கும்பலும் இருக்கிறது...அவனுக மெயிலை நம்பி..அதை பப்ளிஷ் செஞ்சிருக்கீங்க்ஜளே நண்பா..இவனுக எப்பவும் இப்படித்தான்..ரஜினி படம் வரும்போதெல்லாம் கிண்டல் செய்வானுக...இப்ப இந்த சீசன்...

    ReplyDelete
  3. கடைசி வரி சரியில்லை (கடைசியாக)நீக்கவும்

    ReplyDelete
  4. ஆர்.கே.சதீஷ்குமார்,
    சகுனமே சரி இல்லையே. பார்ப்போம். 10.23 க்குள்ள நீக்கபட்டா இட்ஸ் ஓகே.

    ReplyDelete
  5. நண்பரே இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், இது எதையும் ரஜினி செய்ய சொல்லவில்லை, அவரின் மேல் அன்பு கொண்ட ரசிகர்கள் செய்வது, இதற்கு ரஜினி எந்த வகையில் பொறுப்பேற்க முடியும், மற்றபடி ஈழத்தில் இறந்தவர்கள், அண்டை வீட்டு காரர்களிடம் நலம் விசாரிக்காதவர்கள் அவர்களைதான் கேட்க வேண்டும், ஏன் இந்த மெயில் எழுதியர் கூட அப்படி பட்டவராக இருக்க சான்ஸ் உண்டு, மற்றபடி இது முழுக்க முழுக்க ரஜினியை பிடிக்காதவர்கள் செய்கிற அற்பமான காரியம், இதை தூக்கிவிட்டு வேலையை பாருங்கள்

    ReplyDelete
  6. சதிஸ் நீங்கள் சொன்ன வார்த்தை நீக்கி விட்டேன்.

    ReplyDelete
  7. இரவு வானம், சித்தூர்.எஸ்.முருகேசன்,"என் ராஜபாட்டை"- ராஜா, சசி குமார் - உங்கள் கருத்துகளுக்கு நன்றி ...

    ReplyDelete
  8. ரஜினி எப்பவுமே டாப்புதான்.....
    விடும்யா ஒவ்வொருவருக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கும்!

    ReplyDelete
  9. விக்கி உலகம் சொன்ன சரியாதான் இருக்கும்
    (அவர்தான் உள்ளது உள்ளபடி உரைக்கும் ஒரு கண்ணாடி மனசுக்காரன் )

    ReplyDelete
  10. ஏங்க மாலதி ....

    வெறும் mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm மட்டும் போட்டால் என்ன அர்த்தம் ..?

    ReplyDelete
  11. எந்திரன் படத்தை எவ்வளவு நாளில் எவ்வளவு கொடுத்து நீங்கள் பார்த்தீர்கள்..?
    அனைத்து ஆட்டமும் ஆடிய ரஜினி.. வயதானதும் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்..அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. பணம்,புகழ் தான் எல்லாத்துக்கும் காரணம்.."சினிமா மூடர்கள்" -ஐ மாற்ற முடியாது.

    ReplyDelete
  12. //ரஜினியை எதிர்ப்பதே பிழைப்பாக வைத்திருக்கும் ஒரு கிறுக்கு கும்பலும் இருக்கிறது...அவனுக மெயிலை நம்பி..அதை பப்ளிஷ் செஞ்சிருக்கீங்க்ஜளே நண்பா..இவனுக எப்பவும் இப்படித்தான்..ரஜினி படம் வரும்போதெல்லாம் கிண்டல் செய்வானுக...இப்ப இந்த சீசன்...//
    @satish kumar
    poi pulla kutikala padikavai.. rajni patu padama...

    ReplyDelete
  13. @satish kumar unnai mathari sombu thukikal irukum varai nadu thirunthathu.. ithula kovam vera...

    ReplyDelete
  14. 100% true...He is karnataka d.g

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி திரு.குணசேகரன்

    ReplyDelete
  16. சிந்திக்க வேண்டிய மெயில்! சிந்திக்க வைத்த பதிவு! நான் வேறென்ன சொல்ல. நிறைய சொல்லத்தான் நினைக்கிறேன். மனதில் பட்டதைச் சொன்னால்.. நாகரிகமில்லா வார்த்தைகளால் வசைப்பாடவென்றே ஒரு கூட்டம் தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. தெரிந்தும் இது தேவையில்லா வேலை! சரிதானே நண்பா!

    ReplyDelete
  17. Submit your blog RSS once in http://zeole.com/chennai and get more visitors from Chennai. This RSS submission, would automatically publish a preview of your latest post in zeole.com with a link back to your blog. Are you interested?

    ReplyDelete
  18. சரியாக சொன்னீர்கள் வசந்தவாசல் அ.சலீம்பாஷா...!நன்றி...

    ReplyDelete
  19. இதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்பட்டமான உண்மை.நிட்ச்சயமான மாற்றுக் கருத்து இல்லை.எதற்க்காக இந்த நடிகர்களுக்கு இப்படி கூஜா தூக்குகிறார்கள்?என்று தெரியவில்லை.முட்டாள் ரசிகர்கள்.தன்னுடைய குடும்பம்,குழந்தை,மனைவி,மக்கள் என்ற பொறுப்பு இருந்தால்.....இந்த மாதிரி சொம்பு தூக்கும் வேலை எல்லாம் செய்ய மாட்டார்கள்.அவரை ஆதரிப்பத்ட்க்கென்றே ஒரு ஜால்ரா கூட்டம்.இந்த நடிகரால் இந்த ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு பயன் உண்டா?ரசிகனால்தான் பயன் உண்டே தவிர ,வேறு என்ன?நம்முடைய பணத்தையும் கொடுத்து நம்முடைய நேரத்தையும் கெடுத்து இந்த நடிகரின் படத்தையும் பார்த்து தலை வலி வந்ததுதான் மிச்சம்.அனுதாபப்படுங்கள்.அதற்காக வேப்பிலை ஆடை அணிந்தும்,மண்சோறு தின்றும் கேவலப் படாதீர்கள்.இந்தக் காட்சியைப் பார்த்து சிரித்தவர்கள் பல பேர்,போங்கடா.....போய் உங்க குடும்பத்த பாருங்கடா............

    ReplyDelete
  20. எல்லாம் சரிதாங்ணா! அந்த லெட்டர்ல‌ ஒரு வார்த்தைகூடத் தப்பு இல்லே. ஆனா, ஒண்ணுதான் இடிக்குது. ரஜினிக்காகக் கவலைப்பட்டவங்க யாருமே ஈழத் தமிழர்களுக்காகவோ, அவர் சொல்ற குப்பன் சுப்பன்களுக்காகவோ கவலைப்பட்டிருக்க மாட்டாங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்? அவ்வளவு ஏன்... நான் உடம்பு சரியில்லாம கிடந்தப்பக் கூட எனக்கு முன்பின் தெரியாத 70, 80 பேர் என் பிளாக்ல எனக்காகப் பிரார்த்தனை பண்ணிக்கிட்டாங்க. அதனாலதான் நான் பொழைச்சு வந்தேன்னு மனசார நம்பறேன். எம்.ஜி.ஆர். உடல் நிலை மோசமா கிடந்தப்பக்கூட ஊர் ஊரா தெருத் தெருவா, 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு...' பாடலைப் போட்டுப் போட்டு, மனம் உருகினாங்களே ஜனங்க! அப்போ ஏன் இவர் மாதிரி ஆளுங்க யாரும் கேள்வி எழுப்பலை? ரஜினி ஒரு நல்ல மனுஷர்! தேசம் அறிஞ்ச, ஏன் உலகம் அறிஞ்ச நல்ல மனுஷர். அவருக்காகப் பிரார்த்தனை பண்றதுல தப்பு இல்லே! ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ அப்பாவிங்க மனம் உருகி தன் உயிரையே தியாகம் செஞ்சிருக்காங்க. அதனால ஏதாவது பலன் கிடைச்சுதா? மேடையில வீறாப்பா பேசுறவங்க யாராவது உசிரை விட்டிருக்காங்களா? எல்லாம் வெறும் வேஷம்! வாய்ச் சவடால்! அப்படியிருக்கிறப்போ, ரஜினி என்கிற நல்ல மனுஷனுக்காக வெறுமே பிரார்த்தனை பண்ணிக்கிறதுல‌‌ எந்தத் தப்பும் இல்லே!

    ReplyDelete
  21. கிருபாநந்தினி, உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ? நலமுடன் வந்து விட்டீர்கள் என் நினைக்கிறன், உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி ....

    ReplyDelete
  22. நாட்டில் தண்ணீர் ,கல்வி ,விவசாயம் ,மின்சாரம் ,வேலை -தற்பொழுது முக்கியமான பிரச்சனையாக தமிழ் மக்களாகிய நமக்கு உள்ளது . திருவாளர் ரஜினிக்கு ஒரு படத்திற்கு இருபது கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் , இவர் நினைத்து இருந்தால் குறைந்தது கல்வி ,வேலை ஆகிய இரு துறைகளில் மக்களுக்கு நல்ல பனி செய்து இருக்க முடியவில்லை. ஆனால் எந்த பிரச்னையும் வேண்டாம் ,பாமர தமிழ் ரசிகரின் எதுவும் எதிர்பர்க்காத அன்பு மட்டும் போதும் , அவர்கள் எஹுவும் கேட்க வில்லையே எப்படி செய்யவேண்டும் . அடுத்த படத்தில் எப்படி பணம் பார்ப்பது என்ற நோக்கத்தில் வியாபாரத்தில் இருந்துவிட்டார். நல்ல மனிதர் , மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் , வியாபாரி நாட்டில் தண்ணீர் ,கல்வி ,விவசாயம் ,மின்சாரம் ,வேலை -தற்பொழுது முக்கியமான பிரச்சனையாக தமிழ் மக்களாகிய நமக்கு உள்ளது . திருவாளர் ரஜினிக்கு ஒரு படத்திற்கு இருபது கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் , இவர் நினைத்து இருந்தால் குறைந்தது கல்வி ,வேலை ஆகிய இரு துறைகளில் மக்களுக்கு நல்ல பனி செய்து இருக்க முடியவில்லை. ஆனால் எந்த பிரச்னையும் வேண்டாம் ,பாமர தமிழ் ரசிகரின் எதுவும் எதிர்பர்க்காத அன்பு மட்டும் போதும் , அவர்கள் எஹுவும் கேட்க வில்லையே எப்படி செய்யவேண்டும் . அடுத்த படத்தில் எப்படி பணம் பார்ப்பது என்ற நோக்கத்தில் வியாபாரத்தில் இருந்துவிட்டார். நல்ல மனிதர் , மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் , வியாபாரி - என்னை பொருத்த வரை அவரும் நம்மளை போன்ற நல்ல மனிதர் / அவருடைய தொழில் நடிகர் -நாம் விவசாயி -கதிரேசன்- ஆக்ஸ்போர்ட்

    ReplyDelete
  23. கண்மூடி தனமாக வெறுக்காமல் சற்று யோசிக்க செய்தது தான் அந்த மெயிலின் நோக்கம். எனவே நோக்கம் நிறைவேரியதால் அவர்களின் வாதம் சரியே

    ReplyDelete
  24. பிடிச்சிருக்கு! எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு! மெயிலுக்கு பதிவு போட்டதைவிட... அனைத்து பின்னூட்டத்துக்கும் பதில் போட்டது ரொம்பவே பிடிச்சிருக்கு!

    ReplyDelete

நண்பர்களே,உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும், இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

Related Posts Plugin for WordPress, Blogger...